Tuesday, March 01, 2016

ஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம் தனியார் ஊழியர்

பொண்ணுங்க பாட்டுக்கு  அமைதியா போனாக்கூட ஜடையைப்பிடிச்சு இழுத்து ஏன்  என்னைக்கண்டுக்காம போறே?ன்னு கேக்கறவன் தான்யா நெட் தமிழன்==============உப்பு, அஸ்கா சர்க்கரை, மைதா   போன்ற வெள்ளை நிறப்பொருட்களை எந்த அளவு உண்ணுவதைக்குறைக்கிறோமோ/தவிர்க்கிறோமோ அந்த அளவு உடல் ஆரோக்யம் நீடிக்கும்=============3   நாளை பார்க் ,பீச்சில் கூடும்  காதலர்களே! ஆர் எஸ் எஸ் இயக்கம்  உங்களுக்கு கல்யாணம் பண்ண திட்டம் போட்டிருக்காம், கிரேட்  எஸ்கேப், ஓடிடுங்க
===================
2016 ல ஜெயம் யாரு பக்கம் இருக்கும்?இப்போதைக்கு என் கணிப்பு ஜெ யின் பக்கமே ஜெயம்.எதிர்க்கட்சிகளிடம் இருக்கு பயம்===========

5 இரண்டு பலவீனர்கள் ஒன்று சேர்வதால் இருவரும் பலசாலிகள் ஆகி விட முடியாது


========

6 தேமுதிக+ திமுக ஒன்று சேர்ந்தால் பலம் பெறுமா???"

கேப்டன் பலம், பணம் பெறுவார்


==========

7 சென்னை ,கடலூர் போன்ற வெள்ளம் பாதித்த தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற போராட வேண்டி இருக்க்கும்.மீதி எல்லாம் எழுதி வைத்த.வெற்றி


===========

8 what will happen if DMDK allies with DMK?


கேப்டன் க்கு லாபம்.ஜெ வின் வெற்றி உறுதி,அவரால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது


===============
9 இப்ப நீங்க யாருக்கு ஜால்ரா அடிக்கறிங்க."


நிச்சயம் திமுக அதிமுக வுக்கு அல்ல.2ம் ஒரே குட்டையில் ஊறிய ஊழல் மட்டைகளே"!


=============

10 கோபத்தில் இருக்கும் அன்புக்குரியவரை சமாதானப்படுத்த பெரும்பாடு படவேண்டி இருக்கிறது


=============

11 அன்பின் பலமும் பலவீனமும் அன்பு கொண்டவருடன் வைத்திருக்கும் உடைமை உணர்வே!(பொசசிவ்னெஸ்)


===========


12 இதுவரை அன்புக்கு உரியவரிடம் காதலை சொல்லாமலேயே இருந்தால், மனசுக்குள்ளேயே மருகிக்கொண்டிருதால் அதுதான் தூய்மையான, நிலையான காதல்


=================


13 இந்தியாவிலேயே கலப்பு மணம் குறைவாய் இருக்கும் மாநிலம் என தமிழ் நாட்டை திட்டாதீர்! அது பெற்றோருக்கு செய்யும் மரியாதை.தமிழன் அதில் முதலிடம்


==========14 வாசிப்பு அனுபவம் இல்லாமல் ஒரு முழுமையான எழுத்தாளன் உருவாகிட முடியாது.===========15 நகர்உலா முடித்து வீட்டுக்கு திரும்பும் காதலர்களே! தலைக்குக்குளித்து பின் வீட்டின்உள்ளேசெல்லவும், பரிசுத்தமான பாரதத்தை நோக்கி மேலும் ஒரு அடி!
=================
16 அட்டை கொண்டாந்து மெத்தைல வெச்சாலும் அது காட்டுக்கு தான் போகுமாம்

அத்தையை  தரையில் படுக்கச்சொன்னாலும்  COTக்கு தான் போகுமாம் # எதுனா உளறுவம்


================

17  அரிசி 
ஆண்பாலா / பெண்பாலா...?

நமக்கு உணவு ஊட்டும் எல்லாமே பெண் பால் தான், அம்மா போல்


==============


18  விடியும் வரை  காத்திரு க்காதே! அதி காலையிலேயே எழுந்திடு


==================


19 ஏராளமான சலுகைகள் , சம்பளம், கிம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் அதுவும் பத்தலைன்னா  ராஜினாமா பண்ணிட்டு தனியார்  ஊழியர்களுக்கு வாழ்வு தரலாமே?


================


20 ஆட்சி மாறுவது போல்  5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம் தனியார் ஊழியர் என பிரிச்சு மாற்றி விட்டால் அரசு ஊழியர்களுக்கு புத்தி வரும்


==================


0 comments: