Wednesday, March 09, 2016

“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கும்?

1  கருணாநிதியை ராகுலுடன் ஒப்பிட்டு பேசிய திக கி.வீரமணி  யாரை  அவமதிக்க நினைக்கறாரு? கலைஞரையா? ராகுலையா?=================
2  சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் - EVKS இளங்கோவன் # குஷ்பூ மனசை நோகடிக்காதீங்க சார், நீங்க சி எம் ஆவீங்கன்னாரே?

=============
தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு # நல்ல சவுண்ட் பார்ட்டி இல்ல? அதான், தக்க வெச்சுக்கிட்டாரு
================
4  நைஜீரியாவை அச்சுறுத்தும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலியானதாக தகவல்  # அய்யோ, லாசா காய்ச்சல் வந்தா உயிரே லாஸ் சா?

===============
5  மலேசியாவில் நயன்தாராவிடம் விசாரணை: புகைப்படம் வெளியிட்ட விமான நிலைய ஊழியர் சஸ்பெண்டு. # 9 கிரகங்களும் உச்சத்தில் இருந்துட்டாங்க போல
===============
6  தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை-பொன்.ராதா  # அதை  சாணக்கியத்தனம்னு வேற சொல்வாக

=============
மகளுக்காக நில ஒதுக்கீட்டில் சலுகை: குஜராத் முதல் மந்திரி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  # ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலைஞர்
================

சல்மான்கான் குடிபோதையில் தான் காரை ஓட்டினார்: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வாதம் # அவர் இதுவரை பச்சைத்தண்ணியைக்கூட தொட்டதில்லையாம்


===============

9  மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா. அம்மா ஸ்டிக்கர் பற்றிகுஷ்புகொதிப்பு # சாமி சிலைக்கு முன் கால் மேல கால் போட்டபடி உட்கார்ந்ததுக்கு இது தேவல


==========
10  கூட்டணிக்காக திமுக தரப்பில் தூது அனுப்பவில்லை, திருமண அழைப்பிதழ் மட்டுமே அளித்தனர்- ராமதாஸ் # தானைத்தலைவர் டெக்னிக்கே அதுதான் டாக்டர் அய்யா
========================
11 காமராஜர் இறந்தபோதே அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்- பழ.கருப்பையா வருத்தம் # சனி பிடிக்கனும்னு இருந்தா விடாது கறுப்பு==============
12  தமிழகத்துக்கு இனி நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்  # கவர்னர் ஆட்சி வர வாய்ப்பே இல்லையே? டாக்டர் அய்யா
=============
13 வாக்காளர்களை கவர காதணி விழா மூலம் தேர்தல் பிரச்சாரம்:புதுக்கோட்டை பாமக 80,000 அழைப்பிதழ் விநியோகம்# காது குத்து விழா , குறியீடு?
=============
14  சென்னை ஏர்போர்ட்- 55-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து # அங்கே இருக்கறவங்க இதை எல்லாம் எண்ணிப்பார்க்க மாட்டாங்களா?எண்ணிட்டே இருப்பாங்களா
===============15  ட்விட்டரில் விடுத்த கோரிக்கையை ஏற்று நோயாளிக்கு உதவிய ரயில்வே அமைச்சர் # வெரிகுட், பிரதமரின் பாராட்டுகள் ஆன் த வே
===============16 ஐஐடி.யில் படிக்கும் வெல்டிங் தொழிலாளியின் மகனுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை # வெல்டன் மை பாய்,வெல்டிங்
==============17 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ரூ.5க்கு ஆயுர்வேத மருந்து-செய்தி # சபாஷ்! சுகர் க்கு அஞ்சத்தேவை இல்லை, அஞ்சு ரூபாதான்
===============18  இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு அல்ல: தஸ்லீமா # ஆமாங்கோ, ஊழல்,கடமையிலிருந்து தவறுதல் எல்லாத்தையும் சகிச்சுக்கறோமே?
===================19  அரசின் திட்டப் பணிகள் தாமதமாக காங்கிரஸ்தான் காரணம்: - மோடி # பிரதமரா இருந்துட்டு இப்டி சொல்லலாமா? உங்க ‘கை” வரிசையை கை யிடம் காட்டவும்
=============


20 பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை-தமிழிசை # “ உதய சூரியன்”  வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கும்னு  பாலிடிக்ஸ் பாட்டனி சொல்லுது


===================

0 comments: