Sunday, July 03, 2016

தமிழிசை- தமிழக சி எம்? ஜெ ,கலைஞர் அதிர்ச்சி

அ.தி.மு.க.,வின்இலவச மொபைல்தாலிக்கு 8 கிராம் தங்கம் போன்ற, மக்களுக்கு பயன்படக்கூடிய பல. திட்டம்-சரத்குமார் #  அம்மா-ன்னா “சும்மா” இல்லைனு சொல்ல முடியாது. எல்லாம் சும்மா


=================

அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய கட்சிகள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால், தே.மு.தி.க., என்ற கட்சியே உருவாகி இருக்காது- பிரேமலதா # இனிமே ஒழுங்கா ஆட்சி நடத்த\றாங்களாம், கிளம்புங்க


================


 ஜெ ஜாதி, மத நல்லிணக்க பேரரசியாக திகழ்கிறார்-மதுரை ஆதீனம் #  அதனாலதான்  எல்லா தொகுதிலயும் ஜாதி பார்த்து வேட்பா\ளர்  நிறுத்தி இருக்காரா?


==================
 4  கும்பிடு போடவே அமைச்சர்களுக்கு நேரம் சரியாக உள்ளது :-திருமாவளவன் # குப்புறப்படு , கும்பிடு , குனி இதுவே தாரக மந்திரம்


===============

5 வெற்றிடத்தை ம.ந.கூட்டணி நிரப்பிவிட்டது: மதுரை தேர்தல் களத்தில் உ.வாசுகி # வெற்றி இடம் கிடைக்குமா? வெற்றிடம் தானா? தெரியல==================6 மத்திய அரசு அறிக்கையின்படி தேமுதிக - ம.ந. கூட்டணிக்கு 35% ஆதரவு: காரைக்குடியில் வைகோ தகவல் # டெல்லி யிலேயே 35% ஆதரவா? அடேங்கப்பா===============


7

ஜெ  முதல்வராகப் போவதில்லை: ஸ்ரீபெரும்புதூரில் சுப்பிரமணியன் சுவாமி  # தமிழிசை- தமிழக சி எம்னு அடிச்சு விடுங்க மேட்சுக்கு மேட்ச்================


8  

பஞ்ச பூதங்களிலும் திமுக கொள்ளை ராமதாஸ் குற்றச்சாட்டு # அப்போ சலங்கை ஒலி ல “ பஞ்ச பூதங்களும் உன் வடிவாகும்”னு கமல் சொன்னது இவங்களையா?==================


9  

சொத்துக்குவிப்பு வழக்கில் 13-ம் தேதிக்குள் வாதத்தை நிறைவு செய்ய கர்நாடகா, ஜெ. தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கெடு # அப்போ தீர்ப்பு மே 16 க்கு முன் தானே வரும்?அப்டித்தான் வரனும்==============

10 
  • காங்கிரஸை "கை' தூக்கிவிடுங்கள்: கருணாநிதி # மன்னிக்கவும் தலைவரே! கையறு நிலை, கை அறு நிலை

=============================


11 திமுக ஆட்சியில் தினமும் ஒரு தொழிற்சாலை திறக்கப்பட்டது: சோனியா - # அப்போ 1*365*5 =1825 பேக்டரி அட்ரஸ் சொல்லுங்க பார்ப்போம்==========
12 திராவிடக் கட்சிகளிடம் பணபலம் உள்ளது; என்னிடம் மனபலம் உள்ளது; விஜயகாந்த் # அப்போ பிரச்னை இல்லை, தோல்வி வந்தாலும் தாங்கிக்குவீங்க


============

13


அன்புமணிக்கு ஆதரவான அலை தமிழகத்தில் வீசுகிறது - ராமதாஸ் # எங்க கண்ணுக்கும் அது தெரியனும்னா எதுனா கண்ணாடி போடனுமா?


===========


14 நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’- ஷாருக்கான் # அப்போ படம் ரிலீஸ் ஆன 4 வது நாளே சக்சஸ் மீட் வைக்கறவங்க தக்காளி தொக்கா?


===========

15 தமிழகத்துக்கு எதுவுமே செய்யாத அ.தி.மு.க.–தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது -தா.பாண்டியன் # அப்டி வந்தா தமிழன் போண்டியன் ?


=================

16 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - வைரமுத்து # அட்லீஸ்ட் தமிழ் இருக்க நடவடிக்கை எடுத்தாலே போதும்


=============

17 சென்னை பட்டினப்பாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பணம் பதுக்கல்-வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை # அடுக்கு மாடியில் கறூப்புப்பணம்? இது உனக்கே அடுக்கு மாடி இதெல்லாம்?


=================

18 ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்று ஒரு கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது # செக்,டிடி வாங்கிட்டா?

============

19 அட்சய திருதியைக்கு 30 சதவீதம் நகை விற்பனை குறைய வாய்ப்பு # நல்லதுதான். பொது மக்கள் சேமிப்பு சேதாரம் ஆகாமல் செய்கூலி மிச்சமாகும்

===========

20


அ.தி.மு.க.வின் 100 யூனிட் இலவச அறிவிப்பால் தமிழகத்தில் மின்தடை தான் ஏற்படும் -மத்திய மின்துறை மந்திரி பியூஷ் கோயல் # அதெப்பிடி?வெறும் அறிவிப்பால் மட்டுமே மின் தடை வரும்?=========================

0 comments: