Thursday, March 17, 2016

தலைவரே! நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்கு பேட்டி குடுத்தீங்க?

1 டியர்! பற்று வைக்க, பற்றிக்கொள்ள  ஏன் யோசிக்கறீங்க?

பற்று வைச்சா வரவும் வைக்கனும், எனக்கு மேத்ஸ் தெரியாது, பற்றிக்கொண்டால் பத்திக்கும் 

==============

2 டியர், மச்சத்தை வெளிக் காட்டிக் கொள்ளாம இருக்க ரொம்போ கஷ்ட ப்பட வேண்டி இருக்கு

ஃபுல் ஸ்லீவ் சுடி போடு, ஃபுல்லா கவர் ஆகிக்கும்


==============


3 தலைவரே! விளம்பரத்துக்கு மட்டும் 40 கோடி செலவு பண்ணி இருக்கீங்களாமே?


அதில் என்னய்யா  தப்பு? 4000 கோடி சம்பாதிக்கறோம், 40  கோடி செலவானா என்ன?


================
4 கெட்டப்புக்காக எதை வேணாலும் செய்யத்தயாரா இருக்கும் ஒருவர், எது செஞ்சாலும் கெட்டப்பே மாற்றாத ஒருவர் இணையபோறாங்களாம்

டைட்டில்?

கிலி


=================

5 லேடி இன்ஸ்பெக்டர் கிட்டே 'Catch u backனு சொன்னியா? பெரிய ஜில்லா  ரவுடி / ஹீரோன்னு நினைப்பா?

 அய்யோ சார், அப்புறமா கால் பண்றேன்னு அர்த்தம் அதுக்கு

===============


6  தலைவருக்கு 2 நாக பாம்பை கிஃப்ட் பேக் ல அனுப்பி இருக்கேன்
அதை அவர் ஓப்பன் பண்ணலைன்னா?
DO NOT OPEN-னு எழுதி வெச்சிருக்கேன்,நிச்சயம் திறப்பார்


================

==============


7 யுவர் ஆனர் , எனக்கு சொந்த பந்தம் யாருமே இல்ல

 ஓஹோ, அப்போ உங்களை ஜாமீன்ல எடுக்க மட்டும் இத்தனை பேர் எப்டி வந்தாங்க?


===============

8 தலைவரே!25 வருசமா ஜெயில்ல வாழ்நாளைக்கழிச்சவங்களுக்கு நீங்க என்ன உதவி செஞ்சீங்க?

 அவங்க கூட செல்ஃபி 1 எடுத்துக்கிட்டேன், ஓட்டு கூடுமில்ல?


===============


9 தலைவருக்கு 96 வயசு ஆகுது, கொள்ளுப்பேரனுக்கு 16 வயசு ஆகுது

 அப்போ 2 பேரும் என்ன தப்பு பண்ணாலும் ஜெயில்ல போட முடியாது?===============

10  இன்னமும் ஆண், பெண் பேசுனா காதல்ன்னு சொல்லுற முட்டாள் உலகம் இது

எஸ் மிஸ்! அவக கிடக்காக, உங்க ph.no  சொல்ங்க, நாம வாட்சப்ல  கடலை போடுவோம்


=================

11 தலைவரே! நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்கு பேட்டி குடுத்தீங்க?

சாரி, ஸ்மிருதிராணியை ஆதரிக்கிறேன்னு சொல்றதுக்குப்பதிலா மாத்திட்டேன்


================


12 டியர், நீ என் பக்கத்தில் இருந்தால்.பக்கம் பக்கமாக கவிதைகள் எழுதுவேன்

அட பக்கி, அப்போக்கூட கிஸ் தராம எழுதிட்டுதான் இருப்பியா?


=================


13 மேடம், எங்கே  உங்களைப்பார்க்கவே முடியலை  ஃபேஸ்புக் பக்கம்

ஃபோன் ரிப்பேர்ங்க

ஓ, நான் கூட படிப்பு வராதோனு நினைச்ட்ட்டேன்


===============

14  சார், உங்க சம்சாரம் அடிக்கடி ஃபோன் ரிப்பேர்னு சொல்லுதே எப்டி?

அடிக்கடி நான் தான் ஃபோனை வாங்கி உடைப்பேன்,சமைக்காம ஸ்டேட்டஸ் போட்டா


============


15 எனக்கெல்லாம் ட்விட்டர்-ங்கறது ஊறுகாய் மாதிரிதான்


 ஓஹோ, அப்போ ஃபேஸ்புக்  தயிர் சாதம்  மாதிரியா?வாட்சப் புளி சாதமா?


=============


16 என் பையன் கணிதன் ஆகனும்னு ஆசைப்படறான்

கணக்குல புலியா?

ஒரு ஃபிகரைப்பார்த்ததுமே இது செட் ஆகுமா? ஆகாதா?னு கணக்கு பண்ணிடுவான்


=================

17   பொதுவா நைட் ஷிப்டுக்கு பெண்கள் தோது படமாட்டாங்க. அவர்களும் விரும்புவதில்லை

ஏன் அப்டி?

கம்பெனி வேலை நடக்காது, கடலை வியாபாரம் தான் ஆகும்


===============

18  மிஸ்! புத்தம் புதிய புத்தகம் நீ!

ஓஹோ, உங்க டைரியை காட்டுங்க, ஒரு புத்தகத்திருவிழாவே நடத்தலாம்னு நினைக்கேன், எத்தனை பேர்ட்ட இதே டயலாக்?


==============\\


19  என் கூட நானே  அடிக்கடி சண்டைபோட்டுக்குவேன்

 ஏன் மிஸ்! உங்க கிட்டே சண்டை போடக்கூட யாரும் வர மாட்டாங்களா? அ டக்கடவுளே!


==================

20 டெய்லி நிம்மதியா தூங்கி எந்திரிக்கனும், இதான் என் குறைஞ்ச பட்ச ஆசை

வெரிகுட் மிஸ்! அப்போ அதிக பட்ச ஆசை?


வாய்க்கு ருசியா சாப்பிடனும்


================

0 comments: