Tuesday, March 29, 2016

மப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி ஒண்ணா சேரும்?

1  எனது வளர்ச்சியை தடுக்க சதி: பூச்சிமுருகன் மீது சரத்குமார் காட்டம் #  சும்மா பூச்சி காட்டாதீங்கனு எச்சரிச்சு அனுப்பிடுங்க

===============

ஊழலை மறைக்க ஜெ அமைச்சரவை மாற்றம்-ஸ்டாலின் # மாற்றம் முன்னேற்றம்கறத பாமக கிட்டே இருந்து உஷார் பண்ணிட்டாக போல


===========3 விஜய்காந்த் பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - திருமாவளவன் # விஜய்காந்த்தையே நம்ப வேண்டாம்னு சிலர் சொல்றாங்களே!===========

4 பா.ஜனதா ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் தா"மறை"கழண்ட பேச்சு. 4% வாக்கு சதம் இருக்குமா மேடம்?=============5 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து # நீங்களாவது பாஸ் ஆகுங்க ன்னாரா?
=========6 கடன் ஏய்ப்பாளராக அறிவித்ததற்கு எதிராக விஜய் மல்லையா மனு:விசாரணைக்குஏற்க நீதிமன்றம்மறுப்பு # 420 க்கு 144 போட பார்த்தாரு.முடியல
============7 கேப்டன் நாளை திருப்பதி பயணம்? உறுதியானது தேர்தல் கூட்டணி! #,யாருக்கு மொட்டை அடிச்சாரோ?============8 விஜயகாந்த்திடமிருந்து பாசிட்டிவ் பதில் வரவில்லை: ஒப்புக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் # பொட்டி வர்ல -கேப்டன்
=========9 தமிழகத்தில் தேர்தல் நாள் 16/5/2016 - செய்தி # 1+6+5+2+0+1+6 =21=2+1 =3 = திமுக வா? = அம்மா வா? குழப்பமா இருக்கே
=============10 சில பேருக்கு வயதாகிவிட்டது, "மெச்சூரிட்டி" இல்லை, ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி ’குட்டு’. ONEனு அத்வானி பாராட்டி இருப்பாரே?

================11 பட்டாசு வெடித்ததால் கோபம்.திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசாமல் சென்ற வைகோ! # கோபத்தைக்காட்டுபவன் கலைஞன்.கட்டுப்படுத்துபவன் தான் தலைவன்============

12 2011 தேர்தலை விட 2016 சட்டசபைத் தேர்தலில் 3 கோடி வாக்காளர்கள் அதிகம்! # புது வாக்குகள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராகவே பிரியும்


==============

13 நடத்தை விதிமுறை அமலானது.. இனி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க கூடாது: தேர்தல் அதிகாரி # உத்தரவின்றி உத்தரவே உள்ளே வராதே


==============

14 ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பணம் எடுத்துச் செல்லும் வியாபாரிகள் அதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும்-ராஜேஷ் லக்கானி #49,999 ரூபாயா 2 டைம் ?


==============


15 இன்றிலிருந்து அரசாங்கம் செயல்படக்கூடாது - தேர்தல் கமிஷன் # செயல்படாத அரசாங்கம்னு குறை சொன்னா தேர்தல் கமிஷன்தான் காரணம்னு பழி போடலாம்


==============16 தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி- ஜிபிஎஸ் கருவிகளுடன் பறக்கும் படை வாகனங்கள் # செக், டிடின்னா விட்டுடுவாங்களா?
===============17 வாட்ஸ்-அப்பில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்து இழிவாக விமர்சித்தால் சிறை: தேர்தல் அதிகாரி # தேர்தல் முடிந்தபின் நக்கல் அடிக்கலாமா?==========18 தனித்து போட்டியிட பா.ஜனதா தயாராகிறது: கூட்டணிக்கு கட்சிகள் ஒத்துவராததால் முடிவு

# நான் சோலோ ஆன தாமரை .4% வாக்கு கூட வாங்கலை

===========

19 தேமுதிக,பாமக இருவரையும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி - செய்தி # மப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி ஒண்ணா சேரும்?

============

20 தேமுதிக இழுபறியால் திமுக தேர்தல் பணியில் பாதிப்பில்லை... - ஸ்டாலின் # கனி மொழி பேச்சுவார்த்தையில் இருப்பதால் எல்லாம் கனி ந்திடும்னு தெம்பு


============

0 comments: