Sunday, July 10, 2016

தேவாலயம் ,இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்

தலைவர் ஒரு விளையாட்டுப்பையன்.


எப்டி சொல்றே?
ப்ளே பாய் புக் ப்ளோ அப் போட்டோ கலெக்சனே வெச்சிருக்காரு==============

2 தலைவரே! நாளைக்கு ஏதோ உறுதிமொழி ஏற்கப்போறீங்களாமே?


எப்டியும் ஜெயிக்கப்போறதில்லை.எதுனா அடிச்சு விட்டு பரபரப்பு கிளப்புவோம்===============

3 அப்பா.எல்லா தேர்தல் உறுதிமொழியையும் நாம அங்கே இருந்துதானே சுடறோம்?


ஆமா.
ஆனா சிஎம் வேட்பாளர் மேட்டர்ல மட்டும் அவங்களை பாலோ பண்ணலையே ஏன்?================
4 தலைவரே! கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்க எதுக்கு சர்ச் க்கு வாரா.வாரம் போறீங்க?


சர்ச் வாசல்ல "பாவிகளை இயேசு ரட்சிப்பார்"னு போட்டிருந்தது


============

5 நான் எப்போ மாசமா இருந்தாலும் கலை கலை னு காதலர் தொந்தரவு செய்வாரு.


ஓஹோ.பெரிய கலை மாமணியா இருப்பார் போல==============


6 தலைவரே! நீங்க 2 கட்சிக்காரரும் சம்பாதிச்சீங்க? அவங்க ஓட்டுக்கு பணம் தர்றாங்க, நீங்க தர்லையே?  ஏன்?

பொதுவா எனக்கு வாங்கிதான் பழக்கம், கொடுக்க மனசு வராது


==================


7  

ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் பால்கோவா வுக்கு ஃபேமஸ்


 பொய், யாரை ஏமாற்றப்பார்க்கறே? கோவா தானே? பேர்லயே கோவா இருக்கில்ல?


===================


தலைவரே! மல்கோவா மாம்பழம் கிலோ 100 ரூபாதானே?100 கிலோ க்கு 200000 ரூபானு கணக்கு எழுதி வெச்சிருக்கீங்க?


 கோவா போய் வர ட்ரான்ஸ்போர்ட் செலவு


===================


9  

இண்ட்டர்வ்யூவில்


ரயில்வே டிபார்ட்மெண்ட் ஜாப் ல முன் அனுபவம் இருக்கா?

 எஸ் சார், கடந்த 6 வருட காலமாக பொண்ணுங்களுக்கு தனி ரயில் விட்டு ட்விட்டர்ல வணக்கம் வைச்சிருக்கேன்


====================

10 

சார், நீங்க என்ன சொன்னீங்க?

24 டிவிடி விலை 50 ரூபான்னேன்

1 இங்கே இருக்கு, மீது 23 எங்கே?

யோவ், படத்தோட டைட்டிலே 24 தான்யா


===================================


11 மிஸ்!  ஒரு கிஸ் தர முடியுமா?

பளார் -னு சத்தம் வர்ற மாதிரி தரவா?

இச் தான் ஆக்சுவல் சவுண்ட்.பிஜிஎம்ல மாத்திடுவீங்களா?


========================


12  தலைவரே! நமது  இலக்கு மது விலக்கு-னு சொல்றீங்களே அவ்ளோ நல்லவரா?

டாஸ்மாக்கால  அரசுக்குதான் வருமானம், கள்ளச்சாராயம்னா நமக்கு வருமானம்


================

13 தலைவரே! பணம் கொடுத்து நமக்கு சாதகமான கருத்துக்கணிப்பு வர வைக்கறீங்களே? நாளை எப்டி சமாளிப்பீங்க?

கடைசி டைம்ல மக்கள் மனசு மாறிட்டாங்கனு சொல்லிடலாம்


==================


14  தலைவரே!நீங்க ஏன் சிஸ்டம் ல டைப்பாம மொபைல்ல டைப்பறீங்க?

 மொபைல்னா கீ போர்டு , சிஸ்டம்னா “மதர்”போர்டு. மதர்னா அம்மா. அதான்


===================


15 என் ஆத்மா சாந்தியடையனும்னு வேண்டிக்கோ

 இதுக்கு ஏன் கோயிலுக்கெல்லாம் போகனும்? இந்தா சாந்தி அப்புறம் நித்யா பட டிவிடி. நித்யா போனஸ்


=======================

16  டாக்டர்.சமந்தா எந்த கோணத்துலயும் எனக்கு அழகா தெரிய மாட்டேங்குது.


எங்கே இருக்கீங்க?

கும்பகோணம்


அரக்கோணம் ல வந்து பாருங்க எதுக்கும்,


======================

17 மிஸ்! உங்க கிட்டே 1 சொல்லனும்,ஆனா இப்போ சொல்ல மாட்டேன்,2 மாசம் கழிச்சுதான் சொல்வேன்

தெரியும்யா என்ன சொல்வேன்னு.திருக்குறளா சொல்லப்போறே? ஐ லவ் யூ சொல்வே


==================


18 சார், என்னால தபால் ஓட்டு போட முடியலை


சரி, ஷோல்டரை இறக்குங்க . கூரியர் ஓட்டு போடுங்க


====================
19

சார், சமீபத்துல எங்க தலைவர் தப்பு செஞ்சாரா?

 யோவ், சமீபத்துல 5 வருசமா ஆட்சில இல்லை. இருந்தாத்தானே கொள்ளை அடிப்பாரு?


=================

20  தலைவரே! கச்சத்தீவீல் தேவாலயம் அமைப்பதை ஏன் எதிர்க்கறீங்க?

 ஏன் “தேவா”லயம் மட்டும்? இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்  அமைக்கனும்


=====================

0 comments: