Tuesday, March 29, 2016

ஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை

1   இந்த தேர்தல்ல MLAவா அந்தக்கட்சி சார்பா நிக்கப்போறேன்

ஆசை தீர நின்னுக்குங்க, ஜெயிச்சுட்டா அப்புறம் நிக்க முடியாது,குப்புற விழுந்தேகிடக்கனும்


============


2 தலைவரே! 500 கோடி ரூபா வாங்கிட்டு கூட்டணி வெச்சிருக்கீங்களே? இது திருட்டு இல்லையா?

வாங்குனா நாம திருடன்னா கொடுத்தவன் எவ்வளவு பெரிய திருடன்?


==================

3 டியர், நம்ம காதல் கை கூடுமா?

நேத்துத்தானே  உள்ளங்கை கோர்த்துட்டு வாக்கிங்க் போனோம், அப்போ கை கூடிடுச்சே?


================

4 டீச்சர், மறதிக்கு  சின்ன ர வா? பெரிய ற வா?

சின்ன வீட்டை மறந்துட்டா அதுக்கு சின்ன ர, பெரிய வீட்டை மறந்துட்டா  அதுக்கு  பெரிய ற============


5  ஹாய்  ஹசினா
அட! நீங்களா  என் பேர் சொல்லிக்கூப்பிட்டீங்க? திருப்பிக்கூப்பிடுங்க
அனீஷா
 வாட்?
 HASINA    வை திருப்பிக்கூப்ட்டா  ANISAH


==================


தலைவரே! எதுக்காக இப்போ திருப்பதி போனீங்க?
எல்லார்க்கும் அல்வா குடுத்துட்டதா கோவிச்சுக்குவாங்க.அதான் லட்டு தரப்போறேன்


========

7 சன்னி லியோன் என்னை பிளாக் பண்ணிட்டாரு.
ஏன்?ஏதாவது இன்டீசன்ட்டா பேசுனியா? இல்லை.டீசன்ட்டாவே பேசிட்டு இருந்தேன்.கோவிச்சுக்கிச்சு

===========

8 போக்கிரி ராஜா படத்துல விஜய் , அஜித் ரெஃப்ரன்ஸ் இருக்கும்னு எனக்கு முதல்லியே தெரியும்
எப்டி? போக்கிரி விஜய் படம் , ராஜா அஜித் படம்

==============


9 நான் பொழப்புக்காக சென்னைக்கு வந்திருக்கேங்க
அப்போ நாங்க எல்லாம் சாகறதுக்கா வந்திருக்கோம்?

===========


10 மிஸ்! உன்னோட ஒவ்வொரு ட்வீட்டும் அப்டியே ஒரு feelingsஸோட இருக்கு.
எதுக்கும் 5 அடி தள்ளி நின்னே பாராட்டுங்க டாக்டர், பயமா இருக்கு

============

11 தலைவருக்கு 2 சம்சாரமா?
ஏன் கேட்கற? பொஞ்”சாதி” இரண்டொழிய வேறில்லைனு சொல்றாரே?

============

12 தலைவரே! மே 16 தேர்தல் ம்ம், 1+6 = 7 வருது. மக்களுக்கு 7 1/2 தான் யார் ஜெயிச்சாலும்


===================


13 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ் னு தலைவர் வாழ்த்தறாரே?
மே.16 தானே தேர்தல்

===============

14 டைரக்டர் சார்.சாய் பல்லவி கால்ஷீட் கிடைக்கலை.என்ன பண்ணலாம்?
அறுவடை நாள் பல்லவியை புக் பண்ணி.சாய்ஞ்சா மாதிரி நடக்கச்சொல்லிடலாம்.


===============


15 சார்.ஹனுமலருக்கு அனுப்ப வேண்டிய டிஎம் மை பனி மலருக்கு அனுப்பிட்டேன்.இப்போ என்ன செய்ய?


குமாரசாமி = சிம்ப்பிள்.பனி மலருக்கு அனுப்பறதை ஹனுக்கு அனுப்பிட்டா போதும்


==============

16  டாக்டர்.ரெட் ஒயின், ஒயிட் ஒயின் இரண்டில் எது ஆரோக்கியமானது?
ரெட் படம் அவுட்.அப்போ ஒயிட் தானே பெஸ்ட்?

===========
17  டியர், நான் தோழி கிட்டே பேசிட்டுஇருக்கும்போதுஎதுக்குஎன் துப்பட்டாவைஉருவிட்டு ஓடறீங்க?


என் கவனத்தை திசை திருப்ப செய்யும் செயல்கள் அழகுன்னியே?

=================


18 மேடம், உங்க முதல் காதல் பற்றி சொல்லுங்க

கிளாமர் நடிகை = நான் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது 47 பேர் லவ் பண்ணானுங்க


===================

19 ஒரு அரசியல்வாதிக்கு சொறி சிரங்கு வந்துட்டா தொண்டர்கள் எப்டி கோஷம் போடுவாக?
இந்தப்படை போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?


==================


20 டாக்டர்.இது படர் தாமரை யோ ன்னு டவுட்டா இருக்கு
பேசாமா பிஜேபி ல சேர்ந்திடுங்க மேடம்


=================

0 comments: