Saturday, July 30, 2016

இன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோதிகா வை விசாரணை பண்ணனும்கறீங்க?

மிஸ்! .நீங்க போடுற ட்வீட்ஸ் எல்லாமே சூப்பர்ங்க.

இதே டயலாக்கை எத்தனை பேர்ட்ட சொல்லி இருக்கீங்க?

368

எத்தனை லேடீசை ஃபாலோயிங்?

அதுவும் 368 # நெட் தமிழன்

=================

2 ஜட்ஜ் = பப்ளிக் ப்ளேஸ்ல ஒருத்தரை கை நீட்டி அறைஞ்சிருக்கீங்க?


நோ யுவர் ஆனர்.கன்னத்தில் தான் அறைஞ்சேன்.அது அவரோட பிரைவேட் ப்ளேஸ் தானே?

===============

3 ஜட்ஜ் = தப்பு நடந்தா தட்டிக்கேட்க போலீஸ் இருக்கு


யுவர் ஆனர்.சிங்கம்.3 ஷூட்டிங் போறப்ப நடந்த சம்பவம் அது.போலீஸ் யூனிபார்ம்ல இருந்தேன்=============

4 யுவர் ஆனர்.இவர் அடிச்சதுக்கு 1,கோடி நட்ட ஈடு வேணும்


அவ்ளோ பலமா அடி?
ஓங்கி அடிச்சா 1 1/2 டன் வெயிட் னு பேசுனதுக்கு ஆதாரம் இருக்கு


==============

5  என் கையை யார்கிட்டயும் ஜோசியம் பாக்கவும் நீட்டவேணாம்ன்னு செத்து போன தாத்தா சொன்னார்


அவர்தான் செத்துட்டாரே?எப்டி சொல்லி இருப்பாரு? ...


=============

6 மிஸ்! ஒரு செயின் /நெக்லஸ் இல்லாம வெறும் கழுத்தோட இருக்கீங்களே? ஒரு தாலி கடட்டுமா?


தாலியைக்கழட்டி ஹேன்ட் பேக் ல வெச்சிருக்கேன்.வேற இடம் பாரு

=============
7 சாலி கிராமத்தை தத்து எடுக்கப்போறேன்.


எதுக்கு சார்?
மகேஷ் பாபு ஒரு கிராமத்தை தத்து எடுத்திருக்காராம்.அவர் என்ன செய்யறாரோ அப்டியே டிட்டோ


============

8 தொழில் அதிபர்கள் கைல தான் கோயம்புத்தூர் இருக்கு.கோவையின் பொருளாதாரத்தையே திருப்பிப்போட்ருவாங்க.


கோவை யை திருப்பிப்போட்டா வை கோ ஆகிடுமே?


=============
9 உங்க விமர்சனத்தை நம்பி படத்தை எங்க தியேட்டர்ல போட்டிருக்கோம்.

ஓ.நன்றி.


கூட்டம் வர்லைன்னா நட்ட ஈடு கொடுத்துடுங்க.நமக்கு இது புதுசா என்ன?

===========
10 மிஸ்! நீங்க கோர்த்து விடறதுல பெரிய ஆளாமே?


பூச்சரம் கூட கோர்க்கத்தெரியாது.கட்றதோட சரி


=============

11 சார்.சூர்யா அடிச்ச மாதிரி நீங்களும் எவனையாவது பிடிச்சு ஒரு பளார் குடுங்க.

சாரி.மகேஷ் பாபு அடிச்சாதான் நான் அடிப்பேன்

=============

12 மேடம்.சூர்யா மேல ஒரு கேஸ் இருக்கு.

மாட்னாரு.தேர்தல் டைம்ல டாஸ்மாக் பத்தி சொல்லிக்காட்னார் இல்ல.பழி வாங்க சரியான தருணம்

===============

13 சார்.அடிச்சது சூர்யா.எதுக்காக சிவகுமார் மன்னிப்புக்கேட்கனும் ?

இது குடிகாரர்களை உருவாக்கும் ஆட்சின்னு பப்ளிக்கா சொன்னாரில்ல

================

14 சார்.சம்பவம் நடந்தப்ப நீங்க அங்கே இருந்தீங்களா?
நொ
என்ன நடந்ததுன்னு முழு.விபரம் தெரியுமா?
நோ
எதை வெச்சு அவர் செஞ்சது சரின்னு சொல்றீக?

=============

15 யுவர் ஆனர்.சூர்யா அடிச்சதால எனக்கு கழுத்து வலி தலைவலி கோமா ஸ்டேஜ்க்குப்போய்டுவேன் போல.

நல்லா நடிக்கற தம்பி.அவர் படத்துல ஒரு ரோல் பண்றியா?

=============

16 ட்விட்டர் Account டை deactivate பண்ணிடலாம்னு இருக்கேன்.

மிஸ்.அப்போ இத்தனை நாளா ஆக்ட்டிவ்வா இருந்தீங்களா?சொல்லவே இல்ல?


==============

17 ஜட்ஜ் = பொது இடத்தில் அவரை அடிச்சீங்களா?

அது நான் இல்லீங்க யுவர் ஆனர்.
சூர்யான்னு தெளிவா சொன்னாரே?
எஸ் ஜே சூர்யாவாக்கூட இருக்கலாம்.
===============

18 உங்க கட்சிக்காரர் அவரை அடிக்கலைனு எப்டி நிரூபிப்பீங்க?


சிம்ப்பிள்.இத்தனை வருசத்துல சொந்த.சம்சாரத்தையே கைநீட்டி அடிக்காத.சாந்தசொரூபி அவர்

===============

19 DR,குண்டா இருக்கறவங்களுக்கு மெல்லிசான பிள்ளைகள பிடிக்கும்ன்னு ஒரு தியரி இருக்காமே?


அப்போ அம்பானி பையன் ஏன் அப்டி இருக்காரு?

==================

20 இன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோதிகா வை விசாரணை பண்ணனும்கறீங்க?

நான் எப்போதான் கிட்டக்கா போய் பார்க்க.இது ஒரு சாக்கு

================

0 comments: