Friday, March 18, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18/3/16 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

1   புகழ்

2 விடாயுதம்

3 சவாரி

4  ஆகம்

5  என்று தணியும்


மலையாளம்

Darvinte Parinamam


Mohavalayam

Mohavalayam

Ithu Thaanda Police 

தெலுங்கு

10 Memu


ஹிந்தி

11 Kapoor & Sons

1   புகழ்

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடமே முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பி இருந்தனர். படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி இருந்தது. இதையடுத்து இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் மணிமாறன் தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.


2 விடாயுதம்

கொடிய விஷம் கொண்ட பாம்பை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, ‘விடாயுதம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. இதில் ராம் சரவணன் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லினர்’ பட புகழ் தன்வி லங்கோர் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். நாகமானிசி டைரக்டு செய்து இருக்கிறார். 

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- 

‘‘சாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் திரைப்பட கலையுலகம்தான். இந்த சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டு படங்களால்தான். சினிமா உயிருடன் நன்றாக இருக்க குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் நிறைய வரவேண்டும். ‘விடாயுதம்’ படத்தை சிறு முதலீட்டு படமாக எடுத்து இருக்கிறார்கள். 

சிறு முதலீட்டு படங்கள்தான் தியேட்டர்களில் அதிகமாக வெளியாகின்றன. அந்த படங்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன. சினிமாவை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டு படங்கள் வரவேண்டும்.’’ 

இவ்வாறு அபிராமி ராமநாதன் பேசினார். 

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க கில்டு அமைப்பின் செயலாளர் ஜாக்குவார் தங்கம், டைரக்டர்கள் ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன், நடிகர்கள் செந்தில், பிரஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், தயாரிப்பாளர்கள் ஜே.கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். 

‘விடாயுதம்’ என்பது பாம்பை குறிப்பது என்பதால் அதற்கு பொருந்துகிற மாதிரி படக்குழுவினர், ஒரு நல்ல பாம்பை மேடைக்கு கொண்டு வந்தார்கள். அது, படம் எடுத்து ஆடியது. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பிடித்துக் கொண்டு போக பக்கத்திலேயே ஒரு பாம்பாட்டி நின்று கொண்டிருந்தார். தமிழ்நாடு வன இலாகா, வனவிலங்கு நல வாரியம் ஆகியவற்றின் அனுமதியுடன் அந்த பாம்பு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

savari (N)


3 சவாரி

அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன்  கூறும் போது ' இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் வேகம் , எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தட தட என   ஓடும் திரைக் கதை உள்ளப் படங்களைத் தான் ரசிக்கின்றனர்.ரோடு  த்ரில்லர்  என்ற புதிய பாணியில் இந்தக் கதை  எழுதப் பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைகளுடன் ஜொலிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும' என்றார்.
அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி'  உரிமையை பெற்று உள்ள புதிய பட நிறுவனமான Entertainment brothers நிறுவனத்தினர்  ' இணைய தளங்களில் சவாரி படத்தின்  போஸ்டர்களை கண்டதில் இருந்தே எனக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடுதலாய் இருந்தது.எதேச்சையாக எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. படம் தொடங்கிய வினாடி முதல் பரப்பான இடைவேளை வரை எனக்கு  பிரமிப்புதான்.
இடைவேளையின் போதே எப்படியாவது இந்தப் படத்தை வாங்கி விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். படம் முடியும் போது என் முடிவு தீர்மானமாய் மாறிப் போனது.இந்தப் படத்தில் உள்ள வேகம், படத்தில் பணியாற்றி உள்ள இளைஞர்களின் உத்வேகம் என்பது அவர்களை சந்தித்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன்.
இயக்குனர் குகன் சென்னியப்பனின் இயக்கமாக  இருக்கட்டும்,ஒளிப்பதிவாளர்  செழியனின் நேர்த்தியான ஒளிப்பதிவாக இருக்கட்டும், மறைந்த கிஷோரின் படத்தொகுப்பில், ஜில் ஜங் ஜக்  படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஆகட்டும்,படத்தின் தொழில்  நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின்  வெற்றிக்கு உறுதுணையாக  இருப்பார்கள் என்பது நிச்சயம். படத்தை  பார்த்த வினாடியே புரிந்துக் கொண்டேன் . அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி 'ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் மிக மிக நம்பிக்கை உள்ளது'  என்றனர்.

4  ஆகம்

சரவணன் மீனாட்சி தொடர் இர்ஃபான் நடிக்கும் ஆகம்!

irfhanதனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார். ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்ஷிதா என ‘ஆகம்’ தேர்ந்த நதிகளை பெற்றுள்ளது. RV சரண் ஒளிப்பதிவில், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் கூறுயைல், “‘ஆகம்’ திரைப்படம் வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருடத்தின் ஆய்வுக்கு பின் எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்காகவும், படத்தில் உள்ள அழ்ந்த சமுதாய கருத்துக்காகவும் ஒப்புகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பதிவு தொடங்க உள்ளோம்.
இப்படத்தில் பிரபல பிரஞ்சு நடிகை அலியோன முண்டேனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.” எனக் கூறினார் இயக்குனரும், மாணவர்கள் மத்தியில் பிரபலமான கல்வியாளருமான முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.


5  என்று தணியும்

பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடித்துள்ள படம் ‘என்று தணியும்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாரதிராஜா, பி.வாசு, ஜெயம் ரவி, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் கருணாஸ் பேசும்போது, ‘பாரதி ராஜாவின் உதவியாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமா துறை அழிந்து வருகிறது. அதை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். பெரிய தியேட்டர்களில் சிறு படங்கள் அதிகமாக திரையிடப்படுவதில்லை. இதை சரிசெய்ய வேண்டும். வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. அவை அனைத்தும் விரைவில் திருட்டி விசிடியாக கடைகளில் கிடைக்கிறது. நான் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தரராகவும் இருந்திருக்கிறேன். இப்படி விசிடிகள் வெளியானால், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தரர்களின் நிலைமை என்ன ஆவது.

பெங்களூர் நாட்கள் என்ற படம் வெளியானது. அன்றே ஒரு இணைய தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது. இதை யார் கேட்பது. யார் தடுப்பது. படக்குழுவினரின் உழைப்பு வீணாகிறது. இப்படியே போனால், சினிமா அழிந்து விடும். நிச்சயம் சினிமா துறையை காப்பாற்ற வேண்டும்.

மயில்சாமி நல்ல மனிதர் என்பதை நான் பெருமையாக சொல்வேன். தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்வார். அவரின் மகன் நடித்துள்ள இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.


நன்றி - தினமலர்  தினமணி மாலைமலர்

0 comments: