Sunday, March 27, 2016

ROCKY HANDSOME ( HINDI) - சினிமா விமர்சனம்

கொரியன் மூவி The Man From Nowhere (2010),  யின்  அதிகார பூர்வமான ரீ மேக் தான் இது

ஹீரோ ஒரு ஸ்பெஷல் போலீஸ் ஆஃபீசர். அவர்  ட்யூட்டில இருக்கும்போது சத்ரியன் ( மாடர்ன் வெர்சன் தெறி) பட நாயகிக்கு ஆனது போல் எதிரிகளால் செயற்கையான விபத்து ஏற்ப்டுது. தன் கண் முன்னே தன் மனைவி கொலை செய்யப்பட்டதைப்பார்த்து பொறுக்க முடியாம வேலையை விட்டுட்டு  தனியா இருக்கார்


அவருக்கு ஒரே ஆதரவு   பக்கத்து  வீட்டில் இருக்கும் பாப்பா 1 . அதுக்கு அம்மா ஒரு போதை மருந்து அடிமை.


 அந்த பாப்பாவோட்  அம்மா தான் வேலை செய்யும் நைட் க்ளப்ல இருந்து  போதை மருந்து பாக்கெட்டை லவட்டிட்டு வந்துடுது.

 போதை மருந்து கும்பல் அந்த  போதை மருந்தை பெறுவதற்காக அந்த பாப்பாவை கடத்திடறாங்க. குழந்தைகளின் உடல்  உறுப்புகளை  விற்கும் கும்பலும்  கூட அவங்க.


 ஹீரோ அவங்க கிட்டே இருந்து  எப்படி அந்த பாப்பாவைக்காப்பாத்தறார் ? என்பதே மிச்ச மீதி திரைக்கதை/


ஆல்ரெடி இதே டைப்பில் பல பாலிவுட் படங்கள் வந்தும் ஏன் இந்தக்கதையை தண்டமா காசு கொடுத்து  ரீமேக்குனாங்களோ தெரியல 


ஹீரோ கம் கோ புரொடியுசரா ஜான் ஆப்ரஹாம். அவரோட  ஜிம் பாடி அட்டகாசம்/  ஓப்பனிங் சீன்களில் அந்த பாப்பாவுடனான காட்சிகள்   செண்ட்டிமெண்ட் டச். லேடீஸைக்கவர.  அந்த  பாப்பா நடிப்பும் சூப்பர் 

ஸ்டண்ட்  காட்சிகள்  எல்லாம் ஸ்டண்ட் மாஸ்டரால் ஒரிஜினலில்  இருந்தது போலவே  தர அட்டகசமாய் உழைச்சிருக்காங்க . ஆக்சன் சீக்வன்சில் பிஜிஎம், ஹீரோ பில்டப்  , ஸ்டண்ட்  மாஸ்டர்   மூவரும்  சேர்ந்து  அதகளம்  பண்ணி  இருக்காங்க 

ஹீரோயினுக்கு  வேலை இல்லை ஸ்ருதி கமல்  வரும்  10  நிமிடக்காட்சி ல 5 நிமிசம்  பாட்டு  ஓடிடுது.  இன்னும் வாய்ப்பு  கொடுத்திருக்கலாம்


நச் டயலாக்ஸ்

அங்க்கிள்.உங்களுக்கு ஹேன்ட்சம் னு நிக்நேம் வெச்ச மாதிரி எனக்கு டஸ்ட் பின் (குப்பைத்தொட்டி)னு நிக் நேம் வெச்சிருக்காங்க HANDSOME2 குழந்தைப்பருவத்தில் தெரியாமல் தப்பு செய்பவர்கள் வளர வளர தப்பு செய்வதை சரியாக கற்றுக்கொள்கிறார்கள் HANDSOME
3 நான் உன்னை வெறுக்க முடியாது.அப்டி வெறுத்துட்டா இந்த உலகத்தில் யாரையுமே விரும்ப முடியாது HANDSOME
4 போலீஸ் ஆபீஸர்கள் கைகள் எப்போதும் கண்ணுக்குத்தெரியாத அரசியல் கயிறால் கட்டப்பட்டிருக்கும் HANDSOME
5 இத்தனை பேர் போயும் அவனை ஏன் வீழ்த்த முடியலை?

அவன்.செயல்படும் வேகத்தில் மின்சாரம் போன்றவன்.புத்திக்கூர்மையில் சம்சாரம் போன்றவன் H


6 எல்லோரையும் காப்பாற்ற நினைக்கும் போர் வீரன் அரசன் ஆகும் தகுதி படைத்தவன். HANDSOME


7 நீ மரணத்தருவாயில் இருக்கே.என் கிட்டே குமாரசாமி கணக்கெல்லாம் சொல்லிட்டிருக்கே HANDAOME

8 முட்டாள்தனமான தவறை நான் ஒரு தடவை தான் மன்னிப்பேன் HANDSOME


9 நாளைய கனவுகளுடன் எப்போதும் இருப்பவன் இன்றைய வெற்றியை இழப்பவன்.இன்றைய வெற்றியை நினைப்பவன்.நாளைய கனவை துறப்பவன் HANDSDMEலாஜிக் மிஸ்டேக்ஸ்


1 ஓப்பனிங் ஃபிளாஸ்பேக் சீனில் ஹீரோ நெஞ்சு , சோல்டர் , வயிறுன்னு 3 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ஞ்சும் உயிரோடவே இருக்கார் எப்டி?ன்னு தெரியல


2 தன் உடம்பில் இருந்து தானே புல்லட்டை நீக்கும் காட்சிகள் எல்லாம் ஃபர்ஸ்ட் பிளட் , ராம்போ உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சு பாஸ் , வேற வேற


3 ஸ்ருதி கமல் இறக்கும் காட்சி சரி வர காட்சிப்படுத்தப்படவில்லை. இன்னும் டெப்தா எடுத்திருந்திருக்கனும்

4 இப்போ சமீப காலமா பல படங்கள் ல இது போல் சீன் வருது. வில்லன் க்ரூப் கார்ல யாரையாவது கடத்திட்டுப்போகும்போது கார் /வேன் பின்னாலயே ஹீரோ 2 பர்லாங்க் ஓடி வருவார் எதுக்கு? எமோசனைக்குறைங்க பாஸ்

  சி.பி கமெண்ட் - ROCKY HANDSOME (hindi) - மாபியா கேங்க்ஸ்டர் ஆக்சன் கதை.ஸ்டண்ட் சீன் அதகளம்..BGM அல்டிமேட். பெண்கள் தவிர்க்கவும் .ரேட்டிங் =2.75 / 5

0 comments: