Thursday, July 28, 2016

தலைவரே! யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தானே சொன்னீங்க?


நேரு வைப்புகழ்ந்தீங்ககளா?
நேர் வழில தான் நடப்பேன்னேன்.நேரு வழில தான் நடப்பேன்னு சொன்னதா புரிஞ்சுக்கிட்டாக


=================


2 தலைவரே! யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தானே சொன்னீங்க?
ஆமா.
துரோகியை மன்னிக்கக்கூடாதுனு இப்போ பொங்கறீங்க்ளே ஏன்?


===============


3 தலைவரே!,எம்ஜிஆரை கட்சியை விட்டு கிளப்புனது யாரு?
நான் வைகோ வை நைசா கழட்டி விட்டது யாரு? நான்
உப்பு தின்னா தண்ணி குடிக்கனும் இல்ல?

============

4 ஒரு வருஷமா பிரேமம் படம் பார்க்காம வாழ முடிந்தது


சார், உங்க பர்சனல் லைஃபே பிரேமம் திரைக்கதை மாதிரிதானே? எஞ்சாய்


===================

5 டாக்டர்,மில்க் மெய்டு எக்ஸ்பயரி முடிஞ்சு 11 மாசமாச்சு. ஆனா கெட்டுப்போகல. தின்னா என்ன ஆவேன்..?

பல்க் கா பிராப்ளம் வரும். எனக்கு ஃபீஸ் பெய்டு பண்ண வேண்டி வரும்


================

உங்க வீட்ல யாருமே டென்சன் ஆக மாட்டீங்களாமே?

ஆமா, மொத்தமே 3 SON தான் , எப்படி டென் சன் ஆக முடியும்?


===============

7 இரும்படிக்கும் பட்டறையில் ஈக்கென்ன வேலை?

இரும்பை சுத்தியல்ல அடிக்கும்போது கைல அடிபட்டு ரத்தம் வந்திருக்கும், அதனால ஈ வந்திருக்கும்


============

8 ரெம்ப அழகா இருக்கீங்கனு எந்த அழகான பொண்ணும் யாருக்கும் சொல்றதில்ல
ராங் மிஸ். அந்தப்பொண்ணோட அம்மாவை அழகுன்னு சொல்லி இருக்கும்
=============9 மிஸ்! உங்க மடில பல வருசம் குடி இருக்கனும்


சாரி. அது ரிசர்வ்டு & எங்கெஜ்டு. மாடில வேணா ஒரு வீடு காலி இருக்கு , மாசம் 7000 ரூ வாடகை 5 வருசம் குடி இருந்துக்கோ

=================


10  தலைவரே! உங்க குழந்தை ஸ்கூல்ல நடக்கும் பெற்றோர் சங்க மீட்டிங் இது.

அடடா, சாரி , பழைய ஞாபகத்துல அன்பு மணி ஆகிய நான் அப்டினு சொல்லிட்டேன்


====================

11


டாக்டர். அடிக்கடி கேசரி சாப்பிடறேன், இது சரியா?


கேசரி அடிக்கடி சாப்பிட்டா சுகர் சரியா(து)


===================

12
  •  மிஸ் ! மருதாணி சூப்பரா சிவந்திருக்கே? யாரை மனசில் நினைச்சுக்கிட்டு  வெச்சீங்க?

இப்படி யாராவது கேட்பாங்கன்னு நினைச்ட்டே வெச்சேன்


====================


13 டாக்டர், பித்த உடம்பா? நல்ல உடம்பா?ன்னு கண்டு பிடிக்க மெடிக்கல் செக்கப் செய்யாம எதுனா வழி இருக்கா?

 மருதாணி வெச்சுப்பாருங்க, நல்லா சிவந்தா நல்ல உடம்பு

===================


14 

  டியர், 24 கலர்ல நெயில் பாலிஷ் வெச்சிருக்கேன். எது போட்டுக்கட்டும்?

 இயற்கை நமக்கு அளித்த மருதாணி கலர் சிவப்பு தானே?

==============


15 கலைஞர் டிவி ல இறைவி படம் போட்டா டைட்டில் மாத்திடுவாங்க.

என்னன்னு?
விடுமுறை தினவி

============

16 நா சொன்னதும் திருப்பி எனக்கு 143 சொல்லிடுச்Talĸιng Toм


மிஸ்! அது சொல்வதைச்சொல்லும் கிளிப்பிள்ளை.நாங்க எப்போதும் உங்க பேர் சொல்லும் பிள்ளை


=============

17 சார்.உங்க பசங்க 2 பேரும் பொண்ணுங்க கிட்டே டபுள் மீனிங் ல பேசறாங்க.

சாரி டீச்சர்.அவங்க ட்வின்ஸ். அட்ஜஸ் பிளீஸ்


==============

18 ஒரு common sense கூட இல்லாத காட்சி அமைப்புகள் னு விமர்சனம் வருதே?

இது யூ படம்.காமன் சென்சோட சீன் வெச்சா ஏ படம் ஆகிடும்.அதான்


=================

19 வேலை ன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் -இப்டிக்கூட டைட்டில் வைப்பாங்களா?

2ம் பாகம் டைட்டில் - சேலைன்னு வந்துட்டா ஜொள்ளுக்காரன்

================

20 ஆளாளுக்கு கை ஜோசியம் பாக்காங்க

மிஸ்.உங்க ஆபீஸ்ல இருக்கறவங்க பக்கா காங்கிரசா இருக்கும்.அல்லது பிஜேபி கேசா இருக்கும்.இதான் சாக்குன்னு


=================

0 comments: