Wednesday, July 20, 2016

எல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல

தமிழக மக்களின் நலனை காக்க 6 கட்சிகளும் இணைந்து செயல்படுவோம்: ம.ந கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ உறுதி # கேப்டன் வாக்கு வங்கியை ஜீரோ ஆக்கும் வரை ஓயமாட்டார் இந்த  ஹீரோ


==================


உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர முடிவு # போற போக்கைப்பார்த்தா ஆண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் பண்ணனும் போலயே


================

3 சோனியா காந்தியின் தலைமை இல்லாவிடில் காங்கிரஸ் சிதறிவிடும்: வெங்கையா நாயுடு # கட்சிக்கு ஒரு நாஞ்சில் சம்பத் இல்லாவிடில் தலைமை பதறிடும்

===========

4 இந்தியாவில் பருவ நிலை மாறுவதும் வெப்ப நிலை அதிகரிப்பதும் கவலை அளிக்கிறது: மோடி # இந்தியாவில் இருப்பவங்கதானே கவலைப்படனும் ஜி?

==============


5 தோல்வி நிரந்தரமல்ல, கொள்கைகளில் உறுதியுடன் இருங்கள்: கட்சியினருக்கு சோனியா காந்தி # ஹெலிகாப்டர்ல போனாலும் கொள்கைப்பிடிப்போடதான் போவோம்

==============

6 சென்னையில் நாளை பதவி ஏற்பு விழா; கவர்னருடன் ஜெயலலிதா சந்திப்பு; # நாளை கவர்னரைத்தவிர எல்லாரும் கால்ல விழுவாங்க, செம காமெடியா இருக்கும்

=============

7 தேர்தலில் தே.மு.தி.க., தோல்வி அடையவில்லை. வெற்றி சற்று தள்ளிப் போயுள்ளது.-
விஜயகாந்த் # முன் கோபத்தை புறந்தள்ள வில்லை எனில் மக்கள் புறந்தள்ளிடுவாங்க,புது மனிதனா வாங்க===================

அனைவருடனும் ஐக்கியமாகும் திறன் இந்தியர்களுக்கு உண்டு : மோடி # குறிப்பா ரோஸ்.கலர் ஜாக்கெட்னா அப்டியே ஐக்கியம் ஆகிடுவாப்டி


=============9 டாஸ்மாக் மதுக்கடைகள் இனி பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும்: ஜெ # குளிச்சு முடிச்ட்டு கோவிலுக்கு போய்ட்டு FRESHசா சரக்கடிப்பானோ?===============10 அதிமுக -திமுக நேரடிப் போட்டியில் திமுக-வுக்கே அதிக வெற்றி- கருணாநிதி

ஏதோ ஒரு பிரச்னை.இவருக்கு மட்டும் ஈகோ பிரச்னை

=============

11 காங்கிரஸ் - பாஜக. இடையே இருப்பது கணவன் மனைவி உறவு-அரவிந்த்கெஜ்ரிவால் # அப்போ காங்கிரஸ்காரர் பிஜேபி காரரை கை நீட்டி அடிப்பாரா?


===============


12 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் மக்களுக்கு ஜெ. அரசு செய்யும் நன்றி்.. சீமான் # நாம் தமிழர் ஏன் நாஞ்சில் சம்பத் மாதிரி பம்முது?


=============

13 சரத்குமாருக்கு முன்வரிசை... ஸ்டாலினுக்கு பின் வரிசை்- கருணாநிதி ் # வாழ்வும் இப்டித்தான்.ஜெயிச்சவனை விட ஜிங் ஜக் கிற்கே முதல் மரியாதை்


============

14 தேர்தலில் ம.ந.கூ. தோல்வி அடையும் என எதிர்பார்த்தேன்: வைகோ # நீங்க போர் வாள்?இல்லை அவாள்?


=============

15 எந்தவித வரைமுறைகளும் இன்றி அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் -ஜெ # மிகவும் ஆபத்தான திட்டம்,மின் பற்றாக்குறை ஏற்படும்,எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்


==================


16

 தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நேரடியாக போட்டியிட்ட, 172 ல், தி.மு.க., 89 , அ.தி.மு.க., 83 வெற்றி -கருணாநிதி: # அதனால ஆட்சி அமைக்க உங்களுக்கும் 2 1/2 வருசம் வாய்ப்பு வேணுமா?


=================

17 ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாகவா இடம்?- கருணாநிதி # தலைவா! எப்பவும் வீட்டில் இருக்கும் சொந்தங்கள் மதிச்சாத்தான் எதிர் வீட்டுக்காரன் மதிப்பான்


=================


18 இந்தியாவிலேயே தமிழகத்தை வளர்ச்சி மிகு மாநிலமாக  ஜெ மாற்றிக் காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.-சரத்குமார் # (நாஞ்சில்)சம்பத், சரத் பேர் பொருத்தம் பிரமாதம்


=================


19  உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருப்பதை விட, என் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது எனக்கு முக்கியம்-குஷ்பூ# குழந்தைத்தனமான அறிக்கை, பொது வாழ்வுன்னு வந்துட்டா.கேள்விகளை எதிர்கொள்ளனும்


================


20 தோல்வியால் துவண்டு விடாதீர்!' மாவட்ட செயலர்களுக்கு, விஜயகாந்த் அறிவுரை # எல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல தான் இருக்காங்க.து”வண்டு” போகமாட்டாக


=========================

0 comments: