Wednesday, March 23, 2016

டாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்? 18+

1  எங்க தலைவர் 2 மணி நேரம் எந்தக்குறிப்பையும் பார்க்காம மேடைல பேசுனாரு, அதனால அவருதான் சிஎம்

அப்போ மதுரை முத்து கூடத்தான் 3 மணி நேரம் பேசுவாரு  விஜய் டிவில

=================

2 முன்னாள் மினிஸ்டரை Ex-Ministerனு கூப்பிடறோம்! புதுசா மந்திரி ஆக ஆசைப்படறவங்களை, எப்படி விளிக்கிறது?

நப்பாசை அமைச்சர்


===============

3  கேப்டன் - என்னைக்கேட்காம சரத் குமாரை ஏன் உள்ளே வரச்சொன்னீங்க?

பிஜேபி = நீங்க வந்துட்டா அவர் ஆட்டோமேடிக்கா கிளம்பிடுவாரு


===============

4   தலைவரே! எல்லா கட்சியும் தனியா போட்டியிட்டா என்ன ஆகும்?

வாக்கு வங்கி சதவீதம் எல்லார்க்கும் தெரிஞ்சிடும், ஒரு பய மதிக்க மாட்டான்


=================

5  உங்க தலைவர் ஒரு திருடரா? இல்லையா?

அவர் மட்டும் திருடலையா?

 அது பதில் இல்லை. கேட்ட கேள்விக்கு பதில். உங்க தலைவர்  திருடுனாரா?யோக்கியமா?


===============

6 எங்க கட்சி தான் தலித் மக்களுக்கு பதவி தரும் ஒரே கட்சி

 ஓஹோ, அப்போ முதல்வர் வேட்பாளரா உங்க வாரிசை அறிவிக்காம ஒரு தலித்தை அறிவிக்கலாமே?


====================

7 குடும்ப அரசியலை மிக கடுமையாக எதிர்ப்பவன் நான், மேலும்....

 தலைவரே, ஒரு நிமிசம், நம்ம கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?

ஹிஹி, என் பையன் தான்


==================


8  தமிழகத்தை 60 வருடங்களாக அவர் கொள்ளையடித்தார், 20 வருடங்களாக இவர் கொள்ளையடித்தார், எனவே வாக்காளர்களே! எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரவும்!


===============

9  இந்த ஆட்சியில் திருட்டை , திருடர்களை ஒழிக்க முடியவில்லை.. எனவே.....

தலைவரே! நம்மை ஒழிச்சிருந்தா நாம எப்படி தேர்தலில் போட்டி போட?


===============


10 தலைவரே! எதுக்கு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்றீங்க?

  கறுப்பா இருக்கறவனுக்கு ஓட்டு கிடைக்காதாம்


================

11 தலைவரே! எதுக்கு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்றீங்க?


கறுப்பா இருக்கறவனுக்கு ஓட்டு கிடைக்காதாம்==============12 டாக்டர்! 4 கடை வாய்ப்பல்லில் 1 தான் வளருது ஏன்?
நீங்க வீட்டுக்கு 4 வது கடைக்குட்டியா இருக்குமோ?


=================


13 ஒருத்தன் தன்மான சிங்கமா? இல்லையா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?
அவனுக்கு கல்யாணம் ஆகாம இருந்தா தன்மான சிங்கம்


===============


14 வண்டில PRESSனு எழுதிருந்தா போய் ப்ரெஸ் பண்ணிட்டு ஒண்ணுமே ஆகலையேன்னு பீல் பண்ணுவன் நான்


நல்லவேளை,லேடி பிரெஸ் ரிபோர்ட்டர் யாரும் எதிர்ல வர்ல

=================


15 உங்க தொப்பை குறையனும்னா டெய்லி பத்மாசனம் செய்யனும்
டாக்டர்! பத்மா ஆசனம் செஞ்சா பத்மாவோட தொப்பை தானே குறையும்?===============16 மிஸ்! மயில் தோகை போல் நீளமான அழகான கூந்தலை கட் பண்ணி ஏன் பாப் கட்டிங்க் பண்ணிக்கிட்டீங்க?
நான் பாப் சிங்கர் ஆகப்போறேன், மேட்சுக்கு மேட்ச்


====================


17 என்னோட படைப்பை ஃபேஸ்புக்ல பாத்து மோட்டிவேட் ஆகிருக்கீங்களா யாராவது ?
எஸ் மேடம், உங்க பொண்ணு ஃபோட்டோ பார்த்து


==================18 சங்கீதாவுக்கு sangeetha தானே கரெக்ட் ஸ்பெல்லிங்க்? நீங்க தப்பா போட்டிருக்கீங்க?
நான் ஒரு பாடகி ஆச்சே? அதான் "SONG"EETHAAனு போடறேன்
==================19 எந்த நல்ல செய்தியா இருந்தாலும் என் கிட்டே தான் சொல்றாங்க, என்னை ராசியா நினைக்கறாங்களோ?ஓஸி ரோஸியா நினைப்பாங்க போல, எதுனா ஓசி கேட்பானுங்க


==============

20 டாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்?

எதுவும் செய்யக்கூடாது.வாசல் திண்ணைல போய் கம்முனு படுத்துக்கனும் தனியா


================

0 comments: