Tuesday, March 08, 2016

கலைஞர் - ஸ்டாலின் லடாய்! ??

1  காஞ்சீபுரத்தில் நாளை தே.மு.தி.க. மாநாடு; மாநாட்டின் வெற்றியை தடுக்க முயற்சி என்று விஜயகாந்த் குற்றச்சாட்டு # டாஸ்மாக் லீவ் விட்டுட்டாங்களா?============2  குஷ்பு எனக்கு பாட்டி முறை-இளங்கோவன் # அப்போ நக்மா கொள்ளுப்பாட்டி முறையா? சுந்தர் சி தாத்தா முறையா? சும்மா எதுனா அடிச்சு விடக்கூடாது


============

3 தேர்தலுக்கு பின்னரும் நமக்கு நாமே பயணம் தொடரும்- ஸ்டாலின் #  கடைசி வரை நடந்துட்டுதான் இருப்பீங்க, சி எம் கனவு நடக்காதுனு தெரிஞ்சிடுச்சா?


--================

ஈரோட்டில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு: ஸ்டாலின், , வைகோ, வாசன், ராமதாஸ் பங்கேற்பு # தேர்தல்  வருது தேர்தல் வருது டும் டும் டும்


==============


கடனை திருப்பிச் செலுத்தாததால் நடவடிக்கை: விஜய் மல்லையா  சொத்துகளை விற்பனை செய்ய 4 வங்கிகள் திட்டம் # நாலு பேருக்கும் நாமம் போட்டுட்டாரா?


==============

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! # அடடா, இனிமே அது எக்ஸ் PRESS தானா?


===============


எந்த வழக்கானாலும் சந்திப்போம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #  நம்ம மேல மட்டும்  ஏன் இத்தனை வழக்கு வருது? சிந்திப்போம்==============


'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் ஹீரோவாக ரஜினி: உறுதி செய்தார்  இயக்குநர் சித்திக் #  நைஸ். டைட்டில் காதல் தந்திரன்?


=============

சுற்றுப்பயணங்களை முடித்த பிறகே கூட்டணி முடிவை அறிவிப்பேன்- ஜி கே வாசன் # முருகர் இப்டி கிளம்பி தான் விநாயகர் கிட்டே கோட்டை விட்டாரு


================

10 இந்த ஆட்சியின் முடிவுக்காக நாட்களை எண்ணிக்கொண்டு வருகிறோம்- ஸ்டாலின் # 5 * 365 = 1825 நாட்களும்  எண்ணிக்கிட்டே இருப்பீங்களா?


===============


11 வெள்ளம் பாதித்த  அனைத்து தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முடிவு ..காங் அதிர்ச்சி # வெள்ளத்தால காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே பாதிப்பு போல

===============

12  . முதல்வர் சித்தராமையா, மோடியை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.- பி.எஸ்.எடியூரப்பா  # வெளிநாடு டூர் போக சித்தமாகிட்டார், டோண்ட் ஒர்ரி


==============


13 கடிகார விவகாரத்தை திசை திருப்ப முயற்சி:தேவகவுடா குற்றச்சாட்டு # சித்த ராமையாவுக்கு அரசியலில் டைம் சரி இல்லையாம், என்ன பண்ணுவாரு ? பாவம்


=============

14  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தமாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் கைது  # புருஷனுக்கு தலையணை மந்திரம், மாமியார்க்கு தலையணை எந்திரம்

================

15   ஜெ., அறிவித்த சலுகைகள் போதாது: போராட்டத்தை தொடர அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு # பேராசை பெரு நஷ்டம், பணிக்கு திரும்பலைன்னா ரொம்ப கஷ்டம்


================16  ஊட்டி நகராட்சியின் வருமானத்தை உயர்த்த அதிரடி தீர்மானங்கள் # ஊரார்  காதலை “ஊட்டி” வளர்த்தால்  ஊட்டியின் வருமானம் தானே உயரும்================


17  தொகுதி செல்லாத எம்எல்ஏ வை  நீக்குவோம்-ஸ்டாலின்  # அப்பா மேல 1000 கோபம் இருந்தாலும் பேசி தீர்த்துக்கனும்=================


18  மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா!- அன்புமணி  #  ஏமாற்று , முன்னேறு , அரசியல் சதுரங்க வேட்டைகள்


=================


19  சீர்திருத்த திருமணங்கள் தான் சிறந்தது- அன்பழகன், # 50 பவுன் சீர் தர்றேன்னா 75  பவுன் கேட்டு சீர் திருத்தம் செய்த திருமணம்?


================

20  , ஜெ சென்னையை தவிர, வேறு எந்த ஊர்களுக்கும் சென்று, மக்கள் பிரச்னையை கேட்கவில்லை.-EVKS # ஜெயா நியூஸ் ல மக்கள் நலம்னு சொன்னாங்களாம்


=======================

0 comments: