Wednesday, March 09, 2016

நெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட்டும்

2016 தேர்தலை சந்திக்க திமுக
பலமாக உள்ளது -பொன்முடி# பயமாக உள்ளது னு ஓப்பனா சொல்ல முடியுமா?

=========


2  விஜய்யின் தெறி படத்தை லைகா வெளியிடுகிறதா?- எஸ்.தாணு விளக்கம் #,கடை ஓனர் நான் தாங்க.ஆனா வரியை அவர் கட்டுவார்ங்க


==========

இமான் அண்ணாச்சி திமுகவில் இணைந்தார்." "அண்ணா"தி மு க " வில் இணைந்தார்னு நியூஸ் போட்றாதீங்க.குழப் பம் வந்துடும்

============

4 திமுக கூட்டணி மூழ்கும் கப்பல்.. "கேப்டன்" போக மாட்டார்.. பொன்.ராதா # மூழ்கும் கப்பலை காப்பாத்த வேண்டியது ஒரு கேப்டனோட கடமை இல்லையா?

=========

5 பொய் சொல்வதில் கருணாநிதி, ஜெயலலிதா இடையே கடும் போட்டி: மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள். # கவிதைக்கு மட்டுமில்லை.கழகத்துக்கும் பொய் அழகு

==========

6 தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா  நீக்கம் #  மாநாடு நடக்கும் நாள் ரமணா மேல கை வெச்சிருக்காங்க, எதுனா குறியீடா?


=================


அம்மாவிடம் கூழைக்கும்பிடு போடும் ஆட்களின் வீட்டில் பெண்கள் மதிப்பார்களா? - பிரேமலதா # மொத்தத்தில் வீட்டிலும், நாட்டிலும் மரியாதை ;போச்சு


====================


எங்களாலும் கீழ்த்தரமாக பேச முடியும், பேசத் தெரியும் - பிரேமலதா ஆவேசம் # கேப்டனின் தாரமா பேசாதீங்க, தரமா பேசுங்க

=================

தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றியதுதான் ஜெ செய்த ஒரே சாதனை - பிரேமலதா # சுடும் வரை சூரியன்,போராடும் வரை மனிதன் நீ மனிதன் - வைர முத்து


====================

10 தமிழ்நாடு மக்கள் தெளிவு பெற வேண்டிய நேரம் வந்துருச்சு -பிரேமலதா   # நம்ம கட்சில நீங்க தான் தெளிவா இருக்கீங்க


================


11 கேப்டன் எது செஞ்சாலும் அதுதான் சோசியல் மீடியாவில் ட்ரண்ட் - பிரேமலதா # மீம்ஸ் ல நல்லா வெச்சு செஞ்சாலும் பாசிட்டிவா எடுத்துக்கற மனசு இருக்கே

==================

12 தேமுதிக தனி அணி அமைக்கும் என்பதை சூசகமாக உணர்த்தினார் பிரேமலதா விஜயகாந்த் # விழலுக்கு இரைத்த நீர் போல அந்த 12% ம் வீணாப்போகப்போகுது


===============

13 வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்   # தலைவலி வந்தாக்கூட WIN WIN வின் என தான் வலிக்கனும்


=============


14 ஸ்டிக்கர் ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்... வேடல் மாநாட்டில் பொங்கிய பிரேமலதா # பிரேமம் ஹிட் ஆன மாதிரி பிரேமலதா ஸ்பீச்சும் ஹிட் ஆகிடுச்சே?


===============

15 சில செய்திபத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை - விஜயகாந்த்  # பொதுவா நான்எதுவுமே படிப்பதில்லை, மனைவி படிப்பதை கேட்டுக்குவேன் -னு ஓப்பனா சொல்ங்க


===============

16 கடைசி வரைக்கும் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவேயில்லை விஜயகாந்த் # கடைசி வரை சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றாராம்-----------=============


17  கிங் ஆக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? தொண்டர்களிடம் கேட்டார் விஜயகாந்த்  # கேப்டன், ஜோக்கிங்கா? ரேக்”கிங்க்கா?

==============


18  நெல் கொள்முதலில் கூட கொள்ளையடிக்கின்றனர் - விஜயகாந்த் # நெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட்டும்னு நீங்க நினைக்கறீங்களா?


=============


19 முதல்வர் ஜெ விற்கு ஊடகங்கள் ஜால்ரா அடிக்கின்றனர் - விஜயகாந்த் # பத்திரிக்கைன்னா பக்கம் இருக்கும்,பக்க வாத்தியம் இருக்கும்


===============

20  ஜெ ஆட்சியை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும்: தேமுதிக தீர்மானம்  # அப்போ கலைஞர் ஆட்சி தான் அப்டினு சொல்றாரா? 


=================

0 comments: