Thursday, March 03, 2016

எத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எப்படி சொல்றீங்க?

1  ஃபிகரை கரெக்ட் பண்ணலாம்னு பூக்கடை வெச்சியே என்னாச்சு?

எல்லாரும் ஓசிலயே பூ  வாங்கிட்டுப்போய்ட்டு மறுபடி கடைப்பக்கமே எட்டிப்பார்க்கல


==============

2  டாக்டர்! நோய்வாய்ப்பட்ட எல்லார்க்கும் கைல ஊசி போடறீங்களாமே?

ஆமா, நாய் வாய் பட்டா, ஐ மீன் நாய் கடிச்சா தொப்புள் ல ஊசி


================

டியர், உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே... !!!ஏன்?

பபுள்கம், சிவிங்கம் சாப்ட்டுட்டே பேசி இருப்பே================

தலைவரே! நடைப்பயணத்தில் 5 லட்சம் கிமீ நடந்தீங்களா?

பாட்ஷா ஃபார்முலா தான், நான் ஒரு கிமீ நடந்தா 100 கிமீ நடந்த மாதிரி


===============


5 மிஸ்! சமீபத்துல பார்த்ததுல உங்களுக்குப்பிடிச்ச படம் எது?

 எல்லாப்படத்தையும் நான் பால்கனில தான் பார்ப்பேன், சமீபத்துலபோய்ப்பார்க்கமாட்டேன்


================


இன்ட்டர்வ்யூவில்


கேள்வி கேட்டதும் ஸ்கூல் ஞாபகம் வந்துட்டு..."
மிஸ்! அப்ப சம்பளம் குடுக்கறப்ப.ஸ்காகலர்சிப் ஞாபகம் வருமா ?============

7 டியர்.வில் அம்பு சினிமா்போலாமா?


என்னைப்பொறுத்தவரை உன் புருவம் தான்.வில்.உன் கண் தான் அம்பு.கைல வேற காசில்லை.எதுனா சொல்லி சமாளிப்போம்

========


8 பொண்ணுங்கள்லாம் டெய்லி சேலைல ஆபிஸ் வந்தா செமயா இருக்கும்ல?


ஆமா.ஆனா ஆபீஸ் ல எவனும் வேலை பார்க்க மாட்டான்.சேலையைத்தான் பார்த்திட்டிருப்பான்


========

9 தலைவரே! உங்க வீட்ல இருந்த பசு மாட்டை, ஆட்டுக்குட்டியை ஏன் துரத்தி விட்டுட்டீங்க?

 என்ன தைரியம் இருந்தா அம்மா, அம்மேனு கத்தும்


==============


10 மேடம், பட்ஜெட்ல ஒரு வரலாற்றுப்பிழை இருக்கு

 என்ன அது?

 ஸ்டிக்கர் ஒட்ட ஆன செலவு இத்தனை கோடின்னு கணக்கே காட்டலையே?


=================


11 ஒரே நேரத்துல 2  வேலை செய்யறவங்க ஒருவேலையும் உருப்படியா செய்யமாட்டாங்க 

 ஏன்? தியேட்டர்ல சினிமா பார்த்துட்டே காதலிட்ட சில்மிஷம் பண்றாங்களே?


===============

12 லவ் பண்றப்ப இந்த 'அப்புறம்' வார்த்தைக்கு அப்புறம் என்ன தாங்க பேசுறது ?

 அப்றம் சொல்றேன்,இப்போ லவ் பண்ணிட்டு இருக்கேன்==============

13  தலைவரே! சமூக வலைதளத்தில் இருப்பவர்களை  ஏன் திட்டறீங்க?


அரசியல்வாதின்னா டெய்லி யாரையாவது திட்டனும், டீச்சர்னா  தலைல குட்டனும்


=================


14 உங்க முத பொண்ணுதான் உங்க குடும்பத்துக்கே முன்னோடியா? எப்டி?

 அவ தான் முத முதலா லவ்வரோட ஓடிப்போனா===============

15  ஒரு ஃபிகரோட  ஃபோட்டோவைப்போட்டு மை க்ளிக்-னு போட்டிருக்கியே?


ம், க்ளிக் பண்ணிட்டேன்


================

16 கேரளத்துப்பொண்ணுங்க எல்லாம் ஷார்ட் டெம்ப்பர் டைப் னு எப்டி சொல்றே?

ஷார்ட் ஸ்லீவ் ஜாக்கெட் /சுடி /சர்ட் தானே போடறாங்க பெரும்பாலும்


==========

17 தலைவரே! தமிழ் நாட்டின் சுற்றளவு எவ்ளோ?

2 1/2 லட்சம் கிமீ
ஓ.5 லட்சம் கிமீ நடந்ததா சொன்னீங்க?
2,டைம் ரவுண்ட் அடிச்சேன்

============


18 அமைச்சரே! சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நடத்தியாச்சா?

ம்.மன்னா!,சாதனையை சொல்லிக்காட்டி னால்தான் தெரியும்னா அது சாதனையா?


=============

19 மன்னா! பாரம்பரிய வழக்கப்படி மூத்த மகனுக்குத்தானே பட்டாபிஷேகம்?

என்னைப்பொறுத்தவரை இளைய மகனுக்கு பட்டமணிவிப்பதே ஷேமம்


==================


20  சார், எத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எப்படி சொல்றீங்க?

 போன் ஆட்சி ரொம்ப மோசம், இது மோசம், 2 ல எது பெஸ்ட்? மோசம் தானே?

===============

0 comments: