Saturday, March 05, 2016

இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் அனுப்பியது

ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டின் தலைவராக திகழ்வேன்- மோடி # நீங்க தான் கட்சித்தலைவரா? அப்போ அமித்ஷா பிரதமரா?சொல்லவே இல்ல?


=============2 அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு: மத்திய அரசு. #,குடுக்க்கறதே கம்மி.வட்டி. அதையும் குறைச்ட்டா யாரு சேமிப்பா?
=============3 செல்போன் மூலம் தி.மு.க.வில் புதுமையான ‘மிஸ்டு கால்’ பிரசாரம்; கருணாநிதி தொடங்கிவைத்தார் #,அழகிரி மிஸ்டு கால் விட்டாரா?
===========4 தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: நடிகை நக்மா அறிவிப்பு # குஷ்பூ உங்க மேல செம கடுப்பா இருக்காங்களாம்
=============5 முடிந்தால் கடலூரில் என்னை எதிர்த்துநின்று ஜெ ஜெயிக்கட்டும்-சீமான். # சரித்திரத்தின் பக்கங்களை பார்த்துட்டு சவால் விடனும்
================
6  இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் போர் விமானங்கள் உருவாக்கப்படும் - பாதுகாப்புத் துறை அமைச்சர் #  டாப்ல வெள்ளைக்கொடி வெச்சிடுங்க==============

7  காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை # நக்மா, குஷ்பூ-ன்னு ஆல்ரெடி கொலு படுத்திட்டு தானே இருக்கீங்க?


================


முகநூல் பயன்படுத்தும் பழக்கம் இல்லை: மு.க.அழகிரி # அட்லீஸ்ட் மு.க நூல்  நெஞ்சுக்கு நீதியாவது படித்து பயன் பெறவும்


================


9  இலக்கிய, கலை நிகழ்ச்சிகள் சுமுகமான சமூகத்தை உருவாக்கும்: ஆளுநர் ரோசய்யா # மானாட மயிலாட, ஜோடி நெ 1  நிகழ்ச்சி எல்லாம் அதனாலதான் ஹிட் ஆச்சா?==============

10  காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை # கல்யாணம் பண்ணா  ஆயுள் பூரா தண்டனைன்னு நினைச்சிருப்பானோ?


=================11  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்:- இளங்கோவன் # அவர் வருவாரா? சரிந்து போன எங்கள் வாக்கு வங்கியை சரி செய்ய அவர் வருவாரா?


================


12 தேமுதிகவினர் பேரவைக்கு வர அதிமுகவே காரணம்: அமைச்சர் கோகுலஇந்திரா # ஓஹோ,  அப்போ வாக்களித்த மக்கள் காரணம் இல்லையா?===================

13  சட்டப் பேரவை நடவடிக்கையில் திமுக இனி பங்கேற்காது-கலைஞர் # அப்போ எம் எல் ஏ க்கள் சம்பளம் வேணாம்னு சொல்லிடுவவாங்களா?


=================

14  திமு.க வுக்காக நான் கூடுதலாக உழைத்துள்ளேன், கேள்வி கேட்க உரிமை உள்ளது -அழகிரி  # இடைத்தேர்தல்களில் கள்ள ஓட்டு போட பாடுபட்டதை சொல்றாரோ?==================15 இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் அனுப்பியது-செய்தி # ஆஞ்ச நேயா ! நைசா அஜித்குமாரை அனுப்பிடுவியா?


==============


16  ஜனாதிபதிதேர்தலில்போட்டியிடும் ஹிலாரிகிளிண்டன் ஒரு லெஸ்பியன் - கிளிண்டனின் முன்னாள் காதலி சாலிபெர்டியூ # மிஸ் சாலி, சாலிட் எவிடென்ஸ் இருக்கா?================

17  அதிமுக. சார்பில் ஜெ பிறந்தநாள் விழா  24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது # 5 நாளும் டெய்லி பிறந்தாரா? ஒரு நாள் கொண்டாடுனா போதாதா?


================

18  பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு # அமெரிக்காக்காரன் முந்திக்கப்போறான்


==================

19  22–ந்தேதி முதல் மார்ச் 1–ந்தேதி வரை தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறுகிறது விஜயகாந்த் அறிவிப்பு. # ஹெல்மெட் போட்டுட்டு போவாங்களோ?

===============

20  தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது  # சம்பளத்தை கட் பண்ணா ஆட்டோமேடிக்கா ஸ்ட்ரைக் வாபஸ் தான்


===============

0 comments: