Monday, July 18, 2016

தீர்ப்பு வந்ததும் மாத்துவோம்

நேர்மையானவர்கள் ,நாணயம் மிக்கோர் நம்பிக்கை இழக்காதீர்.உங்கள் வாழ்க்கைப்பாதையை மாற்றாதீர்!


============

2 செல்லக்குட்டி பிரதீபா க்கு ஒரு தங்கச்சி இருக்காம்.4,வருசமா பாலோ பண்ணியும் இன்னைக்குதான் அந்த ராணுவ ரகசியமே தெரிஞ்சுது

===============
\3 குமாரசாமிக்கு 100 கோடி
570 கோடி மேட்டரை மறைக்க 30% பொதுஜனம் குப்புசாமிக்கு 250 ரூபா # பணம் 10 ம் செய்யும்

=========

4 பொய்யான கருத்துக்கணிப்பை வேண்டும் என்றே வெளியிட்டு சன் டி.வி ஷேர் ரேட் ஏற உதவி மோசடி செய்த 5 பிரபல மீடியாக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்

==============

\5 ஒரு தலைவனுக்கு நிதானம் ,பொறுமை,பணிவு 3 ம் மிக முக்கியம்.இவை இல்லாவிட்டால் தோல்விதான் # கேப்டன்

=============

6 கோபத்தோடு மேடை ஏறுபவன் நட்டத்தோடு மேடையிலிருந்து இறங்குவான்


==============


7 எந்த வேலையையும் நம்ம கையால செஞ்சு முடிச்சா நம்ம மனசுக்கு ஒரு திருப்தி

===============
\8 எந்த கட்டிடத்தையும் புதுப்பிப்பது சுலபம்.ஆனா அதில் பழமையின் வாசனை போய்டும்


===============

9 உடன் பிறப்பே.என் ட்விட்டர் ஹேண்டிலை கலைஞர்89 என வைத்தேன்.89 சீட்.இது தெரிந்திருந்தால் கலைஞர் 234 வைத்திருப்பேன்.2021ல் மாற்றம் முன்னேற்றம்


===========

10 தனியா ஒரு பொண்ணு பஸ் ஸ்டேன்ட்ல நின்னுட்டு இருந்தாலே தமிழன் அனுதாபப்பட்டு விசாரிப்பான்.தேர்தல்ல நின்னா?அதான் ஜெயிக்க வெச்ட்டான்


===========

11 சூர்யா.+ விஜய் = விஷால்
இதை நான் சொல்லலை.விஷால் தான் சொல்றாரு. நான் சிங்கம் மாதிரி.தேவைப்பட்டா புலியாவும் மாறுவேன் @ மருது பஞ்ச்


============

12
மநகூவின் பெருந்தோல்விக்குப் பெரிதும் காரணம்- விஜயகாந்தா? வைகோவா?"

விகாந்த் ன் மேடை அநாகரீகங்க்ள் 75% வை கோ 25%


================

13 கன்யாகுமரி மாவட்டம் கடல் ஓரப்பகுதி என்பதால் எல்லோரும் சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுபவர் போல # அதிமுக வுக்கு மரண அடி


===========

14 திருப்பத்தூர் பெரிய கருப்பன் ,திருச்சி சிவா இப்டி திமுக விஐபி லீலைகள் மட்டும் தாம் வருது.மற்ற கட்சி லீலைகளும் வெளி வரனும்.வீ ஆர் வெய்ட்டிங்


==============

15 70+ கிழ போல்ட்டுங்க 18 வயசுப்பொண்ணை 10 ம் தாராம கட்டினா அதுவும் வெட்டி BEDடிங்தான்


=============

16 இளைய சமுதாயம் மாற்றத்துக்கான வாக்களிக்கும் என பலரும் காத்திருக்க அது இரட்டை இலை ய சமுதாயம் ஆகி விட்டது

===============


17 ஸ்டாலின் ஜெ க்கு வாழ்த்து சொன்னது ,ஜெ கலைஞர்க்கு சட்டசபையில் அவர் விரும்்பும் மாடலில் ஆர்டர் தந்தது இரண்டும் ஆரோக்ய அரசியலுக்கு அச்சாரங்கள்


==========

18

பற்றாக்குறை 10% வாக்கை ஈடு செய்ய தானைத்தலைவர் 2021 தேர்தலுக்கு ரஜினி , விஜய் ஆதரவு கோருவார் என யூகிக்கிறேன்

==============

19 

மாலை செய்திகள்- அமைச்சரவைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வரும் மாற்றங்கள் நாளை காலை 7 30 ம|ணி செய்திகளில்


==========


20 மேடம், எல்லா அமைச்சர்களையும் மாத்தறீங்க, ஆனா முதல் அமைச்சர் மட்டும் மாறாம இருக்கே?

 தீர்ப்பு  வந்ததும் மாத்துவோம்


==================

0 comments: