Sunday, March 20, 2016

கலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி

தலைவரே! தேர்தல் நிதி அளிப்பீர்!னு பிச்சை எடுத்தீங்களே! இப்போ media adக்கு 40 கோடி ஏது?

என் பெயரிலேயே நிதி இருக்கையில் என்னிடம் இருக்காதா?

===========

2 எடிட்டர் சார்.உங்க புக் ல ஒரு மாற்றம் தெரியுதே?

நீங்க கூட FB வந்த புதுசுல பேசவே மாட்டீங்க.இப்போ செம கடலை போடறீங்க இல்ல?


=========

3 தலைவரே!முகப்புத்தகத்தை விட்டு ஏன் விலகிட்டீங்க?

படிப்புக்கும் நமக்கும் ரொம்ப தூரம்


=========

4 5 வருசமா ஏன் டாக்ஸ் கட்டலை?

5 வருசத்துக்கு ஒரு தடவை தானே ஓட்டு போடறோம்?வரியும் அப்டினு நினைச்ட்டேன்


=========

5 படம் தயாரிச்சே நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.

அப்டி ஓரமா உட்காருங்க.நடுத்தெரு நாராயணன் கள் இங்கன ஜாஸ்தி


=============

6 தலைவருக்கு ஜிகே கம்மி

எப்டி சொல்றே?
ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்துல ராமராஜனைக்காணோம் ?ஆனா அர்ஜூன் இருக்காரு?னு அப்பாவியா கேட்கறாரே?


============


7 ஜட்ஜ் =,ஐம்பொன் சிலையை கடத்துனியா?

கைதி = ஒரு சிலை தாங்க கடத்துனேன்.5 எல்லாம் இல்ல


============

8 டாக்டர்.எல்லாரும் க்ளினிக் னு போர்டு வெச்சிருக்காங்க.நீங்க மட்டும் கிளினிக் னு வெச்சிருக்கீங்க?

நர்சுங்க எல்லாம் கிளி மாதிரி இருப்பாங்க


===========

9 மிஸ்! 10 என்றதுக்குள்ளே என் கிட்டே ஐ லவ் யூ சொல்ங்க
உனக்குதான் படிப்பே இல்லையே? எப்டி 10 வரை எண்ணுவே?

=============

10 படம் பூரா ஹீரோ டேபிள் ஃபேன் பக்கத்துல உக்காந்து இருக்காரே? ஏன்?
இது ”டேபிள் ஃபேன்”ட்டசி ஃபிலிம்==============

11 கொலைகாரன் டெக்னாலஜியால மாட்டிக்கிட்டானா? எப்படி?
மேக்கிங்க் ஆஃப் மர்டர்னு வீடியோ எடுத்து வாட்சப்ல உலாவ விட்டானாம்


==========


12 சார். ஹீரோ சான்ஸ் வேணும்.
இதுக்கு முன்னால உன் முகத்தை கண்ணாடில பார்த்திருக்கியா?
கண்ணாடில முகம் பார்த்தா சான்ஸ் தருவீங்களா? அடடே!

==============

13 டாக்டர், 5 கிலோ அஸ்கா சர்க்கரை வேணும்

யோவ், இது என்ன ரேஷன் கடையா?

சுகர் ஃப்ரீ மாத்திரை கிடைக்கும்னு போர்டு இருக்கெ? அப்போ சுகர் ஃப்ரீதானே?


===========
14 டைரக்டர் சார், பேய்னா வெள்ளை டிரஸ் தானே?ப்ளூ கலர் சேலை ஜாக் போட்டிருக்கு?
பேயோட பேரு நீலவேணி, எப்டி?மேட்சுக்கு மேட்ச்?


============

15 அப்பா சம்பாதிச்ச காசுல ஊர் சுத்திட்டு இருக்கியே?ஊர் உலகம் என்ன சொல்லும்?
நமக்கு நாமே டூர் பிளான்னு சொல்லும் டாடி


============

16 என் பையன் கணக்குல புலி
எப்படி?
ஸ்டெப்ஸ் எதுனா மறந்துட்டாக்கூட ஃபேண்ட்டசியா எதுனா எழுதி சமாளிச்சிடுவான்


=============


17 தலைவரே! பிளாட்டினப்பேரன்னு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?

ஆமா, தங்க மகன்னு தான் தனுஷ், ரஜினி ஆல்ரெடி நடிச்ட்டாங்களே?


=============

18 டாக்டர்! பப்பாளி சாப்ட்டா பொலிவு வருமா? முகத்தில் தேய்ச்சுக்கிட்டாலா?
எதுக்கு டவுட்? ஒரு பழம் சாப்ட்டுட்டு ஒரு பழம் தேய்ச்சுக்குங்க


==============

19 மாஸ் ஹீரோயின்னு பேர் வாங்க ஆசை
அது முடியாது மிஸ்!வேணா பப்ளி”மாஸ்” ஹீரோயின்னு பேர் எடுக்கலாம் நீங்க


=============


20 தலைவரே! பிரச்சாரத்துல தனக்குத்தானே ஆப்பு வெச்சுக்கறீங்க
எப்டி? கலெக்”சன்” இல்லா ஆட்சி
கரப்”சன்” இல்லா ஆட்சி தருவோம்னீங்களே?

============

0 comments: