Friday, March 11, 2016

ஆர் யூ ஜோக்"கிங்"?

1  கூட்டணிக்காகதொண்டர்களைஅடகுவைக்க மாட்டேன்' - விஜயகாந்த் # அதிமுக வை எதிர்த்த நீங்க 2011 ல் அதிமுக கூடவே கூட்டு வெச்சீங்களேஅதுக்குப்பேர் என்ன?
=============கிங்'கா? கிங் மேக்கரா? பிரேமலதா கேள்வி # தீபாவளிக்கு சங்கா? ( சங்கு சக்கரம்) புஷ்வாணமா? எது வேணும்?னு கேட்கற மாதிரி இருக்கு
=================ஜெயலலிதாவை கும்பிடுபவர்கள் எல்லாம் ஆண்களா ?- பிரமலதா  # சாதாக்கும்பிடு இல்லை, கூழைக்கும்பிடு,முக்கியமான சொல்லை விட்டுட்டீங்க

=============
4  அடிமை ஆட்சியை அதிமுக நடத்திக் கொண்டிருக்கிறது.- பிரேமலதா  # அடிமைப்பெண் படம் பார்த்து  தமிழன் குழம்பிட்டான் மேடம்

================5  மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச பயணம்: ஜெ  20 வருசமா  சரக்கு அடிக்கறேன், அப்போ மூத்த குடிமகன் தானேன்னு எவனாவது கிளம்பிடப்போறான்

===============
6  பதவிக்காக அடித்துக் கொள்ள வேண்டாம்: கருணாநிதி அறிவுரை  # அழகிரிக்கு சொல்ல வேண்டியதை  நம்ம கிட்டே சொல்றாரு, சாணக்கியரு===============
திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்போம் - காங்கிரஸ்  # 100 கூட கேளுங்க, ஆனா 25  தான் தருவோம் - கலைஞர் மைண்ட் வாய்ஸ்
===============
8  தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் பி.வி. ரமணா டிஸ்மிஸ் # பால் வளத்துறை அமைச்சர் பதவிக்கு பால் ஊத்திட்டாங்களா?சபாஷ்


============

9 நான் கிங் ஆக இருக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்: விஜயகாந்த் பேச்சு.# ஆர் யூ ஜோக்"கிங்"?


===========

10 வெற்று அறிவிப்பு அரசியல் செய்கிறார் ஜெயலலிதா: தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா ஆவேச பேச்சு.# வெற்றி அறிவிப்பு வரும் வரை அப்டிதான் தெரியும்


==========

11 ப்ரீடம் 251 நிறுவனத்தில் வருமான வரித்துறை ஆய்வு - முன்பதிவு நிறுத்தம். # சோனா முத்தா போச்சா? பேராசை பெரு நஷ்டம்

===========

12 ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள்: அமெரிக்கர்களுக்கு டோனால்ட் டிரம்ப் வேண்டுகோள்..# ஆப்பிள் பழம் கூட சாப்பிடக்கூடாதா?


============

13 சல்மான்கானுடன் நடிப்பதற்காக கோலி காதலை முறித்த அனுஷ்கா சர்மா. # நாம எதை வேணாம்னு சொல்றமோ அதை வேணும்னே (னு) செய்பவர்கள் பெண்கள்


===========

14 நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையான்னே தெரியவில்லை: சரத்குமார் # 1 தொகுதி பிச்சை போட்டா இருக்கீங்க.அதுவும் இல்லைன்னா இல்லை

=========

15 சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல். -செய்தி # அதிமுக கூட்டணியில் இருந்து விடுவிப்பு அப்டினு சரியாச்சொல்லுங்கப்பா


=============

16 திமுக கூட்டணி அமையாமல் தடுக்க உளவுத் துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு # விட்டா  அழகிரி  சண்டைக்குக்காரணமே ஜெ தான்னு சொல்வாரோ?


==============

17  தேமுதிக- MLA  8  பேர் ராஜினாமா செய்ததால் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை விஜயகாந்த் இழந்து விட்டார். # MONEY MAKE"KING" MANY


=============


18 தனித்துப் போட்டியிடுகின்ற துணிச்சலும், திறமையும் பாமகவுக்குதான் உள்ளது - ராமதாஸ் # போட்டி இட்டா போதாது, 10 லயாவது டெபாசிட் வாங்கனும்


=================

19   காங் கூட்டணியில் இணைய மாட்டோம் என மாநாட்டில் விஜய்காந்த்  கூறவில்லை - EVKS  # அப்போ அவர் பேசுனது உங்களுக்கு மட்டும் புரிஞ்சிடுச்சு?


================

20  அதிமுக ஆட்சி மீதானஎன்குற்றச்சாட்டில்உண்மையில்லைஎன்றால் வழக்கு தொடரலாம் - EVKS  # ஏய் நானும் ரவுடி தான்  கேஸ் போடு, எல்லாரும் பார்த்துக்குங்க


===================

0 comments: