Sunday, March 13, 2016

திமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்? ( ட்விட்டர் & ஃபேஸ்புக்)

1  தலைவரே! நேத்து நைட் ஏழரை மணிக்கு மாநாட்டில்  தாக்கி பேசுனீங்க. இப்போ நமக்கே ஏழரை ஆகிடுச்சு பாருங்க. நம்ம கட்சி MLAக்களை விலைக்கு வாங்கிட்டாக================
டியர், பிரேக்கப் பண்ணிக்கலாம், இனி நம்ம 2 பேருக்குள்ள எந்த டச்சும் வேணாம் சரி, உனக்கு கிஃப்டா கொடுத்த டச் ஃபோனை திருப்பிக்குடு


=============


3 சர்வர்! ரோஸ்ட் சொல்லி 10 நிமிசம் ஆகுது  .ஏன் இன்னும் வர்லை?


251 ரூபா கொடுத்துட்டு 4 மாசம் ஃபோனுக்காக  வெயிட் பண்றீங்க?20  நிமிசம் வெயிட்


===============


4  என் திறமைக்கு யாராலும் தீனி போட முடியலை

 மேடம், ஷூட்டிங்க் ஸ்பாட்ல டெய்லி 2 கிலோ மிக்சர் நொறுக்குத்தீனி சாப்டறீங்களாம், கட்டுபடி ஆகுமா?


==============


5 பேசிக்கலாவே நான் சாந்த சொரூபி.

மிஸ்! தம் அடிக்கனும், ரூபி தீப்பெட்டி கொடுங்க

டேய், என் கிட்டே எதுக்கு கேட்கறே?

இப்போதான் சாந்தசொரூபினீங்க


=================

6  கூட்டணி தர்மத்தை  ஏன் கடைப்பிடிக்கலை?

வீட்டோட மாப்ளையா போறவங்க மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது, மாமனார் வீட்டில் அதிகாரமும் பண்ணக்கூடாது


==============

7 டாக்டர், நார்த்தங்காய் சாப்பிட்டா  நார்ச்சத்து வருமா?


 விட்டா  இரும்புக்குதிரைகள் நாவல் படிச்சா  இரும்புச்சத்து வருமா?ன்னு கேட்பே போல


==============

டியர்! நேத்து என் கனவுல  மௌனராகம் டைம் ரேவதி வந்தாப்டி

 வாவ், என்ன பொருத்தம் பாருங்க, என் கனவில் புதிய முகம் டைம் சுரேஷ்மேனன் வந்தாரு=============

டாக்டர், வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டா  பித்தம் தலைக்கேறுமா?

 ஆமா, நர்ஸ் கிட்டே நான் இல்லாதப்போ வந்து கடலை போட்டா என் கோபம் தலைக்கேறும்

================

10  தலைவரே! பிலிம் இன்ஸ்ட்டிடியூட் பிரின்சிபால் உங்களைப்பார்க்க.வந்திருக்கார்


எதுக்கு?
எனக்கு நடிக்கத்தெரியாதுனு ஆதங்கப்பட்டீங்களாமே?

===============

11 மேடம்.காஞ்சிபுரம் மாநாட்டால உங்களுக்கு லாபமா? ந்ட்டமா?


லாபம் தான்.20 கோடி க்கு சரக்கு வித்திருக்கு டாஸ்மாக்ல===========


12 ஹாய் மிஸ்!,நல்லாருக்கீங்களா? எங்கே இந்தப்பக்கம்?


சாரி.நீங்க யார்னே தெரிலயே?
எனக்கும் தான் தெரில.தெரிஞ்சா மாதிரி கடலை போடலை?===========

13 சார், உங்க ஜோக்ஸ்  எல்லாம் பிளாக் காமெடி வகையறான்னு சொல்றாங்களே? நிஜமா?

ஆமா, நானும் பிளாக், என் ஜோக்சும் பிளாக்

=================

14  எதுக்காக  என்னை சனியன்னு சொல்றீங்க?

 டிய, சனிக்கிழமை  தானே  நாம முதன் முதலா சந்திச்சோம்? அப்போ  சனியன் தானே?அதுவரை நான் தனியன்

============


15 அடம்பிடித்து ஆர்ப்பரிப்பவர்களை, செல்லமாக  ”ரொம்பச்சி” னு  சொல்வாங்களாம் 

 அப்போ  அடம் பிடிக்காதவங்களை  கம்மியச்சிம்பாங்களா?


===============


16 டிவியில் எந்த TALK ஷோ பார்த்தாலும் "இது ஃபேக். இதல்லாம் போய் பாக்கறியே?ங்கறார்  என் ஆளு

 ஓஹோ, அப்போ DOG  ஷோ பாருங்க, வாலை சுருட்டிக்குவார்

=============


17  திமிர் பிடிச்ச  பொண்ணுங்க  இங்கே யார் யார்?

 தெரிலயே? விஷாலைத்தான் கேட்கனும், “ திமிரு” பிடிச்சவங்க யார் யார்?னு


================


18  தலைவரே! நம்ம கட்சிக்கு இது இறங்கு முகம்தான்


எப்டி?
நெத்தில ஒட்டிட்டு இருந்த ஸ்டிக்கரை தோள்பட்டைல ஒட்ட ஆரம்பிச்ட்டோமே?

=============

19 தலைவரே! அரண்மனை 1 ,அரண்மனை 2,எந்த டிவிடி வேணும்.


எதுக்கு?
எப்போதும் கிங்கா இருக்கனும்னு ஆசைப்பட்டீங்களே ?


============


20 கலைஞர் = ஏம்மா, எந்திரிம்மா, நான் உட்காரனும்

ஜெ = சாரி, இது லேடீஸ் சீட், நான் இருக்கும் வரை நான் தான் உட்கார்வேன்==================

0 comments: