Thursday, March 31, 2016

விடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?

1 தமிழக தனியார் பள்ளிகளிலும் தேசியகீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் -  ஹைகோர்ட் # இதை சொல்லிக்கொடுக்க ஒரு பாட்டு டீச்சரும் வருவாங்களா? ஐ ஜாலி

==========

பெண் போலீசார், புகார் கொடுக்க வரும் பெண்கள் உடன் உல்லாசம்.. திருப்பதி டிஎஸ்பி மீது பரபரப்பு புகார் # அமாவாசை கொடுத்தா அல்வா, இவரு லட்டு


============3 த.மா.கா. யாருடன் கூட்டணி? அடுத்த வாரம் அறிவிப்பு- ஜி.கே.வாசன் # விடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?
===========4 திமுக-தேமுதிக கூட்டணிக்கு எதிராக தயாநிதி அழகிரி கொந்தளிப்பு! # அழகிரியே அடக்கி வாசிக்கறாரு, சின்ன கிரி ஏன் குதிக்கறாரு?
==============5 தமாகாவில் போட்டியிட 4886 பேர் விருப்ப மனு - ஜிகே.வாசன் # 4886 = 4+8+8+6 = 26=2+6=8 அஷ்டமத்துல சனி, நீங்க எப்பவும் தனி==============
6 சமூக வலைதளங்களில் தவறாக பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை:ராஜேஷ் லக்கானி # மேடை ஏறி பொய்யா பிரச்சாரம் பண்ணினா பதவி! நல்லாருக்குய்யாநியாயம்=============7 காமராஜரைவிட அம்மா சிறந்த முதல்வர்!
-ஆனந்தராஜ்! # ஒரு முதல்வர் எப்படி எளிமையாய் வாழனும் என்பதற்கு உதாரணம் காமராஜர்.ஆடம்பரத்துக்கு உதா ஜெ
===============
8 அதிமுக அரசின் அவலங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்வோம்- சரத்குமார் # எது? நாலே முக்கால் வருசமா கால்ல விழுந்து கிடந்தீங்களே அந்த அரசா?
===============9 கூட்டணி அமையவில்லை; வதந்திகளை நம்பாதீர்: - தேமுதிக # பேரம் இன்னும் படியவில்லை என பொருள் கொள்க, விரைவில் கேட்ட பொருள் வெல்க
=============10 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர்களை வரவேற்க பட்டாசு வெடிக்கத் தடை # நம்மாளு வேணும்னே வெடியைக்கொளுத்தி வேண்டாதவர் மேல போட்ருவான்================

11 வயதில் அரைசதத்தை நெருங்குபவர் இளைஞர்களின் தலைவரா? ராகுலை தாக்கிய ஸ்மிருதி இரானி # 50 வயசைத்தாண்டியும் இளைஞர் அணித்தலைவரா இருக்காங்களே?=============


12 விஜயகாந்த் முடிவு எடுக்கவில்லை கூட்டணி குறித்து திட்டமிட்டு வதந்திகள் # தெளிந்த பின் தெளிவான ஒரு முடிவு எடுப்பார்

=============


13 ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல் # தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தமிழகம், வழி இல்லை


=============

14 கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா அவசரப்படாது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் # அவசரம், ஆத்திரம் வெற்றிக்கு அவசியப்படாது,பொறுமை காக்கவும்


===============

15 கலால் வரி விதிப்புக்கு எதிராக தமிழகத்தில் 4-வது நாளாக நகைக்கடைகள் அடைப்பு # நடுத்தர மக்கள் 4 நாளா நிம்மதியா இருக்காங்க, தொடரட்டும்

============


16 ஆசிரியையிடம் ஆபாசமாக பேசியஅமைச்சரின் மகனுக்கு 'நோட்டீஸ்' # நோட் திஸ், பெரிய இடம்னா விசாரணை மட்டும், சாதா ஆள்னா கும்மி இருப்பாங்க அப்பவே

==============

17 தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்க கட்சிகளுக்கு தடை இல்லை: நிதி ஆதாரங்களையும் காட்ட வேண்டும்- தேர்தல் கமிஷன் # நிதிகள் ஜாக்கிரதை, வலை

==============

18 செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததுதான் ஜெ.,யின் சிறப்பு: - நடிகை நக்மா # ஆடம்பர விழா எடுக்காம நடந்த ஒரே திறப்பு விழா அதானே?


============


19 தி.மு.க., பக்கம் விஜயகாந்த் போக மாட்டார்':வைகோ நம்பிக்கை # இப்போ அங்கனதான் பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு பாஸ், 500 கோடி, 59 சீட்


===========


20 மாணவியர் விடுதிக்கு, இரவில்
சோதனைக்கு சென்ற தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தரராஜன் # விதி இவர் வாழ்க்கைல விளையாடிடுச்சு, பதவி ஊ ஊ=================

0 comments: