Wednesday, July 06, 2016

சகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ? -அம்பலமாகும் 500 கோடி ரூபாய் ரகசியம்

தி.முக.வின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் -அழகிரி! # நமக்குக்கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது.நல்ல கொள்கை.எதிரியை விட ஆபத்தானவன் துரோகி

===========

2 ராகுல் காந்தி கடும் காய்ச்சலால் அவதி தமிழகம் உள்ளிட்ட 3 மாநில தேர்தல் பிரசாரம் ரத்து # கொலை மிரட்டலால்னு ஓப்பனா சொல்ல முடியுமா?"

===========

3 ‘6-வது முறையாக நான் CM ஆக வேண்டும் என நினைக்கும் முதல் ஆள் மு.க.ஸ்டாலின்’ -கருணாநிதி #,இப்டி சொல்லி அவர் வாயை அடைச்சுட்டீங்க.சாணக்கியர்

=============

4 மனமகிழ் மன்றத்தில் ‘டோக்கன்’ வைத்து ‘ரம்மி’ சீட்டு விளையாடலாம்; ஐகோர்ட்டுு # "சூது கவ்வும்" என்பது தெரியாதா "கனம் கோர்ட்டார் அவர்களே!"


=============


5 போலீஸ் காவலில் இருந்த கைதி தப்பிப்பதற்கு உதவிய நபருக்கு 8 வருட சிறை தண்டனை # இவர் தப்பிக்க உதவவும் ஆள் இருக்கும்"


=============

6 பெரியகருப்பனை ஆதரித்து குஷ்பு

இன்று திருப்பத்தூரில் பிரச்சாரம்.
# ஜாக்ரதையா பேசுங்க மேடம்.நெட் தமிழன் மீம்ஸ் போடக்காத்திருக்கான்

=============

7  மக்களை எப்படியாவது ஏமாற்றி ஓட்டுக்களை அபகரித்துவிட வேண்டும் என்பது தான், தி.மு.க.,வினரின் ஒரே குறிக்கோள். -ஜெ # சரி, இந்த தடவையும் நீங்களே ஏமாற்றிக்குங்க


=================

8  எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப் பற்றி, 100 தடவை அல்ல, 1,000 தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள் நான் -ஜெ # வா”ர்ணம் ஆயிரம் அப்டீங்கறீங்க?


================

9  அ.தி.மு.க. பா.ஜ.,வின், 'பி டீம்' தமிழகத்தில் உள்ள பா.ஜ., அ.தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக செயல்படுகிறது.-ப.சிதம்பரம்  # இப்போ நீங்க திமுக வின் பி டீமா ? 


=================


10   அ.தி.மு.க., - தி.மு.க., இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது- தமிழருவி மணியன் # ஆமா, இவங்க 2 பேரும் தான் வாக்குக்குப்பணம் தர்றாங்க


====================11 சகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ? -அம்பலமாகும் 500 கோடி ரூபாய் ரகசியம் #

மக்களுக்கு சகாயமா இருந்தா சரி.நதி மூலம் சகாயமா இருந்தா என்ன?


==============

12 விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது: இங்கிலாந்து அறிவிப்பு # ஏன்?உங்க கிட்டேயும் லோன் வாங்கிட்டாரா?

===============

13 வெற்றி பெற்றால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்குவேன்: விஜயகாந்த் # எந்த தண்ணிப்பிரச்னையும் வராம பாத்துக்குவாரு.

==========

14 பிரதமரும் முதல்வரும் ஒரே கட்சியாக இருக்க வேண்டும் ,இது என் ஆசை-தமிழிசை # அதெப்டிங்க? மோடி கிட்டே போய் அதிமுக வில் சேருங்கனு சொல்ல முடியுமா?


================

15 தி.மு.க.,வில் புதிய நெருக்கடி . கருணாநிதி,  ஸ்டாலின் 2 பேரும் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்-
நாஞ்சில் சம்பத்# அண்ணன் அழகிரி என்ன தக்காளி தொக்கா? அவரும் தான்


========================


16  அ.தி.மு.க., வினர் தேர்தல் அறிக்கை, அனைத்து எதிர்க்கட்சிகளையும் கதிகலங்கச் செய்துள்ளது.-
அன்வர் ராஜா: --# நாம லேட் பண்ணி கடைசில விட்டதே  ஒரு  காரணத்துக்காகத்தானே?


==========================
====================


18  விஜயகாந்த் மட்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், நாலைந்து போலீசை அழைத்து, பாகிஸ்தான் மேல் படையெடுக்க போனாலும் போவார்-விந்தியா # முதல்வர் ஆனா பிரதமர் போல் செயல்படுவாரா? வெரிகுட்


=========================


19 கருணாநிதி, 'உளியின் ஓசை' உள்ளிட்ட எத்தனையோ திரைப்பட ஊதியத்தை பொதுமக்களின் வாழ்வுக்காக ஒப்படைத்துள்ளார்.-ஸ்டாலின் # கிம்பளத்தை மட்டும் தன் குடும்பத்துத்க்கு


===================

20  அரசாங்கத்தை அமைக்க, முன் அனுபவம் வேண்டும் என்று கூறுவதெல்லாம் பிதற்றல்.விஜயகாந்த்  # முன் அனுபவம் இருப்பவர்கள் தான் திறமையா ஊழல் செய்வாங்க,  நல்லா சம்பாதிப்பாங்க-


======================

0 comments: