Tuesday, March 22, 2016

அன்பு மணி ஓட்டிய செம படம்

1  இப்போது வரும் சினிமா கதைகளில் ஜீவன்  இல்லை பாரதிராஜா பேச்சு # எல்லாப்படத்துலயும்  நான் அவன் இல்லை ஜீவனையே ஹீரோவா போட முடியுமா?
==============

2 கணவர், மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார் # ஹை கிளாஸ் , மிடில் கிளாஸ் னு ஆல் கிளாஸ் பிரச்சனை இந்த டவுரி


================

3 ரூ.251–க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித் தர முடிவு  # அப்போ இதை ஆதரித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த தண்டனை தர வேண்டாமா?


================

4 தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது -ஜெ  # தேர்தல் கிட்டே வருதில்ல?இப்போ கரண்ட் கட் ஆனா ஓட்டு கட் ஆகிடும்


================

5 தமிழ் நாட்டில் 94 லட்சம் பேருக்கு வேலை இல்லை - அன்புமணி # அப்போ நைசா அவங்களை உங்க கட்சிக்கு இழுத்துக்குங்க================

6 ‘ஆடுகளத்தை கணிக்க தவறி விட்டோம்’–அப்ரிடி # வெற்றி மாறன் + தனுஷ் கூட விருது கிடைக்குனு கணிக்கலையாம், நீங்க எப்டி? ஜி


==============

7 எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது - மு.க. அழகிரி # சொந்த வீட்டில் இருக்கும் மகன் ஆதரவே பெற முடியல,தலைவரால்

===============

8 கருத்தரங்கில் பங்கேற்க சென்ற சுப்பிரமணிய சாமி கார் மீது காங்கிரசார் முட்டை வீச்சு  # வாக்கு சதவீதமும் முட்டை,போராட்ட ஆயுதமும் முட்டை


==============

9 7½ கோடி தமிழக மக்களின் நன்மைக்காக அன்புமணியை முதல்–அமைச்சராக்க வேண்டும் -ராம்தாஸ் # ஏழரை கோடி பேருக்கும் ஏழரை ஸ்டார்ட் ஆகிடும்=================

10 இந்தியாவிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் மகாராஷ்டிரா; தமிழ்நாட்டுக்கு  2 வது இடம் # இதுல வேணா தமிழன் சீக்கிரம் நெ 1 ஆகிடுWON


================

11 வனத்துறை நிலத்தை அபகரித்த வழக்கு: இமாச்சலப் பிரதேச ஆளும் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை # பொறம்போக்கு நிலம்னு “கை” வெச்சுட்டாரா?


===============

12 தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை: ஜெ # ஆழ்வார்ப்பேட்டை தமிழ் நாட்ல தானே இருக்கு?னு ஆளவந்தான் ரசிகர்கள் கேட்கறாங்க மேடம்


================

13 பாஜ க உடன் சம க கூட்டணி - சரத்குமார் # அடடே! லாஸ்ட் பெஞ்ச் கூட்டணி போல 


================

14 அதிமுக கூட்டணியில் இருந்ததால் சமக வை வளர்க்க முடியவில்லை -சரத்குமார்  # இது நாலே முக்கால் வருசமா ஜெ கால்ல விழுந்திருந்தப்போ தெரியலையா?


=============

15 சேராதவர்கள் ஒன்றாக சேரும் காலம் தேர்தல் களம் - சரத் குமார் # ஏற்கனவே சேர்ந்தவர்கள் பிரியும் காலமும் இதுவே


==============


16  இந்தத்தேர்தலில் நாங்கள் 6% வாக்கு பெறுவோம்- சரத் குமார்  # 0.6 % அப்டினு சொன்னாலே அதுல பாதிதான் கிடைக்கும்


================

17 அடிப்படை கொள்கை ஒத்துப்போவதால் காங்கிரசுடன் கூட்டணி: கனிமொழி # கொள்ளை அடிப்பதுதானே நம்ம 2 பேர் கட்சியின் முக்கியக்கொள்கை?


===============


18 பா.ஜனதா இறுதிக்கட்ட பேச்சு: விஜயகாந்துடன் பிரகாஷ் ஜவடேகர்  சந்திப்பு # கேப்டன் = சரி, வீட்ல ஒரு வார்த்தை கலந்துட்டு பதில் சொல்லி அனுப்பறேன்


================

19 பாமக-க்கு மற்றகட்சிகள் வந்தால் மகிழ்ச்சி,வராவிட்டால்மிக்க மகிழ்ச்சி-அன்புமணி. # பாமகவுக்கு மக்கள் ஓட்டு போட்டால் மகிழ்ச்சி,  போடலைன்னா மிக மகிழ்ச்சின்னு சொல்ல தயாரா?


=================

20 2 மணி 30 நிமிடங்கள், கையில் எந்த குறிப்பும் இல்லாமல் அன்புமணி போல் இதுவரை எந்த ஒரு தலைவரும் பேசியது கிடையாது  # ஒரு படமே ஓட்டிட்டாரு போல


==================

0 comments: