Wednesday, March 02, 2016

500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்

எல்லா ஊழலையும் செய்த திமுக, காங். மீண்டும் கூட்டணி ஏன்?... பிரேமலதா அதிரடி கேள்வி # ஊழல் + ஊழல் = மெகா ஊழல் கூட்டணி


============2 அழகிரி என் பெயரை பயண்படுத்துவதா-கருணாநிதி #

ரத்த சம்பந்தமே இல்லாத குஷ்பூ பயன்படுத்தலாம்.ரத்தத்தின் ரத்தம் சொந்தப்பையன் பயன்படுத்தக்கூடாதா?


==========

3 மு.க. அழகிரி ஒரு துரோகி: கலைஞர் - குருதிப்புனல் னும் சொல்லலாம் தலைவரே.துரோகி யின் நிஜ டைட்டில் குருதிப்புனல் தான்


============

4 காதலர் தினத்தன்று தமிழ்நாட்டில் 9400 பெண்கள் கன்னித்தன்மை இழப்[பு -செய்தி # அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு போன மாதிரி அடிச்சுவிடறாக===============


இந்தியாவின் சுத்த நகரங்கள்.. 3வது இடத்தில் திருச்சி..! # ஊருக்கான மரியாதை பேருலயே இருக்கே? ”திரு”ச்சி, சபாஷ்

===============


உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் எதிர்ப்பு- நாட்டை விட்டு வெளியேறப் போவதாக அறிவிப்பு   #  மனசுக்குள்ளே கமல்ஹாசன், அமீர்கான்னு நினப்பு


==============


ரயில்வே துறை ஜெர்ஸி பசுவைப்போன்றது, ஆனால் மோடி அதில் இருந்து பால் கறக்கவே இல்லை-லாலு  # டீ மாஸ்டருக்கு தெரியாததா?1300 கோடி லாபம் வந்திருக்கே


================

8  "திமுக - காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறது" - குஷ்பு # எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.இனி எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேப்பீங்க?


===============


9  கருணாநிதி தான் முதல்வராக வேண்டும் : கூட்டணிக்கு ராகுல் வைத்த நிபந்தனை # அப்போதான் 2 ஜி யை வெச்சு கலைஞரை, கனிமொழியை மிரட்டிட்டே இருக்கலாம்


==============


10  எப்படியோஅடித்தகாற்றில்மேலேவந்து கோபுரக்கலசத்தில் ஒட்டிக்கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச்சொல்லத்தான் தெரியும்-கலைஞர்  சொல்றீங்க?


==============


11 இதுவரை ஸ்டாலின் 5 லட்சம் கிலோமீட்டர் பயணித்தார்-செய்தி # அதாவது பிறந்ததில் இருந்து இன்று வரை?


==============


12 "திமுக - காங்கிரஸ்' பொருந்தாக் கூட்டணி: வைகோ விமர்சனம் # கூடா நட்பு மீண்டும் கூடினால் மீண்டும் கேடாய் முடியும்


===============

13 ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தால் ரூ. 1,200 அபராதம்: மும்பை போலீஸ் திட்டம் # இது அதை விட பேராபத்தா இருக்கே?


============


14 } 500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: புதன்கிழமை வெளியிடுகிறது இந்திய நிறுவனம்..# தேர்தல் காலத்துல கட்சிகளுக்கு இது உபயோகமா இருக்கும் , ஒரு ஓட்டுக்கு ஒரு செல்ஃபோன்

==============15 இடைக்கால பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை: முக ஸ்டாலின்
# ஆமா.பாதிப்பு தான்.பயன் இல்லை.நம்ம கழகத்துக்கு


=============


16 இலங்கைத் தமிழர்களுக்கு நீதிகிடைக்க அம்மா போராடி வருகிறார் -OPS. #,தேர்தல் முடியும் வரை தொடர்ந்து போராடுவார் னு சொல்ல மறந்துட்டீங்க


===========

17 திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் அதன் எதிர் காலம் சிறப்பாக இருக்கும். -கி.வீரமணி #,ஆமா.கேப்டனுக்கு லாபம்.கலைஞருக்கு நட்டம்

===========

18 நமக்கு நாமே என்ற பெயரை ஒரு நாள் முழுவதும் யோசித்து எழுதி கொடுத்தேன்-கருணாநிதி.#,நமக்கு நாமமே ன்னு ஒரு செகண்ட்ல கலாய்ச்சுட்டாங்களே.தலைவா!

==========

19 ‘வாக்காளர்களே பணம் வாங்க வேண்டாம்': இல.கணேசன் வலியுறுத்தல் # ஏமாற்றுபவன் தராமல் இருக்க மாட்டான், ஏமாறுபவன் வாங்காமல் இருக்கமாட்டான்


=================

20  புதிய தமிழகம் கூட்டணி வைக்கும் அணியே வெற்றிபெறும்: கிருஷ்ணசாமி # இருக்கற கோமாளிங்க பத்தாதுன்னு இவர் வேற சிரிப்பு காட்டிட்டு இருக்காரு================

0 comments: