Friday, July 15, 2016

வெற்றி டைவர்ஸ்

 தலைவரே! வெற்றி நிச்சயம்னு நேத்து பேட்டி கொடுத்தோம், சப்போஸ் தோத்துட்டா எப்டி சமா\ளிக்க?

 வெற்றி டைவர்ஸ்னு சொல்லிடலாம்

================


 ஈரோடு டூ சென்னை 400 கிமீ போய்ச்சேரும் வரை 7 மணி நேரம் காதலிக்கு கிஸ் கொடுத்துட்டே இருந்தேன்\
எதுக்கு?

 மிக நீண்ட முத்தம்னு ரெக்கார்டுக்கு


==============


மிஸ்! உங்களுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியா|?


இல்லியே? ஏன்?
மிக நீண்ட முத்தம்னு கவிதை எழுதுனீங்களே|?


=============

4 டாக்டர், டெய்லி ஒரு ரோஜாப்பூ கொடுத்தும் என் காதலி எனக்கு மயங்கலை

 சோ வாட்?

 எதுனா மயக்க மருந்து இருந்தா கொடுங்க


==================


யுவர் ஆனர்.வாக்கு எண்ணிக்கைக்கு தடை வேணும்.


எத்தனை நாள்?

ஒரு.5 வருசம்
அது வரை பழைய ஆட்சியே தொடரும் ஓக்கேவா?
அய்யய்யோ.அப்போ வேணாம்

===========

6 டியர்்,என் நிகழ்காலத்தையும் சேர்த்தே தின்று கொண்டிருக்கிறாய்.


அரை மணி நேரமா ஹோட்டல்ல நீ தான் தின்னுட்டு இருக்கே.போதும் கிளம்பு



=============


7 தலைவரே! நீங்க ஓட்டுக்கு எவ்ளோவ் கொடுத்தீங்க?\
 அவங்க தந்ததுல பாதி

இப்போ எத்தனை சீட் எதிர்பார்க்கறீங்க?

அவங்களை விட டபுள் # பேராசை பெரு நஷ்டம்


================


8  +2 ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குன நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்க?
பிரதமரா!
நீங்க?
முதல்வரா!
 நல்லா படிச்ச நீங்க ஏன் இப்படி கெட்டு குட்டிச்சுவர் ஆகனும்னு நினைக்கறீங்க?
-- 


=================


9  கிரிக்கெட் டைமில் மழை வந்தால் 
டக் வொர்த் லீவிஸ்  விதி கடைபிடிக்கப்படுவது
 போல் மே 16ல் மழை வந்ததால் கழகம்
 வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படனும்


===============



10 கல்யாணத்தை மட்டும் பெரிய மண்டபத்தில் நடத்திட்டு முதல் இரவை துக்ளியூண்டு ரூமில் நடத்தறாங்க.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் இரவு மஹால் கட்டித்தருவோம்





================




11 நான் ஒரு ஆள் ஓட்டு போடலைன்னா ஆட்சி மாறவா போகுது?


 சார், அப்போ இதே மாதிரி சொல்லி எல்லாரும் திருட்டு டிவிடி ல படம் பார்த்தா என்ன ஆகும் நிலைமை? வசூல்?



==============\

12 டியர், என் ஸ்டேட்டஸ் பார்த்தா என்னை லவ் பண்ணீங்க?
\
 நீ டெய்லி  அதை சாப்ட்டேன் இதை குடிச்சேன்னு மொக்கை ஸ்டேட்டஸ் தானே போடுவே? கடுப்புதான் வரும், காதல் எப்டி வரும்?


==================

13  ஜட்ஜ் = திருட்டு டிவிடி ல படம் பார்த்தியா?

கைதி = அப்டேட் ஆகுங்க,இப்பெல்லாம் திருட்டு டிவிடி ஏது? திருட்டு மெமரி கார்ட் பென் ட்ரைவ்


====================

14 தலைவரே! இந்த தேர்தல்ல பெண் வாக்காளர்கள் வாக்கு தான் அதிகமாம்.


பீதியைக்கிளப்பாத.வண்டியைக்கிளப்பு


==============

15 சார், என்னை எதுக்காக தோட்டம் வரச்சொன்னாங்க?

 கடலூர் ரசிகர் மன்ற தலைவர்  ஏதோ அ|றிக்கை விட்டாரில்ல , அதுக்கு நீங்க யூ ட்யூப் ல அன்னைக்கு மாதிரி ஒரு மன்னிப்பு கேட்கனும்


===============

16  வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் பட ரிசல்ட் ஃபாரீன்ல வியாழக்கிழமை நைட்டே சொல்றாங்க 

ஆமா

 அப்போ வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் தேர்தல் ரிசல்ட் இப்போ வருமா?


=================


17  சார் , கேப்டன் அமெரிக்கா பார்த்தாச்சா?

 தெரியலீங்களே? அதை நீங்க கேப்டன் விஜய காந்த் கிட்டேதான் கேட்கனும்


=====================\\\\\

18 தலைவரே! தபால் வாக்கில் எப்போதும் நாம தான் முன்னிலை, இது எப்படி?

அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்க|றோமில்ல, அதனாலதான், என் பயம் எல்லாம் கிராம வாக்கில்


===================


19  



தலைவரே! சிறைக்கைதிகளோட தபால் வாக்கும் நமக்குத்தானா?எப்டி?


ஒரு கிரிமினலோட ஆதரவு இன்னொரு கிரிமினலுக்குத்தானே?

=================


20 நம்மள இங்க யாரும் அசைக்கமுடியாது.

எப்டி?
125 கிலோ வெயிட்.எப்டி தனி ஆளா அசைப்பே?

=================

0 comments: