Thursday, March 24, 2016

திரைக்கதை வசனம் பிரமாதம்

1  சாதாரண மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வரும் - மோடி # திரைக்கதை வசனம் பிரமாதம்.க்ளைமாக்ஸ்.ட்விஸ்ட் எப்போ வரும்?


===========2 கணக்கில் காட்டாத வருமானத்துக்கு 45 சதவீத வரி # அதான் கணக்குலயே காட்டலையே.எப்டி வசூலிப்பீங்க?
============3 இதுவரை தாக்கல் ஆனதில் சிறந்த பட்ஜெட் அத்வானி பாராட்டு # நல்ல நாள்லயே நலம்தானா வாசிக்கமாட்டாரு.இப்போ எதுக்கு ஜிங் ஜக் அடிக்கறாரு?============4 இதுவரைதாக்கல்ஆனதில் சிறந்தபட்ஜெட் -அத்வானி பாராட்டு # நல்ல நாள்லயே நலம் தானா வாசிக்காதவரு சுனாமி வர்றப்போ சுட்டும் விழிச்சுடரே வாசிக்கறாரே?=============5 நான் நடிக்க வேண்டிய படங்களில் பாட வேண்டிய அவசியமில்லை -ஸ்ருதிஹாசன் # பாடியும் காட்ட வேணாம் ,BODYயும் காட்டவேணாம்
=============6 திமுக இல்லை என்றால் மெட்ரோ ரயிலே இல்லை- கருணாநிதி # ஊழல் இல்லைனு சொன்னா மேட்சிங்கா இருந்திருக்கும்=============

7
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் மு.க.ஸ்டாலின் அறிக்கை.# வாத்தியார் கலைஞரா?============
8 மது விலக்கு கொண்டுவருவேன்

-ஸ்டாலின் # தேர்தல் கிட்டெ வந்தா எல்லாரும் உத்தம வில்லன் ஆகிடறாங்க.கதை வசனம் -ராம்தாஸ்.இயக்கம் -கலைஞர்

===========9 எவருக்கும் வாக்களியுங்கள்!ஆனால்
கவருக்கு மட்டும் வாக்களிக்காதீர்-சகாயம்IAS # தவறு செய்”தவரு”க்கும் வாக்களிக்காதீர்!அதுதான் ஜனநாயகத்தின் பவரு


===================


10 ஜல்லிக்கட்டால் தமிழகத்தில்BJP வெற்றிக்கு பாதிப்பு இல்லை- இல.கணேசன் # எப்படியும் ஃபெயிலாகப்போறம், பிள்ளையார் சுழி போட்டா என்ன?போடலைன்னா என்ன?


===============


11 உலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்; 36ஆவது இடத்தில் முகேஷ் அம்பானி # நம்ம தானைத்தலைவருக்கு தன்னடக்கம் ஜாஸ்தி


==================


12 மோடிக்கு கருணாநிதி பாராட்டு
காங்., கோஷ்டிகளுக்கு 'ஷாக்' # இந்த மாசம் விசாரணைக்கு வருது கனிமொழி 2ஜி ஊழல் கேஸ், அதுக்குத்தான் மோடிக்கு ஐஸ்=================


13 கலாம் பெயரில் கட்சி துவக்கம்:தடை கோரி ஜனாதிபதிக்கு மனு # உடனடியாக ஜனாதிபதி அக்கட்சிக்கு தடை விதிக்”கலாம்”


=================

14 பல நோய்களுக்கும், ஒரே இடத்தில் சிறப்பு மருத்துவம் பார்க்கும் , பாலி கிளினிக்தான், திமுக-ஆ ராசா# ஆனா ஜனங்க அது ஒரு போலி கிளினிக்னு சொல்றாக


==================


15 எனக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருப்பம்இல்லை. - ஆ.ராசா # பாலுக்கு ஆசைப்படாத பூனையும், பதவிக்கு ஆசைப்படாத அரசியல்வாதியும் உலகில் இல்லை


==================16 96 வயதிலும் ஆட்சிக்கு வரத்துடிப்பது ஏன்?
-வைகோ கேள்வி! # அரசாங்க பணி எனில் 58 வரை, அரசியல் பதவி எனில் பதவி வெறி தீரும்வரை==================

17 Fridge,Washing machine இலவசம் DMK தேர்தல் அறிக்கை -செய்தி # கண் துடைப்புக்கு ஆங்கிலத்தில் ஐ வாஷிங்க்=================

18 திமுக இல்லையென்றால் இன்று மெட்ரோ ரயிலே இல்லை - கலைஞர் # விட்டா மெட்ரோ ரயிலைக்கண்டுபிடிச்சதே கழகம்தான்னு சொல்வாரோ?


================


19 சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்கள் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் # ஏகப்பட்ட “புகார்”த்தி சிதம்பரம் ஆகிட்டாரே?


==================


20 கன்னையாகுமார் பேசியதை நானும் பேசுவேன், என் மீது வழக்கு போடுங்கள் - வை கோ # ஏய் எல்லாரும்பார்த்துக்குங்க, நானும் ரவுடிதான்,ஜெயிலுக்குப்போறேன்

==============

0 comments: