Monday, July 04, 2016

சன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா?

1

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்: ட்விட்டரில்  விஜயகாந்த் # உங்க பேரில் ஒரு ஃபேக் ஐடி உங்களைவிட நல்லா செயல்படுது,அதை கவனிங்க முதல்ல


==================

2  சட்டசபை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நடுநிலை - விஜய் # வீடியோ வரும் முன்னே விளக்கம் வரும் பின்னே


===========

3 அம்மாவின் ரூ.350 சீன போன் வேணுமா? ஐயா கொடுக்கும் ஆன்ட்ராய்டு போன் வேணுமா?: குஷ்பு #ஐயா-ன்னா சரத் குமாருங்களா?

==============


4 மதகஜராஜா எப்போ வரும்னு கடவுளுக்குக் கூட தெரியாது! - விஷால் விரக்தி # இதுக்கு தான் எப்பவும் அடக்கி வாசிக்கனும்

============

5 என் குடும்பத்தில் இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் # நமக்கே இன்னும் பதவி வர்ல, இனி எங்கே குடும்பத்தைக்கொண்டு வந்து...


===========


6 என் குடும்பத்தில் இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் # இது கூட டாக்டர் ராமதாஸ் அய்யா சொன்ன டயலாக்தான்

=============

7 கொடநாட்டு சொத்துக்களை மக்களுக்கு தர ஜெ தயாரா?: ஸ்டாலின் # சன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா?


===========

8 காவிரி நீர் பேசுவது இல்லை; தன் தொண்டு பற்றி பரப்புவதும் இல்லை. அது போல் தான் காங்கிரசும்- ராகுல் # இரண்டும் தமிழ் நாட்டில் சோபை இழந்து ரொம்ப நாள் ஆச்சே|?===============
9  ஜெ ஆட்சியில், மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தியதால், ஜெ கூட்டணியில் இருந்து வெளியேறினேன்.-விஜயகாந்த்:# உள்ளாட்சித்தேர்தல்ல உங்க|ளைக்கண்டுக்கலை,அதானே காரணம்?=================

10   . மக்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தவே, பொதுக் கூட்டங்களில் பள்ளிக்கூட ஆசிரியர் போல் நடந்து கொள்கிறேன் - .விஜயகாந்த்.- # அப்போ கூட்டத்துக்கு வராம இனிமே  மக்கள் கட்  அடிச்சிடப்போறாங்க=====================


11 

வோட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்- உறுதி மொழி ஏற்க தேர்தல்ஆணையம் அழைப்பு# வாக்குக்கு பணம் தரமாட்டோம்னு கட்சிக்காரங்களை சத்தியம் செய்யச்சொல்லுங்க


=====================


12 கட்சிக்காரர்களிடம் நான் காட்டுகிற கோபம் வேறு, ஊழல்வாதிகளிடம் காட்டுகிற கோபம் வேறு-விஜயகாந்த்.# நீங்க எது சொன்னாலும் கோபத்தை அடக்கி பல்லைக்கடிச்ட்டு பொறுத்துக்கறோம்


==================


13 கட்சிக்காரர்களிடம் ,ஊழல்வாதிகளிடம் நான் காட்டுகிற கோபம் வேறு, வேறு-விஜயகாந்த்.# குணத்தில் எனக்குப்பிடிக்காதது கோபம்தான் -னு நீங்க மாறனும்


=====================

14 . சிறு வயதில் நான் இந்த இயக்கத்திற்காக உழைத்ததை விட, 100 மடங்கு மேலாக, ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். -கலைஞர் # ஆனாலும் அவருக்கு வழி விட மாட்டேங்கறீங்க


===========

15  ஸ்டாலின் ஆற்றும் பணி என்னையே பொறாமை கொள்ளச் செய்கிறது- கலைஞர் # தேர்தல் அறிக்கைல பாமக வை காப்பி அடித்தது போல் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில்  மகனுக்கு விட்டுத்தரலாமில்ல?============================


16   புளித்துப் போன அரசியல் வசனங்களையும், பழைய தலைவர்களின் பெயரையும், இலவசங்களையும் சொல்லி ஏமாற்றும் சக்தியை துரத்தி அடியுங்கள்.- தமிழிசை # இதுக்கு நேரடியா ஜெ வை விரட்டவும்னு சொல்லி இருக்கலாம்


====================


17  ஓய்வறியா உழைப்பாளி கருணாநிதியை தந்தையாகப் பெற்றது என் தவப்பயன்!- முக ஸ்டாலின் # நகர மாட்டேங்கறார்னு நாசூகா சொல்றாரு


======


18

கடைசி மூச்சு வரை இந்தியாவில்தான் இருப்பேன்... என் அஸ்தி இங்குதான் கரையும்! - சோனியா உருக்கம் # ஆனா ஆஸ்தி மட்டும் ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டில் மறையும்?


==================


19 நாலே நாலு நாளைக்கு நான் முதலமைச்சரா இருக்கணுங்க!- கஞ்சா கருப்பு # ஜெ,கலைஞர்,விஜயகாந்த், அன்புமணி, சீமான் இப்டி ஆல்ரெடி 5 பேரு க்யூ ல நிக்கறாங்க. கடைசியா போய் நில்லுங்க


================

20 நடிகர் சங்கத்துக்கு ரூ 1 கோடி... விஷாலிடம் நேரில் வழங்கியது லைக்கா நிறுவனம்! # ஐ டிஸ்லைக்


=======

0 comments: