Monday, March 28, 2016

நாம் மீட்பர் கட்சி

1  யாரையும் தப்ப விட மாட்டோம்: அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசத்திற்கு ஜெட்லி பதில் # எல்லார்ட்டயும் காம்ப்பன்சேசன் வாங்கிடுவீங்க?

============


இரட்டை வேடம் போடும் பா.ஜ. அரசு: ராகுல் குற்றச்சாட்டு # சினிமால, அரசியல்ல இரட்டை வேடத்துக்குதான் மவுசு==============3 DMK,ADMK விடமிருந்து தமிழகத்தை மீட்பதுதான் முதல் வேலை - சீமான் # நாம் தமிழர் கட்சி னு பேர் வெச்சதுக்கு நாம் மீட்பர் னு வெச்சிருக்கலாம்==============4 அமைச்சர்கள் யாரையும்

கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார் மோடி- ராகுல் # மந்திரிக்குக்கூடத்தெரியாமல் செயல்படுவரே ராஜதந்திரி
===============5 பிரச்னைக்குரிய கைக்கடிகாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு-சித்தராமய்யா பணிந்தார் # வாட்ச் திஸ் யுவர் ஆனர் அப்டின்னாரா? வாட்சை குடுக்கும்போது
===============6 தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இழுபறி ஏன்?

விஜயகாந்த் நிபந்தனை; ஸ்டாலின் முரண்டு # 35% வாக்கு வங்கி கிட்டே 12% வாக்கு வங்கி அதிகாரமா?ன்னுதான்==============7 80 சதவீதம் புதுமுகம் அ.தி.மு.க., திட்டம் # நம்ம ஜனங்க என்னைக்கு வேட்பாளரைப்பார்த்து குத்துனாங்க? சின்னத்தைப்பார்த்துத்தானே?==============8 'குனிந்தது போதும், நிமிர்ந்திடு தலைவா''.. தனிக் கட்சி தொடங்க ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் அழைப்பு # ரைட்டு அடுத்த.நாஞ்சில் சம்பத் இவர் தானா?ஆஹாங்
==============9 மூழ்கும் கப்பலில் இருப்பவர்கள் அபயகுரல் எழுப்புவதுபோல் உள்ளது: பொன் ராதா # அய்யா காப்பாத்துங்க.அம்மா காப்பாத்துங்க.ரெண்டே கேட்டகிரி==============
10 விஜயகாந்த் முடிவால் திருப்பம்:அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா?

மேக்கர் மட்டுமில்ல.க்யூன் மேக்கரும் கேப்டன் தான் போல.


==============

11 தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேரமாட்டார்: மக்கள் நல கூட்டணி தலைவர்கள் #,4 பந்தியே முடிஞ்சிடுச்சு.இப்போ போய் மண்டபம் எந்த ஏரியா?ன்னானாம்


==============


12 பல கோடி ஊழல். சரத்குமார் மீது நடவடிக்கை தேவை. நடிகர் சங்கம் புகார் # நடிகர் சங்கத்தலைவரா இருந்தே இவ்ளோவ் ஊழல்னா அரசியல் தலைவரா ஜெயிச்ட்டா?


===============

13 பலவீனத்தை உணர்ந்த கட்சிகளே கூட்டணி அமைக்கும் - சீமான் # அது அப்டி இல்லீங்க, கூடி வாழ்ந்தால் ஜெயிச்ச பின் “ கோடி” நன்மை. இப்டி


=================14 கலைஞர் ஏ1

ஜெ ஏ 2 - வை.கோ # தமிழன் ஏ1 ஏ2 வால் மாறி மாறி ஏமாற்றப்பட்ட ஏ3?==============


15 தேர்தல் நேரத்தில் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க நினைப்பது அரசியல் நாடகம்- ஸ்டாலின் # நாம மட்டும் தான் நாடகம் போடனும்னு அடம்பிடிச்சா எப்டி?=============

16 இரட்டை மெழுகுவர்த்தி சின்னம்: சீமான் அறிமுகம் # கட்சிப்பாடல்- நான் உள்ளுக்குள்ளே சக்ரவர்த்தி, ஆனா உண்மையில மெழுகுவர்த்தி?


================


17 தனித்து போட்டியிடும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை -ஜி.கே.வாசன் # சபாஷ்! இந்த உண்மையை ஒத்துக்கிட்டு அரசியல் ஜி கே உணர்ந்த முதல் தமிழர்


===============


18 உலக அளவில் ஊழல் வாதிகள் பட்டியலில் ஆ ராசா வுக்கு இரண்டாமிடம் - டைம்ஸ் நாளிதழ் # மறந்தாப்ல இதை கழக சாதனையாப்போட்றாதீங்க, மாட்டிக்குவீக================


19 ஒ.பி.எஸ் தலைமையில் 10 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை # ரஜினி- ஸ்ரீதேவி நடிச்ச நான் அடிமை இல்லை சன் டி வி ல போடறாங்களாமே? பார்ப்போமா?ன்னா


============


20 கலைஞர், ஸ்டாலின் படங்களுடன் 45 ஆயிரம் மாணவர்களுக்கு டிக்ஸனரி # தன்னை முன்னிலைப்படுத்துவதில் ஆர்வம் உள்ளதால் திமுக,அதிமுகவுக்குப்பின்னடைவே


===============

0 comments: