Monday, March 21, 2016

.சேட்டு அபிசியலா?சேட்டு பர்சனலா?சேட்டு ஜெனரலா?

தலைவரே!,5 வருசம் கழிச்சு தொகுதிக்கு வந்திருக்கீங்களே எதுக்கு?

இதென்ன கேள்வி?ஒவ்வொரு தேர்தலும் 5 வருசத்துக்கு ஒரு வாட்டி தானே வருது?


============

2 மிஸ்! எப்பவும் கைல குங்குமம் வார இதழை வெச்சிட்டிருக்கீங்களே ஏன்?

தமிழர்களுக்கு குங்குமம் வைத்திருக்கும் பெண்களைத்தான் பிடிக்கும்னு சொன்னாக


===========

3 டியர்.என் புருசன் நைட் ஷிப்ட் முடிஞ்சு காலைல 8 க்கு வருவார்.நீங்க 5 க்கு கிளம்பிடறீங்களா?எப்போ போறீங்க?

முடியட்டும்
விடியட்டும்


==========

4 சாரி சார்.எங்கப்பா ஒரு சேட்டு.நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டார்

ஓஹோ.சேட்டு அபிசியலா?சேட்டு பர்சனலா?சேட்டு ஜெனரலா?சொல்லுங்க.பேசிப்பார்ப்போம்


===========

5 அமைச்சரே ! மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஆம் மன்னா! ஆட்சி புரிவது கேப்மாரியா,மொள்ளமாரியா இருந்தாலும் மாரி தன் கடமையை செய்துவிடுகிறது

===========

6 டாக்டர்.ஒரு கொசுவத்தி பத்து சிகரெட்க்கு சமமாமே?நிஜமா?

ஆமா.அதுக்காக நைட் தூங்கறப்ப 10 சிகரெட் குடிச்சா கொசு வராதுனு நினைக்கப்படாது

============

7 சார். படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகர் னு அடிக்கடி நியூஸ் வருதே.எப்டி?

ஹீரோயின்ட்ட சேட்டை பண்ணினா நகத்தால கீறி.விட்டுடுவாக.


===========

8 ஜட்ஜ்= தாசில்தாரரான நீங்க அந்த லேடியோட பாடி வில் போல் இருக்குனு வர்ணிச்சீங்களா?

வில்லங்க சான்றிதழ் கேட்டாங்க.வில் அங்கம் னு நினைச்ட்டேன்


=============

9 சார்.சினிமா பிரபலங்கள் கூட போட்டோ எடுத்து அப்டேட்டிக்கறீங்களே எதுக்கு?

அந்தந்த ரசிக ரசிகைகளை கவர் பண்ணிக்கலாம்.கவர் எக்ஸ்ட்ரா.


==============


10 மிஸ்! உங்க தமிழ் ல சந்திப்பிழை அதிகமா இருக்கே?

ட்விட்டர் /ஃபேஸ்புக் சந்துக்கு வந்தவங்க சந்திப்பிழையைக்கண்டுக்க மாட்டாங்க


===============

11 டியர்.எனக்கு உடம்பு சரி இல்லைனு டாக்டர் சொல்றார்

நம்பாதே.நான் சொல்றேன்.உன் உடம்பு முகம் எல்லாமே செம


==============

12 மிஸ்! எப்படிங்க? இந்தியாவை விட்டு தொலை தூரத்தில் ஃபாரீனில் இருந்தாலும்் அத்தனை விஷயங்களையும் விரல்நுனியில வச்சிருக்கீங்க.?

விரல் நுனில மருதாணி தான் வெச்சிருக்கேன்


==========


13 தலைவரே! திராவிடம்ன்னா தமிழ் மட்டுமா? 🤔"

தெரில.ராகுல் திராவிட் டிடம் கேட்டு சொல்றேன்


================

14 தலைவரே!,அரசியல்ல உண்மையான திராவிடன் யாரு?

அது தெரில.சினிமால சத்யராஜ். அவர் தான் திராவிடன் பட ஹீரோ


=================

15 ஜட்ஜ் = உன்னைத்தொட்டு தாலி கட்ன புருசன் இவர்தானா?

லேடி = ஒரு கரெக்சன்.தாலி கட்டிட்டு அதுக்கப்புறமாதான் தொட்டாரு


===============

16 ஒரு பொண்ணு முகம் கண்ணுலயே நிக்குது.... ஒரு வேளை இதான் காதலா"

இல்லை.இது இன்பாக்சுவேசன்.உக்காந்தா தான் காதல்


==============

17 டாக்டர். பகல் கனவு பலிக்குமா?

தினம் அதிகாலையில் எழுந்து விட்டால் நீ கண்ட ,காணாத கனவெல்லாம் பலிக்கும்.உன் மனம் களிக்கும்

==============

18 தலைவரே! மேடைல பேசும்போது ஏன் நடந்துட்டே இருக்கீங்க?
ஸ்கூல்ல படிக்கும்போது நடந்துட்டே மெமரி பண்ணி அதே பழக்கம் ஆகிடுச்சு


============

19 தலைவரே! காலைல வாக்கிங்க் போக மறந்துட்டீங்களா?
ஆமா, எப்டி தெரியும்?
மேடைல பேசும்போது இப்டிக்கா அப்டிக்கா நடந்தே 4 கிமீ போய்ட்டீங்களே?


=============

20 தலைவரே! எந்த பேப்பரையும் பார்க்காம 2 மணி நேரம் எப்டி பேச முடிஞ்சது ?


இதை மனப்பாடம் பண்ண நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?எம்பிபிஎஸ் எக்சாம்க்குக்கூட இப்டி படிக்கலை

==========


0 comments: