Monday, July 04, 2016

சாய் பல்லவி சாயுமா சாயாதா?

1

தலைவரே! மாசாமாசம் கோடிக்க\ணக்கான ரூபாய் லாபம் தரும்  டாஸ்மாக் தொழிலை எப்டி நிறுத்த முடியும்?

சொல்வதை செய்ய மாட்டோம்,செய்வதை சொல்ல மாட்டோம்

================


2  

தலைவரே! நம்ம கட்சி நிறம் என்ன?


 கறுப்பும்  சிவப்பும்

 நம்ம கட்சியோட மானம் கப்பல்/கட்டில்  ஏறுனது?

 கருப்பனும் , ரோஸ் மேரியும்


===========தலைவரே! உங்க கட்சி எக்ஸ் மினிஸ்டர் வீடியோ ல செம நடிப்பாமே?பார்த்தீங்களா?


ம், எங்கே அடிமடிலயே கை வெச்சுடுவானுங்களோ பயமா இருக்கு

=============


4   

இன்னும் பத்து வருஷம் ஆனாலும் டவுன்ஹால் டெவலப் ஆகாது.


எப்டிம்மா ஆகும்? வில்லேஜ் ஹால்னா காத்தோட்டமா இயற்கை எழிலோட இருக்கும்


=============

5 உடன் பிறப்பே! பார்த்தாயா வீடியோவை? இப்போது புரிந்ததா? நாங்கள் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்


============


6   


திருப்புமுனை மாநாடு  பற்றி என்ன நினைக்கறீங்க?\

 அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன், லேட்டஸ்ட் ட்ரெண்ட்டுக்கு வாங்க. திருப்பத்தூர் திருப்பம்,அதுவே நம் விருப்பம்


================


7  தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தா பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்குமா?

தம்பி. நெட்டைப்பாரு, பிட்டைப்பாரு. 75% லேடீசுக்கே முன்னுரிமை


==============


8  எத்தனையோ நல்ல நாள் இருக்கும்போது இன்னைக்கு ஏன் வீடியோவை ரிலீஸ் செஞ்சீங்க?

 இன்னைக்கு அட்சயத்ரிதியை.இன்னைக்கு ரிலீஸ் பண்ணா வருசம் பூரா இதே போல் ம்ம்ம்


================


9  நம்மைப்பற்றிய கிசுகிசுக்கள்

உயிர் பெறின்
எத்துணை நலமாய் இருக்கும்.

உன் துணை , என் துணை எத் துணையும் நலமாய் இராது. சண்டை தான்


================

10


 நம்ம கட்சியோட வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கா?

அதுவும் சரி, வீடியோவும் சரி மங்கலாத்தான் இருக்கு தலைவரே


==============


11 படத்துல ஹீரோக்கு டபுள் ரோல்,  சின்ன கருப்பன், பெரிய கருப்பன்-எப்டி டைட்டில்?

ம் ஜோடி?

 டார்க் ரோஸ் மேரி , லைட் ரோஸ் மேரி


================

12   கட்சிக்காரன நோட்டீட் ஒட்டாத சொல்லிட்டு தேர்தல் ஆணையம் அவங்களவிட சிறப்பா ஒட்டுது.

 என்ன பண்ண? நோட்டீஸ் ஒட்டாதீர் என்பதை நோட்டீஸ் ஒட்டி சொல்ல வேண்டி இருக்கே?


=====================


13 முன்னாள் மந்திரியின் கில்மா லீலைகள்னு டைட்டில் தரலாமா எடிட்டர் சார்?

நோ, எக்ஸ் மினிஸ்டர் செக்ஸ் மினிஸ்டர் ஆன கதை, 


================


14  ஆட்சியில் இல்லாத போதே எங்க கட்சி ஆட்கள் உங்களை இந்த அளவு மகிழ்விக்கும்போது ஆட்சிக்கு வந்து விட்டால்? சிந்திப்பீர்! செயல்படுவீர்!===============

15 
சார், 24 பட டைட்டிலை ஏன் 30-னு மாத்தீட்டீங்க?இப்போ 30 தான் வைரல் ஆகி செம ஹிட்டா ஓடிட்டு இருக்கு

============


16

டாக்டர்.ஏசியப் போட்டா குளிருது.
ஆஃப் பண்ணா வேர்க்குது.
எதுவும் வியாதியா இருக்குமோ?


ஆமா, ஏ சி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்


==============

17
டாக்டர்! நேற்று ஓப்பன் பண்ணி வைச்ச மிச்ச பீர் இன்னைக்கு குடிக்கலாமா ?


மிச்ச பீரோ எச்ச பீரோ சொச்ச பீரோ எல்லா பீரும் உடல் நலனுக்குக்கேடுதான்.விஷம் பழசானா அதிக ஆபத்து போல


===================


18 டாக்டர், பீர்ல ஆல்ஹஹால் கம்மி னு சொல்றாங்களே?

ஆமா, விஷத்துலயே கசப்பான விஷம், கசப்பு கம்மியான விஷம்னு 2 வகை இருப்பது போல்


==================


19 டாக்டர், சரக்கு சாப்ட்டாதான் பெண்ணை திருப்திப்படுத்த முடியுமாமே?


யோவ், சரக்கு சாப்பிடாம இருந்தா உன் குடும்பத்தையே மகிழ்ச்சிப்படுத்தலாமே?==================

20 சாய் பல்லவி சாயுமா சாயாதா?

டைரக்டர் சாய்-னு சொன்னா சாயும், சாயாதேன்னு சொன்னா சாயாது


================


0 comments: