தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை 100 கோடி ரூபாய் வசூல் என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.ஆனால் ஹிந்தி,தெலுங்கு ,கன்னடப்படங்கள் மிக சுலபமாக 1000 கோடி வசூலைத்தொட்டு விடுகின்றன.இப்போது இந்திய அளவில் வெளியாகி இருக்கும் படங்களில் 1000 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை செய்த படங்களைப்பற்றிப்பார்க்கப்போகி
1. Dangal (2016)- ஹிந்தி. பயோகிராபிக்கல் ஸ்போர்ட்ஸ் டிராமா
பொதுவாக ஸ்போர்ட்ஸ் டிராமா வகைப்படங்களை அனைத்துத்தர மக்களும் ரசிப்பார்கள் என சொல்லி விட முடியாது.அதற்கென்று ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸ் மட்டுமே உண்டு.
வெறும் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 2200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது இந்தப்படம்.
அமீர்கானின் சொந்தப்படம் இது.அவர் தான் நாயகனும் கூட.இது பயோகிராபிக்கல் மூவி.இந்தியாவின் முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனையின் கதை.சகோதரிகள் இருவருக்கும் அவர்களது அப்பாவே கோச் ஆக இருந்து பயிற்சி தருவார்.
2 Baahubali 2 The conclusion (2017) தெலுங்கு. ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் மசாலா
கட்டப்பா ஏன் பாகுபலியைக்கொன்றார்?என்ற முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை எக்கச்சக்கத்துக்கும் எகிற வைத்தது.
எஸ் எஸ் ராஜமவுலி இந்தப்படத்தின் வெற்றிக்குப்பின் இயக்குநர் ஷங்கரை பிரம்மாண்டத்தில் ஓரம் கட்டினார்.
பிரபாஸ் சம்பளத்தை எங்கோ கொண்டு சென்ற படம்
அனுஷ்கா, தமனா இருவரின் கிளாமர் ,ரம்யா கிருஷ்ணனின் கெத்தான நடிப்பு படத்தின் பிளஸ்.
250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 1810 கோடி ரூபாய் வசூலை அள்ளியது
பெண்ணின் மீது கையை வைத்தால் வெட்ட வேண்டியது அவன் கையை அல்ல,தலையை. என்ற வசனம் செம ஹிட்டடித்தது.
3 KGF 2 (2022) கன்னடம் பீரியாடிக் ஆக்சன் மசாலா
பொதுவாகக்கன்னடப்படங்கள் எல்லாம் மலையாளப்படங்களை விட லோ பட்ஜெட்டில் தான் தயாராகும்.அதன் சக்சஸ் ரேஷியோவும் குறைவு.
நாயகன் யாஷ் க்கு அதிர்ஷ்டம் தான்.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 1250 கோடி ரூபாய் வசூலித்து யாஷின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் ஆக்சன் காட்சிகள் அதகளமாக அமைந்தது.மாஸ் மசாலாப்படத்துக்கான பஞ்ச் டயலாக்சும் ஹிட் ஆனது.
யாரோ ஒரு பத்துப்பேரை அடிச்சுப்பெரிய டாண் ஆனவன் இல்லைடா ,நான். நான் அடிச்ச பத்துப்பேரும் டாண் தான் என்ற வசனம் வரும்போது தியேட்டரில் விசில் பறந்தது.
4 RRR (2022) தெலுங்கு எபிக் பீரியட் ஆக்சன் டிராமா
ராம்சரண் + ஜூனியர் என் டி ஆர் காம்போவில் இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த சிக்சர் இது.இரு நாயகர்களும் இணைந்து பாடும் பாடலுக்கு நடன வடிவமைப்புக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
டால்பி சினிமாவில் வெளியான முதல் இந்தியப்படம் இது.
550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 1387 கோடி ரூபாய் வசூலித்தது.
5. Jawan. (2023) ஹிந்தி ஆக்சன் திரில்லர்
இயக்குநர் அல்டி படங்கள் என்றாலே சொந்த சரக்கு இருக்காது.ஹிட் ஆன பல படங்களின் நல்ல காட்சிகளை வைத்து ஒரு ஹிட் படம் தந்து விடுவார்.
தமிழர்கள் தான் ஏமாந்து அவரது படங்களை ஹிட் ஆக்குகின்றனர் என்றால் மும்பைவாலாக்கள் அதற்கு மேல்....
ஷாரூக்கானின் நடிப்பில் வந்த புளித்துப்போன கதை மெகா ஹிட் ஆக்கி விட்டார்கள்.
எஸ் ராமகிருஷ்ணனின் வசனம் பக்கபலமாக அமைந்தது.நயன் தாராவுக்கு பேர் சொல்லும் ஒரு படம்.
அனிரூத்தின் இசையில் பிஜி எம் தெறித்தது.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 1148 கோடி சம்பாதித்தது.இதன் மூலம் அட்லீயின் சம்பளம் ரூ 100 கோடி ஆனது.
6. Pathaan (2023) ஹிந்தி ஆக்சன் திரில்லர்
ஒரே ஆண்டில் ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்து விட்டது.
ஷாருக்கான் ,தீபிகா படுகோன்,ஜான் ஆப்ரஹாம்,டிம்பிள் கபாடியா. நடித்த படம்.
தேச பக்திப்படங்கள் என்றாலே மும்பைவாலாக்களுக்கு மிகவும் பிடிக்கும்.நமக்குப்பழக்கமான பழைய கதை தான்.மேக்கிங்கில் மிரட்டி விட்டார்கள்.
250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 1050 கோடி வசூலித்த படம்.
7. Pushpa 2 the rule (2024) தெலுங்கு. ஆக்சன் டிராமா
அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் ஜாக்பாட் ஹிட் இது.கதை என்று பார்த்தால் முரளி நடித்த அதர்மம் படக்கதை தான்.சந்தனக்கடத்தல் வீரப்பன் மாதிரி ஒரு ரவுடியின் கதை.
ஊ சொல்றியா மாமா ஓ சொல்றியா. முதல் பாக மெகா ஹிட் பாட்டு ரீல்ஸ் ஆகப்போட்டுத்தள்ளினார்கள்.பகத் பாசிலும் இருந்ததால் பான் இந்தியா படமானது.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 1800 கோடி ரூபாய் வசூலித்த படம் இது.
8. கல்கி 2898 (2024)தெலுங்கு எபிக் மைத்தலாஜிக்கல் சயின்ஸ் பிக்சன் மூவி
கமல் வில்லனாக நடித்த படம் என்று தமிழில் விளம்பரம் செய்தும் தமிழ்நாட்டில் இது பிளாப் ஆனது.
பிரபாஸ் நாயகனாக நடித்த இந்தப்படம் முதல் பாதி சாண்டில்யன் நாவல் டைப்பில் போகும்.அமிதாப்பச்சன் நல்ல நடிப்பை வழங்கி இருந்தார்.தீபிகா படுகோனே,இது நம்ம ஆளு ஷோபனா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
முதல் பாகத்தில் கமல் கெஸ்ட் ரோல் தான்.
600 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 1100 கோடி வசூலித்தது.
1000 கோடி வசூல் கிளப்பில் எல்லாப்படங்களும் தமிழ் நாட்டிலும் வெற்றிகரமாக ஓடினாலும் கல்கி மட்டும் தமிழ் நாட்டில் ஓடவில்லை.
9. Dhurandhar (2025) ஹிந்தி
ஸ்பை ஆக்சன் திரில்லர்
ரன்வீர் சிங் நாயகனாகவும் ,அக்சய் கன்னா வில்லனாகவும் நடித்த படம்.இதில் வில்லனின் கேரக்டர் வலிமையாக எழுதப்பட்டிருக்கும்.வில்லனின் நடிப்பும் தோரணை யாக இருக்கும். அலை பாயுதே மாதவன் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருப்பார்.
விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் பேபியாக வந்த பேபி சாரா இதில் குமரி சாரா அர்ஜூன்.ஆனால் நாயகிக்கு அதிக வேலை இல்லை.
தேசபக்திக்காட்சிகள் வலியபுகுத்தப்பட்ட பிராப்பகண்டா படம் என ஒரு சாரார் விமர்சித்தாலும் மெகா ஹிட் அடித்தது.படத்தின் ரன்னிங் டைம் மூன்றரை மணி நேரம்
255 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1428 கோடி வசூலித்த படம்
10. Dhurandhar The revenge. (2026) ஹிந்தி. ஸ்பை ஆக்சன் திரில்லர்
சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்தப்படத்தின் வெற்றியைப்பார்த்து மிரண்டு போய் அடுத்த படம் இது போல் ஒரு ஸ்பை திரில்லர் ஆக்சன் மூவாகத்தான் வேண்டும் என்றாராம்.அந்த அளவுக்கு படம் மெகா ஹிட்.
ரன்னிங் டைம் மூன்றே முக்கால் மணி நேரம்.ஆனால் ஒரு சீன் கூட போர் அடிக்காது.255 கோடி பட்ஜெட்டில் உருவாகி 1852 கோடி. வசூலித்த படம்
thanx - THENSITTU DIWALI SPL ISSUE