Saturday, July 02, 2016

சிம்பு காதலியை மாத்திட்டாரு குஷ்பூ கட்சியை மாத்திடுச்சு நான் மட்டும் கூட்டணி மாறக்கூடாதா?

தலைவரே! மக்களோடு மக்களா பயணிகள்  விமானத்தில் பயணமா?!!!

 தேர்தல் முடியும் வரை சிம்ப்ளிசிட்டி, முடிந்த பின் வழக்கம் போல் பப்ளிசிட்டி


=============

2  DR,வெங்காயம் நறுக்கும் போது சிவிங்கம் சாப்பிட்டா கண்ணீர் வராதாமே நிஜமா?

ஆமா, நாக்கில் தண்ணீர் ஊறும்போது கண்களில் கண்ணீர் கட்டுப்படும்


=================

3  தலைவர் எதுக்கு மகளிர் அணித்தலைவிக்கு சீடை, சிப்ஸ் தர்றாரு?

 கூட்டணிக்கு நேசக்கரம், cot அணிக்கு நேசக்”காரம்” நீட்டுவாராம்


=================

4  படம் எப்டி?னு கேட்டா எதுக்கு வாட்டர் கேனை தலைகீழா கவுத்துக்காட்றே?

 ஊத்திக்கிச்சு


================

தலைவருக்கு பிராந்தியக்கட்சிகள் பிடிக்காதா ஏன்?

 அவருக்கு விஸ்கி தான் பிடிக்கும்,”பிராந்திய”க்கட்சிகள் பிடிக்காது


==================

6  என் சம்சாரம் சுட்டிக்குழந்தை மாதிரி

 ஓஹோ, ரொம்பக்குறும்பா?

ஓவர் அலும்பு, சொல் பேச்சுக்கேட்க மாட்டா


===============


7   த்லைவரே! நம்ம க்ரூப் வாட்சப் போல\\

 உலகம்  பூரா பேசப்படுதா?

இல்ல். பல க்ரூப்பா பிரிஞ்சிடுச்சு


===============

8  இது ஒரு விசித்திர உலகம்\\ 

எப்டீ?

கள்ளக்காதலியோட தியேட்டர் ல படம் பார்ப்பாங்க. சொந்த சம்சாரத்தோட திருட்டு விசிடில வீட்ல படம் பார்ப்பாங்க


==============

9   டியர், நாம லவ் பண்ண ஆரம்பிச்சே ஒரு வாரம் தானே ஆகுது? அதுக்குள்ளே எதுக்கு சக்சஸ் மீட்?\\

 இப்பவெல்லாம் 4 நாள் லயே வைக்கறாங்க


================


10   கட்சியின் அட்மின் அவர்களே!

 என்னய்யா இது?\


தலைவர் ஏகப்பட்ட வாட்சப் க்ரூப்ல அட்மின்


=================

11  நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலை ரீமேக்கினா என்ன டைட்டில் வைக்கலாம்?

 நாலாயிர ஸ்ரீ திவ்யா  பிரபந்தம்


===============


12  பிரபல  பெண் ட்வீட்டர் மஞ்சள் நிலா புதுசா ஒரு மேகசின் ஆரம்பிக்குதாம்

 அப்டியா? அப்போ மஞ்சள் பத்திரிக்கைனு சொல்வாங்களே?


=================


13  மாப்ளை ஃபோட்டோகிராஃபர்,ஆனா தம் அடிக்கும் பழக்கமே இல்லாதவர்

 குட். புகைப்படக்கலைஞர், ஆனா உதட்டில் நுரையீரலில் புகை படா மனிதர்


==============

14   சிம்பு காதலியை மாத்திட்டாரு
குஷ்பூ கட்சியை மாத்திடுச்சு
நான் மட்டும் கூட்டணி மாறக்கூடாதா?


================

15   திருவள்ளுவர் ஒரு அல்டிமேட் ரைட்டர்னு எப்படி சொல்றே?

 அவர் எழுதுன 1330 குறள்கள்ல 21 ல ”தலை ” எனும் சொல் வருது


===============

16  மயில்வாகனம், கொலம்பஸ் என்ன ஒற்றுமை?

 பேர்லயெ மயில் இருந்தும் மயில் ஏறி போகமுடியாது. பேர்ல பஸ் இருந்தும் வாழ்நாள் பூரா கப்பல் லதான் போனாரு


==============17   சினிமா விமர்சகர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுன்னு எப்டி சொல்றே?

நாக பாம்பு படம் எடுத்தாக்கூட ஏ4 சீட் எடுத்து விமர்சனம் எழுதிட்டு இருக்காரு, கொத்திடுச்சு============


18  ரேஷன் பொருட்கள்  வீடு தேடி வருவது போல ட்வீட்டப் வர முடியாத பெண் ட்வீட்ட்டர்கள் வீடு தேடிப்போய் சந்திக்க இருக்கிறோம்


=================

19   டேய், உன் வயசுல நான் எவ்ளோவ் மார்க் வாங்குனேன்னு தெரியுமா?
\\


 தெரியாது டாடி, சும்மா அளந்து விடுங்க


===============


20 டியர், நமக்குதான் நிச்சயதார்த்தம் நடந்துடுச்சே , டீசரோ, ட்ரெய்லரோ பார்ப்போமா?

 அப்டின்னா?
\
வெள்ளோட்டம் , முன்னோட்டம்


===============0 comments: