Saturday, March 26, 2016

கலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ துணை முதல்வர் 2 - ஸ்டாலின் அதிர்ச்சி

1  அப்பாவின் ஆதரவில் முன்னுக்கு வந்தவர் என யாரையும் எள்ளல் செய்யாதீர், நாம் அனைவருமே அம்மா, அப்பா ஆதரவில் முன்னேறியவர்களே!


==============


2 அரசியல்வாதிகளும் , பணமும், வெற்றியும்
1 கருணா”நிதி”
2 “ஜெய”லலிதா
3 வி”ஜய”காந்த்
4 அன்பு”MONEY"==============

3  ஒரு நல்ல புகைப்படக்கலைஞனுக்குண்டான முதல் தகுதி  தன் ஃபோட்டோவை எடுப்பதில் ஆர்வம் காட்டாது  இருத்தல்


================


4 ஒரு நல்ல தலைவனுக்குண்டான தகுதி தான் செய்த  மக்கள் சேவையை மக்களிடம் சொல்லிக்காட்டாமல் இருத்தலே # உதா - காமராஜர், எதிர் மறை உதா - கலைஞர் , ஜெ


=================


5 படிக்காத பாமர மக்களைக்கவர்ந்த எம் ஜி ஆர், ஜெ வை விட , படித்த மக்களைக்கவர்ந்த, அவர்களை  ஏமாற்றுகிற, ஏமாற்றிய கலைஞரே திறமை சாலி


===============

6  இலங்கயைச்சேர்ந்த பெண் என்பதை நீட்டி முழக்காமல் நெட் தமிழன் ஸ்த்ரீலங்கா-ங்கறான், சபாஷ் தமிழா!


================


7 நெட் தமிழன் அதிகாலையில் எப்பவாவது எந்திரிச்ட்டா கம்முனு இருக்கறதில்லை, ஃபாரீன் பொண்ணுங்க கிட்டே கடலை போட்டுட்டு இருக்கான்


=================

8  தோல்வியாளனை விட வெற்றியாளனுக்கு நிர்ப்பந்தம் அதிகம், அவன் தன் வெற்றியை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும், தொடர்ந்து வெல்லவேண்டும்


================

9 டியர்,என் முதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் புரிதல் உங்களிடம் இல்லை

 எல்லாருமே இளசு தான் வேணும்னு பிரியப்படுவாங்க, முதிர்ச்சி எதுக்கு?

==============


10 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி! கலைஞர், ஜெ இருவருமே ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்னு தெளிவா சொன்னாக்கூட  நீங்க அதிமுகவா?ங்கறான் ;-)


==============

11 கிணற்றுத்தவளையாய் இருக்காதே என கிராமத்தானை எள்ளல் செய்யும் நகரத்தானுக்கு கிணற்று நீச்சல் நிச்சயம் தெரிந்திருக்காது

============

12 10 பைசாவுக்கு வக்கில்லாத தொண்டனிடம் வன் முறை வெறி இந்த அளவு இருந்தால் கோடிக்கணக்கில் திருடிய தலைவனிடம் எந்த அளவு வன்முறை ஊறி இருக்கும்?

============

13 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி! கலைஞர், ஜெ இருவருமே ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்னு தெளிவா சொன்னாக்கூட நீங்க அதிமுகவா?ங்கறான் ;-)


============

14 உடன் பிறப்பே! இரும்பு இதயம் படைத்தவருடன் காந்தம் இழுத்துக்கொள்வதில் என்ன அறிவியல் விநோதம் நிகழ்ந்து விட்டது?# கலைஞர் + எழுச்சிக்கலைஞர்

================

15 பத்திரிக்கையில் பணி ஆற்றுபவர்கள் எப்படி கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகளாக இருக்கனுமோஅதேபோல் குறிப்பிட்ட நடிகரின்ரசிகராகஇல்லாதிருப்பதும் அவசியம்


==============


16 ஒரு நடிகரின் மகனை, ஒரு அரசியல் தலைவரின் மகனை கொண்டாடுவதும் , போற்றுவதும் அந்தந்த ரசிகர்/ தொண்டர் களின் தனிப்பட்ட உரிமை


===================


17 திமுக -காங்க்- தேமுதிக கூட்டணி ஜெயிச்சுட்டா சட்டபை கலர்ஃபுல்லா இருக்கும், கலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ துணை முதல்வர் 2


==================

18 தேர்தலுக்கு முன்பே வெளிவரப்போகும் 2 ஜி ஊழல் வழக்கு, ஜெ சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புகள் பிஜேபி கட்சி கூட்டணி லிஸ்ட் பொறுத்து மாறுபடும்


===============


19 அரசனை நம்பி புருசனைக்கைவிட்ராதே என மகாராணியைப்பார்த்து யாரும் சொல்லி விட முடியாது, ஏன்னா புருசன் , அரசன் 2ம் அவருக்கு 1


==================


20 நெட் தமிழன் ஒரு பொண்ணோட ட்வீட் நல்லாருக்குன்னு சொல்லிட்டு இலவச இணைப்பா சம்பந்தமே இல்லாம ஒரு லவ் ஜோடி ஃபோட்டோவை அதே பொண்ணுக்கு அட்டாச்சிங்


==================

0 comments: