Sunday, March 06, 2016

144 டூ 251? அல்லது 420?

மாற்றுத்திறனாளிகள பாதுகாப்பதில் தமிழகம் தான் சிறந்த மாநிலம் -OPS # முதுகெலும்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவி தந்தது அம்மாதானே?


=============
2 கருணாநிதி எனக்கு அப்பா மாதிரி.. தப்பா பேசாதீங்க: சீறும் குஷ்பு #,அப்பா கட்சியை விட்டு ஏன் விலகுனீங்கனு மக்கள் கேட்கறாங்க மேடம்============3 ரவுடித்தனம் என்பது என்னவென்றே திமுக.வுக்கு தெரியாது -ஸ்டாலின் # அண்ணன் அழகிரி கிட்டே கேட்டா சொல்லித்தருவாரே?============4 திமுகவை பிரேமலதா விமர்சித்தாலும் தேமுதிக கூட்டணிக்கு வரும்: கனிமொழி -

# அப்போ பிரேமலதா திமுக வுக்கு மாமியாரா?நீங்க ஜோசியரா?


============

5 திமுகவும்,அதிமுகவும் ஒன்று தான்.-நல்லுகண்ணு.# திமுக வில் பெரிய குடும்பம் ஊழலுக்கு துணை போக காத்திருக்கு.அதிமுக வில் தோழி சசிகலா மட்டும்

============

6 நித்யானந்தா 4 மடங்களில் மடாதிபதியாக செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை !# ரஞ்சிதா வுக்கு இடை கால தடை உண்டா?


===============

7 திராவிடக் கட்சிகளுடன் சேர மாட்டார் விஜயகாந்த் - டிராபிக் ராமசாமி திடீர் தகவல் # இவருக்கு ஏதோ சிக்னல் கிடைச்சிருக்கு போல

============

8 60 நாட்களில் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய யாஹூ முடிவு.. .WHO WHO?


=============

9 எல்லா தரப்பும் ஜெ அரசுக்கு எதிராக போராடிக்கொண்டுள்ளது: கருணாநிதி காட்டம் #,அழகிரி தரப்புமா?தலைவரே


============

10 அதிமுக ஆட்சிக்கு வந்தா தான் ஒட்டுமொத்த பிரச்சனையையும் தீர்க்க முடியும் - ஜெ #  சசிகலா பிரச்சனையையே உங்களால இன்னும் தீர்க்க முடியல


================


11 பிஜேபி,  காங்கிரஸ், அதிமுக, திமுக ,மதிமுக என  அனைத்து கட்சியிலும்  இருந்துள்ளேன் -பழ.கருப்பையா # பல ஊருக்குப்போன பரந்தாமன் மாதிரி பெருமை வேற


===============

12  மாநிலங்களவை.,மத்திய அமைச்சர் பதவிகளை திமுக எனக்கு இலவசமாக வழங்க வில்லை.
-அன்புமணி ராமதாஸ் # ஓவர் ரேட் வாங்கிட்டாங்களோ?


==============


13  234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான்- நத்தம் விஸ்வநாதன் # இருக்கலாம், ஆனா ஒவ்வொரு தொகுதியிலயும் வெற்றியைத்தீர்மானிக்கும் ராஜ்யம் அவர்============

14  ரூ. 251-க்கு ஸ்மார்ட் ஃபோன்: தொடங்கிய சில நொடிகளில் முடங்கியது முன்பதிவு # 144  டூ 251?  அல்லது 420?


==================


15 இந்தியாவில் தயாரிப்போம்' திட்ட வாரம் ரூ.15 லட்சம் கோடிக்கு முதலீட்டு உறுதி # மோடியின்  முக்கியமான வெற்றி இது, கோடிகளில் முதலீடு


================

16  2011 தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது - ஜெ # நல்லாட்சி தருவோம்னு ஒரு வாக்கு கொடுத்திருந்தீங்களே?அது? 


===================


17 :'நமக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில்வாழக் கூடாது'- அருண் ஜெட்லி # அதனாலதான் டீச்சர் கேள்விகேட்கும்போது தெரிஞ்சாக்கூட தெரியலைனு சொல்வோம்


===============


18 வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம்... 'நோ!' * ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அரசு பதிலடி # அப்டிப்போடு அருவாளை,இனி நீ ஸ்ட்ரைக் பண்ணுவே?


===============


19 ஏப் 14 முதல் விவசாயிகள் நாட்டில், எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு,, ஆன்லைன் மூலம் விற்கக் கூடிய திட்டம்- மோடி # சபாஷ்,கோடி புண்ணியம்


===============


20  800 ஆண்டுகளுக்கு முந்தையது: விராலிமலையில் அருணகிரிநாதர் தங்கிய குகை கண்டுபிடிப்பு  # புதுக்கோட்டை காதலர்களுக்கு இனி வேட்டை தான்


====================

0 comments: