Saturday, March 05, 2016

தலைவரே! மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே?

1  கேப்டன் = கடவுளே! தேர்தல்ல யார் கூட கூட்டணி வைக்கட்டும்?

போன தேர்தல்ல ஆண்டவனுடன் கூட்டணின்னு சொல்லி என்னையே ஏமாத்துனியே?


===============

2 தலைவரே! மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே?

யோவ், நல்லா படி. ரகசிய ஏற்பாடு அது. ரகசியா ஏற்பாடுன்னு கூப்பாடு போடாத


===============


டாக்டர்.கைக்குத்தல் அரிசி நன்மையா? தீமையா?


கை சின்னத்தால நாட்டுக்கு தீமை.ஆனா கைக்குத்தல் அரிசி நன்மை


=========

4 டியர்! குறும்புகளை குத்தகைக்கு எடுத்தவனின் மொத்த உருவம் நீன்னு சொல்றாங்களே நிஜமா?

குறும்புப்பட டிவிடியை லீசுக்கு எடுத்து வாடகைக்கு விடறேன்


=============

5 சார்!நீங்க எப்பவும் பொண்ணுங்களைத்திட்டிட்டே இருக்கீங்களே ஏன்?


 எல்லாரையும் திட்டமாட்டேனே? சொந்த சம்சாரம், மாமியார், அவங்கவீட்டுசொந்தம் இப்டி


===========

6  டியர், என்  மூக்குத்திக்கு என் மூக்கு அழகா? என் மூக்குக்கு இந்த மூக்குத்தி அழகா?

 அதெல்லாம் தெரில. 2 பவுன் தேறும் போல, அவசரம்னா அடமானம்


=================


7 சார்! எதுக்காக இயக்குநர் சேரன் படத்துல நடிக்கனும்னு நினைக்கறீங்க?


 அவர் மட்டும் சோழர் படத்தில் நடிக்கறாரே?


===============


8 காலேஜ்ல இருந்து வர  ஏம்மா லேட்?

 சைக்கிள் டெஸ்ட்ம்மா

சைக்கிள் டெஸ்ட்னா சைக்கிள் ஓட்டச்சொல்வாங்களா? உனக்கு ஸ்கூட்டியே ஒழுங்கா ஓட்டத்தெரியாதே?

==================

9 மம்மி, ஜாகிங்க் பேண்ட்டை கிரவுண்ட்லயே வெச்ட்டு வந்துட்டேன்

நல்லவேளை, கொலுசை கழட்டலையே?

 அதை அந்த பேண்டுக்குள்ளே வெச்ட்டேன்


===================


10 பொண்ணு பார்க்க வந்த மாப்ளை கிட்டே  251 ரூபா வசூல் பண்றாங்களே எதுக்கு?


ஸ்மார்ட்டா இல்லை பொண்ணுன்னாராம்,ஸ்மார்ட் ஃபோன் சார்ஜ் வசூல்டு


=================


11 என் பைக்கை பொண்டாட்டியைப்பார்த்துக்கற மாதிரி பார்த்துக்குவேன்

ஓஹோ, அப்போ ஸ்கூட்டியை  மச்சினியைப்பார்த்துக்கற மாதிரி பார்த்துக்குவியா?


==================


12 டாக்டர்!டெய்லி  7 பேரீட்சைப்பழம், ஒரு செவ்வாழை  சாப்பிட்டா  என்ன ஆகும்?

இது கூடத்தெரியலையா செவ்வாழ?மாசம் 210 பேரீட்சை,30 பழம் செலவாகும்


==================


13 பொருளாதார ஸ்திரத்தன்மை/வளர்ச்சிக்கு அதிகம் துணை புரிவது சேமிப்பா, பணப் புழக்கமா?

ஏழைகளின் சேமிப்பு , பணக்காரர்களின் பணப்புழக்கம்


==================


14 சார், உங்க பட  டீசர் பார்த்தேன். அப்டியே ஒரு இச் கொடுத்தேன்

அடடா! மிஸ்! டீசர்க்கு (இ)ச் கொடுத்தா அது டீச்சர் ஆகிடுமே?================


15  திருடனுக்கு தேள் கொட்டினால் அது திருடனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.


ஏன்? கொட்டின தேளுக்குத்தெரியுமே?

================

16 நான் குடிக்க மாட்டேன்னு எல்லோருக்கும் தெரியுமே"

ஆனா பொய் சொல்வீங்கன்னு யாருக்கும் தெரியாதே தலைவரே!


================

17 குருவே! யானைக்கு ஏன் மதம் பிடிக்குது?

6 அறிவு மனுசனுக்கே மதம்/மதவெறி பிடிக்கும்போது 5,அறிவு ஜீவனுக்கு மதம் பிடிக்காதா?


==============

18 அப்பா.ரவுடித்தனம்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன்.எப்பூடி?
வெரிகுட்.தலைவன் ஆவதற்கான முதல் தகுதி மக்களை பொய் சொல்லி நம்ப.வைப்பது

==================

19 மேடம்.எதனால DMKவை விட்டு வெளில போனீங்க?

பிடிக்கலை.

இப்போ திமுகவுக்கு ஆதரவா வாக்கு எப்டி கேப்பீங்க?

நரம்பில்லா நாக்கு.எப்டி வேணாலும் பேசும்

===========

20 தலைவரே! உங்களை ஊழல் வாதி ன்னு ஒரு கோர்ட்ல கூட நிரூபிக்க முடியலையே ஏன்?
நான் தான் அரசியல்வாதினு நிரூபிச்சடறேனே?

===============
0 comments: