Wednesday, March 02, 2016

உங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா?ன்னு கூப்பிட்டிருக்கா

மிஸ்! பீர் அடிச்சீங்களா?


எப்டி தெரியும்?
வழக்கமா பொண்ணுங்க க்ளுக்னு தானே சிரிப்பாங்க? நீங்க கு”பீர்”னு சிரிச்சதா சொன்னீங்களே?==========

2  டாக்டர், எந்த பஸ் ஸ்டாப்பைப்பார்த்தாலும் என் பையன் சைட் அடிக்க அங்கே காரை நிறுத்துறான்

ஸ்டார்ட்டிங் பிராப்ளம் போல் ஸ்டாப்பிங்க் பிராப்ளமா?


================


டாக்டர்.நண்டு சூப் குடிச்சா எனக்கு mood வருமா?

வாமிட் தான் வரும்


========

4 யார் வந்தாலும் அரவணைப்போம்னு தலைவர் சொன்னாரா?

ஆமா.அதுக்கென்ன இப்போ?
மகளிர் அணித்தலைவியை கட்டிப்பிடிச்ட்டாரு

==========

5 5,வருசமா லவ் பண்ணியும் என் ஆள் சுண்டு விரலைக்கூட தொட்டதில்லை

ஓஹோஇது வரை கூடா நட்பு ன்னு சொல்.வெரிகுட்


===========

6 சார்.இது கேரளா.பக்கத்து சீட்ல தாராளமா உட்காரலாம்.


இட்ஸ் ஓக்கே மிஸ்! தமிழ் நாட்டு கலாச்சாரத்தை ் எந்த நாட்டுக்குப்போனாலும் பாலோ பண்றவன் தான் தமிழன்


============

7 மிஸ்.தாகமா இருக்கு.தண்ணி தர்றீங்களா?

சாரி.வாட்டர் கேன் ல வாட்டர் இல்ல.இது ஜூஸ்.
டிபன் பாக்ஸ் ல டிபனா இருக்கும்? சாப்பாடுதானே?குடும்மா


============

8 டியர், ஒரு முத்தம் கூட சரியா குடுக்கத்தெரியாதா? தடுமாறிட்டு இருக்கீங்க?


பர்ஃபெக்டா குடுத்தா  நான் எக்ஸ்பீரியன்ஸ்டுனு கண்டுபிடிச்சுடுவியே?


============

9  உங்க காதலியோட பெயர எப்டி போன்ல சேவ் ”பன்னி ” வச்சுருக்குறிங்க?

ஹாய், ஃபன்னி, உங்க கேள்வியிலேயே பதில் இருக்கே?


===============


10   டியர், எனக்கு கிஸ் தராம எதுக்கு என் தங்கச்சிக்கு கிஸ் தந்தீங்க?

 தப்புத்தப்பா தடுமாறி லவ் பண்றவனைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்னியே?==============11 அத்தி பூத்தாற்போலத்தான் உன்னைப்பார்க்க முடியுதுன்னு கவிதை எழுதிதரச்சொன்னேனே தந்தியா?

அத்தை பூத்தாற்போலனு தப்பா எழுதி மாட்டிக்கிட்டேன்


==================


12  டியர், ரொம்ப குளிருது

சரி, எவ்ளோவ் நேரம் தான்  ஏடிஎம் ல லவ் பண்றது, வா பார்க் போலாம்


=================


13  டெய்லியும் நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கணும்..அதுக்கு என்ன செய்ய?

 மிஸ்! சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கிட்டே அசிஸ்டெண்ட்டா சேர்ந்திடுங்க


================


14  மன்னா! சமரசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை என் எதிரி ஓலை அனுப்பி உள்ளான்

சம”ரசம்” பண்ண முடியலைன்னா சம”சாம்பார்”க்கு ஓக்கேவா? என கேளும்


=================


15  உங்க அண்ணனுக்கு தண்ணில கண்டம் இருக்கு

 அய்யய்யோ எனக்கு?

உங்களுக்குத்தான் சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லையே? சைடு டிஷ்ல கண்டம் இருக்கு


==================


16 உங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா?ன்னு கூப்பிட்டிருக்கா

 அதுக்கென்னா?

 என் பையன் அடி தாங்க மாட்டான்


==================


17  இது போலி டிகிரி சர்ட்டிஃபிகேட்னு எப்டி கண்டு பிடிச்ச?


உங்களுக்கு எந்த டிகிரி வேண்டுமானாலும் குறைந்த செலவில் ரெடி செய்து தரப்படும்னு AD அதுல


====================

18  லோன் வாங்குனதுல இருந்து பேங்க் பக்கமே வர்லையே ஏன்?

பேங்க் வராம இருந்தா வராக்கடன்ல தள்ளுபடி ஆகிடும்னு ஒரு நப்பாசை தான்

==================


19 டீச்சர், மக்காச்சோளம் என்பதே தப்புதான்

பாட்டனி மிஸ் பாரிஜாதம்= எப்டி?

அதை மண்ணில் புதைச்சேன், மக்கிடுச்சு, அப்போ மக்கும் சோளம் தானே?


=====================


20  லஞ்சப்பணத்தை கையால கூட  தலைவர் தொட மாட்டாராமே?

ஆமா, நிஜம் தான், அதைக்கையாள தனி ஆள்  கையாளா வெச்சிருக்கார்


=====================

0 comments: