Saturday, March 19, 2016

30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழுத்தாளர் கூறிய கருத்தால் சர்ச்சை

1 நன்னடத்தையால் விடுதலையானார் நடிகர் சஞ்சய் தத் -செய்தி # 10 கோடி ரூபா லஞ்சம் கொடுத்தா அதுக்குப்பேரு நன்னடத்தையா?


=============


2 ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு #அப்பாடா, ஏ சி போடாமயே இனி ரயில் எல்லாம் மயில் கூட்டமா ஜில்லுனு இருக்கும்

============


3 காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு.. யசோதாவுடன் சேர்ந்து கேள்வி கேட்டார். # அன்பே சிவம் படத்தை இயக்கியது சுந்தர் சி யா? கமலா?ன்னு கேளுங்க,


=============

4  ஏப்ரலில் வெளியாகிறது தனுஷின் 'அம்மா கணக்கு'  # மே மாசத்தில்  அய்யா கணக்கு VS அம்மா கணக்கு VS டாக்டர் மனக்கணக்கு================5

5 மாஜி எம்.எல்.ஏக்கள் 10 பேரின் பிராண்ட் மாறியது..அதிமுகவில் இணைந்தனர்  # BRAND, front,BACK, எல்லாமே கூன் விழுந்து பெண்ட் ஆகி மாறி இருக்குமே?


==============


6 திமுகவில் என்னை வஞ்சம் தீர்த்து அவமானப்படுத்தி விட்டனர்- கருப்பசாமி பாண்டியன் # அதிமுக வில் சேர்ந்துடுங்க, முதல்ல அவமானப்படுத்திடுவாங்க


===================


7 56 மாதமாக எதிர்கட்சிகள் என்னையும் எனது அரசைபற்றியும் பொய் பிரச்சாரம் செய்கின்றன .-ஜெ # கர்நாடகா கோர்ட் ஜட்ஜ் கூட கலைஞர் ஆள்னு சொல்லிடுவாரோ?


=================

8  திமுக, அதிமுக போல் சேற்றை வீச மாட்டோம், நாகரீகமான பிரச்சாரம் மேற்கொள்வோம்- அன்புமணி # அரசியல் நாகரீகம் தெரியாதவரா இருக்கீங்களே அய்யா


==================

9  இந்தியாவிற்காக உயிரையும் கொடுப்பேன் - சஞ்சய் தத் # நீங்க நாயக்கா? கல்நாயக்கா?


=================


10 ஜான்சன் & ஜான்­ச­ன்-ன் பேபி பவுடர்உபயோகித்து கேன்சரால் உயிரிழந்­த­பெண்  குடும்­பத்­திற்கு, 500 கோடி ரூஇழப்பீடு # ஜாண் ஏறினா முழம் சறுக்குது

=============


11 மநகூக்கு தேமுதிக வந்தால் விஜயகாந்தை முதல்வர் ஆக்குவோம்-வைகோ  # முதல்வார் வேட்பாளர் ஆக்குவோம்னு சொல்ங்க, முதல்வர் ஆக்குவது மக்கள் கைல


================


12 இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் - சஞ்சய் தத் # இதே குற்றத்துக்கு மற்றநாடுகள்னா தூக்கு தண்டனை கொடுத்திருக்கும்,இந்தியாஎன்பதால் எஸ்கேப்


===============


13 தமிழக அரசுக்கு போட்டியாக, திரை அரங்குகளில் ஸ்டாலினின் நமக்கு நாமே குறும்பட விளம்பரம் ஒளிபரப்ப திமுக திட்டம் # ஏற்கனவே 14 ரீல் பார்க்கனும், இதுல இந்த ரீலையும் சேர்த்துக்கனுமா?


==================


14 தியாகம் செய்ய வேண்டும்!- ராமதாஸ் # அதெல்லாம் தேவை இல்லை, யாகம் செய்ய வேண்டும், ஜெயிச்சுடலாம், போன தேர்தல்ல அதான் செஞ்சேன் - ஜெ


===============


15 செவ்வாய் கிரக அதிசயமா ஸ்டாலின் ? -  'காடுவெட்டி' குரு # இல்லையே? அவர் என்ன ராமராஜனா? லிப்ஸ்டிக் போட்டு செவ் வாய் உடன் இருக்க?


=============

16 234 தொகுதிகளிலும் சமக போட்டியிட தொண்டர்கள் விருப்பம் - சரத்குமார் # 100 பேரோட பேர் சொல்லுங்க பார்ப்போம்்

============

17 திமுக விளம்பரம் எதிரொலி... தொகுதி மக்களை சந்திக்கப் போகிறார் ஜெ # அடடே!,தலைவரால நல்லது எல்லாம் நடக்குது போல

==========

18 திருமணம் செய்து ஏமாற்றியதாக நடிகை மேக்னா ராஜ் மீது தர்மபுரி வாலிபர் புகார் #,என்ன தம்பி?கற்பு போய்டுச்சா? சொத்து போய்டுச்சா?


============

19 ”ப்ரீடம் 251” ஸ்மார்ட் போன் மோசடியான திட்டம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி பேச்சு # ப்ரீ பெய்டு மோசடித்திட்டம்னு சொல்லுங்க


=============

20 30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழுத்தாளர் கூறிய கருத்தால் சர்ச்சை # அதெப்டிய்யா இதெல்லாம் துல்லியமா கணக்கெடுக்கறீங்க?


==============


0 comments: