Saturday, March 26, 2016

KALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்

Kali Malayalam Movie First Look Poster.jpg

ஹீரோ ஒரு முன் கோபி, நம்ம  ஊர் கேப்டன் மாதிரி அவருக்கு பொசுக்  பொசுக்னு கோபம்  வந்துடும். ஹீரோயின்  அவரோட காலேஜ் மேட். லவ் மேரேஜ் பண்ணிக்கறாங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஹீரோவுக்கு செம கோபம் வந்துடுது. பிரேமலதா போல் ஹீரோயின்  பொறுமையா அவரை ஹேண்டில்  பண்றாங்க.

ஹீரோவோட ஆஃபீஸ்ல  கொலீக் ஒருவர்  அடிக்கடி  ஹீரோ  முதுகில் அடிச்சுப்  பேசுபவர். ஒரு டைம் பார்ட்டில ஹீரோ தம்பதி சகிதமா போனப்போ அதே கொலீக்  அவரை அடிச்சுப்பேச செம டென்சன் ஆன ஹீரோ பளார்னு ஒரு அறை கொடுத்துட்றார். ஹீரோயினுக்கு  செம அவமானமா போய்டுது

 ஒரு டைம்  ஏதோ  ஒரு கோபத்தில் இருக்கும்போது  ஹீரோயின் அம்மா, அப்பா கிட்டே இருந்து  ஃபோன் வந்தப்போ யார்னே பார்க்காம  ஹீரோ திட்டிடறார்.

இதை வெச்சே இடைவேளை வரை  ஓட்டிடறாங்க.

 அதுக்குப்பின் பெரிய  ட்விஸ்ட். ஹீரோ ஹீரோயின் கார்ல  போகும்போது நைட் டைம்ல ஒதுக்குப்புறமான ஒரு  பாடாவதி ஹோட்டல்ல சாப்பிடப்போறாங்க. சாப்ட்டதும் பர்ஸ்ல காசு இல்லை. அருகில் ஏ டி எம் இல்லை, ஃபோனில் நெட் ஒர்க் இல்லை.

 பணத்தைக்கொடுத்துட்டு ஒயிஃபை கூட்டிட்டுப்போங்கன்னு  ஹோட்டல் ஓனர் சொல்லிடறார்.நம்புனா நம்புங்க அதுக்கு  ஹீரோ என்ன பண்றார் ? என்பதே  மிச்ச மீதிக்கதை

மிக பலவீனமான கதை. ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் ஹீரோவா மம்முட்டியின் மகன் துல்கர் . செம ஆக்டிங்.  சிடு சிடு என அவர் வருவது அவரது ரசிகைகளுக்குப்பிடிக்காமல்  போகக்கூடும், ஏன்னா சார்லி ,  ஓகே கண்மணி ல சிரிப்பு அழகனா பார்த்துட்டு இப்டி பார்க்க எப்டி பிடிக்கும்? ஆனாலும் அவரது டிரசிங்க் சென்ஸ் , ஹேர் ஸ்டைல் இதெல்லாம்  கலக்கல். ஹீரோயினுடனான ரொமான்ஸ்  செம கில்மா


ஹீரோயினா சாய் பல்லவி  கன்னக்கதுப்புச்சிவப்பழகி. முகத்தில் பரு கூட அழகாக அமைந்தது அப்சரஸ் இவரிடம் தான் . தோராயமா எண்ணிப்பார்த்தா  அவரது இடது புற கன்னத்தில் தான் வலது புற கன்ன பருக்களை விட அதிகமா இருக்கு . இவர் சிரிக்கும்போது கொள்ளை அழகு. இவரோட முக அழகை முழுவதும் ரசிக்க முடியா,ம  இவர் அடிக்கடி ஸ்லீவ்லெஸ் ஜாக் , சர்ட்டில் வருவது அநியாயம். டைட் டி சர்ட் வேற அப்பப்போ, ஒரு தமிழன் என்ன தான் செய்வான்?


வில்லனா ( லாரி டிரைவர்) டார்விண்ட பரிணாமம் பட வில்லன். இவரது ஆக்டிங்  குட், லேடீஸ் எல்லாம் செம திட்டு திட்டறாங்க

 ரெண்டே பாட்டு . ரெண்டும் நல்லாருக்கு, ஒளிப்பதிவு  செம . பின் பாதியில்  முழுக்க முழுக்க இருட்டான ஹோட்டல்  ஏரியாவில் கதை நடப்பதால் கேமராமேனுக்கு சவால்

 ஆக்சன் காட்சிகள்  அனல் பறக்குது
சபாஷ்  மீனா


1   போஸ்டர்   டிசைன்  , ஸ்டில்ஸ்  எல்லாம் மணி ரத்னம் பட பாணியி;ல்  அமைந்தது. நல்ல  ஓப்பனிங்கை வர வைக்கும் ட்ரெய்லர் கட்டிங்க்ஸ்


2  சாய் பல்லவியின்  ரொமாண்டிக் காட்சிகள் , அவரது கிளாமர் டிரஸஸ்


 லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ஹீரோவோட ஆஃபீஸ் ல அந்த  ஜொள் பார்ட்டி லேடி  ஹீரோவுக்கு  ரூட் விடுவது , காமெடியன்  அதை கண்டு நக்கல் அடிப்பது   இதெல்லாம்  கதைக்கு சம்பந்தம் இல்லாதவை. பார்ட்டியில்  ஹீரோயின் கண் முன்னாலயே ஹீரோவை அந்த லேடி தொட்டு தொட்டு பேசியும்  ஹீரொயின் கண்டுக்காம  இருப்பதும் நம்பக்த்தன்மை இல்லை.பொண்டாட்டிங்க இப்டியா சாந்த சொரூபியா இருப்பாங்க?


2   என்ன தான் கோபமாக ஒரு ஆள்  இருந்தாலும்  ஃபோனில் ஸ்க்ரீனில்   யார் நெம்பர் என பார்க்காமலோ அல்லது எதிர் முனை குரலை கேட்காமலோ ஒருவர் கத்துவாங்களா?


3  ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஏரியாவில்  உள்ள ஹோட்டலில்  புது மனைவியுடன் யாராவது   அன் டைமில்  சாப்பிடப்போவாங்களா?

4  சாப்பிட்ட பில்  மீறி மீறிப்போனா 100  ரூபா இருக்கும். அதுக்கு பிணையமாக மனைவியை விட்டுட்டுப்போ என ஓனர் சொல்வது ஓவர் . அப்பவே கைல இருக்கும் வாட்சை கழட்டிக்குடுக்கும்போது அதை வாங்க மறுக்கும்  ஓனருடன் ஏன் ஹீரோ வலியுறுத்தவில்லை?


5  தனியாக காரில்  போகும்  ஹீரோயினை  லாரி டிரைவரான வில்லன் லாரியில்  ஃபாலோ பண்றான். ஹீரோயின் ஏன் ஜன நடமாட்டம் உள்ள ஏரியாவுக்கு விரைவாக போக வில்லை? மீண்டும் மீண்டும் இண்ட்டீரியராக ஏன் போகனும்?


6   ஹீரோ ஹீரோயின்  இருவர் செல்லிலும் டவர் இல்லை. ஹோட்டல்  ஓனர் ஃபோன் தர்றார் அதில்  தன் பெற்றோருக்கோ நண்பருக்கோ  ஃபோன் செய்து  சம்பவ இடத்தை லேண்ட் மார்க்கை சொல்லி வர வெச்சிருக்கலாமே?

7  கடையில் 15 வயசு பொடிப்பையன்  வேலை செய்யறான். அவனை எங்களோடு காரில் அனுப்புங்க , பணத்தை கொடுத்து அவனை ஆட்டோவில் ஏத்தி விட்டுடறோம் என சொல்லி  இருக்கலாமே? அவன் ஏத்துக்கறான் ஏத்துக்கலை  ஹீரோ எந்த பாசிட்டிவ் வழியையும்  யோசிக்க வே மாட்டாரா?


8  வில்லன்  ஹீரோயினை  மெயின்  ரோட்டில் காரில் ரேப் பண்ண ட்ரை பண்ணுவானா? ஓங்கி  ஒரு அறை விட்டு மயக்கம் ஆக்கி  தூக்கிட்டு இண்ட்டீரியரா போய் இருக்கலாமே? சோப்ளாங்கி  வில்லனா?

தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்துல்கர் + சாய் பல்லவி கலி (மலையாளம் ) @ ஆட்டிங்கல் கங்கா.11,30 AM ஷோ

2 சாய் பல்லவியோட வலது கன்னத்தை விட இடது கன்னத்தில் தான் பரு அதிகம் # பொழுது போகாத பொம்மு

3 சாரி னு உதட்டால சொன்னா போதாதா?ஹீரோ ஹீரோயின் முதுகை 5 நிமிசமா தடவிட்டு இருக்காரு

வாண்டுக ஆளுமா டோலுமா பாட்டுக்கு டான்சிங் # அஜித் ரெப்ரன்ஸ @் KALI


5 முன் கோபம் அதிகம் உள்ள கணவனால் பாதிக்கப்படும் இல்லற வாழ்வே முன் பாதி கதை
நச் டயலாக்ஸ்


1 யோவ்.யார்யா அந்தாளு.நாம ஜோடியா படம் பார்க்கும்போது தியேட்டர்ல பின் சீட்ல இருந்து நம்மை தொந்தரவு பண்ணாரே?

அய்யோ.அவர் என் அப்பா.

நீ மனப்பூர்வமா கோபிக்கலைனு எனக்கு இதயப்பூர்வமா தெரியும்


எது நல்லது?னு எடுத்துச்சொல்ல /வழி காட்ட ஆணின் அருகில் எப்போதும் ஒரு பெண் இருக்கனும்.அதுவும் அன்புக்குரியவராய்!


சாப்பிட என்ன இருக்கு?

உங்களுக்கு என்ன வேணும்?
தோசை? இல்லை.
என்னதான் இருக்கு?
சப்பாத்தி இல்லை
புரோட்டா மட்டும்.

காதலர்கள் , துல்கர் , சாய் பல்லவி ரசிகர்கள்: மட்டும் பார்க்கலாம். சாதா ஜனங்க , பொது ஜனங்க நல்ல சினிமா ரசிகர்கள் பார்த்தா கடுப்பாகிடுவாங்க


ரசிகர் ஷோவிலேயெ முதல் 4 சீன் வரை கை தட்டி படம் பார்த்த ரசிகர்கள் பின் திரைக்கதை பலவீனம் உணர்ந்து அமைதி ஆகிட்டாங்க்  KALI (மலையாளம் ) - அழுத்தம் இல்லாத கதை.லாஜிக் சொதப்பல்களுடன் திரைக்கதை.துல்கர் க்கு இது ஒரு சறுக்கல் படம்.ரேட்டிங் =2.5 / 5Directed bySameer Thahir
Produced byAshiq Usman
Shyju Khalid
Sameer Thahir
Written byRajesh Gopinadhan
StarringDulquer Salmaan
Sai Pallavi
Music byGopi Sundar
CinematographyGireesh Gangadharan
Edited byVivek Harshan
Production
company
Hand Made Films
Distributed byCentral Pictures
Release dates
  • 26 March 2016
CountryIndia
LanguageMalayalam

0 comments: