Tuesday, March 15, 2016

ஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும்.கேப்டன் திமுக விடம் இன்னும் பிகு பண்ண வசதி


===========2 அன்புள்ள  ரஜினி காந்த் ல ரஜினிக்கு ஜோடி யாரு?


 அது நினைவில்லை, ஆனா அதுல ரஜினி தூக்கி வளர்த்த பேபி மீனா தான் எஜமான் ல டூயட் பாடுன மீனா

===============


3 உன் முதுகில் குத்துபவனிடம் ஜாக்கிரதையாக இரு!
தன் முதுகில் , கட்சி பச்சை குத்துபவனிடம்  எச்சரிக்கையாக இரு


================

வேதாளம் பட வசூல் துப்பாக்கி வசூலை முந்திவிட்டதாக வரும் தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல, அதற்கு வாய்ப்பு இல்லை============


திமுக , அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி சேற்றை இரைத்துக்கொள்ளும் இத்தருணம் தான் 3 வது அணி பலம் பெற உகந்த தருணம் # ம ந கூ============6 உன் எதிரிகள்  அவர்களுக்குள் அடித்துக்கொள்ளும்போது நீ வேகமாக முன்னேறு================


7  3 வதாக ஒரு கட்சி நம்மை மீறி வந்து விட முடியாது என்னும் மனோதைரியம் தான் திமுக, அதிமுக இரண்டையும்  தமிழ் நாட்டில்  தொடர்ந்து  ஊழல்புரியவைத்தது===============எங்கள் ஆட்சியில் தான் சென்னை வெள்ளத்தில் மிதந்தது, டோட்டல் தமிழகமே டாஸ்மாக் தண்ணியில் மிதக்குது. ராசியான ஆட்சி தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை===========அவனவன் ஒரு லவ்வருக்கே வழி இல்லாம அல்லாடறான், நெட் தமிழன்  ஊருக்கு ஒரு லவ்வர் இல்லையேனு அங்கலாய்க்கறான்=================


10 ஒரு பொண்ணோட சாதா ட்வீட்டை நெட் தமிழன் வக்ரம்னு சொல்றாப்டி, அதெப்டின்னு விசாரிக்காம வேற  எதையோ சம்பந்தமில்லாம பேசிட்டிருக்கு, ஹய்யோ அய்யோ


================

11 ரயில்ல புக்ஸ் விற்கறவரு  பாத்ரூம் போய்ட்டு வர்றதுக்குள்ளே சமையல் குறிப்பு புக்கின் 40 பக்கத்தையும் ஒரு ஆன்ட்டி செல் ஃபோன் ல க்ளிக்கிக்கிச்சு


===============


12 தங்க தட்டிலையே சோறு போட்டாலும்,
சாப்பாடு நல்லா இருந்தா தான், சாப்பிட முடியும்.னு எந்திரிச்சு வந்துடாதீங்க, நைசா தட்டை சுட்டுடுங்க


===================


13  சம்மர்கட் அடிக்காத போலீசும்
கம்மர்கட் கடிக்காத லேடீசும்
காண்பது அரிது


================

14  அதிகாலையில் தினம் எழுந்து விட்டால் ஆதவனை மிஞ்சிய மா தவன் ஆகிவிடுவீர்!

============

15 உங்கள் எழுத்தில் கண்ணியமும் ,நாகரீகமும் தொடர உங்கள் எழுத்தை உங்கள் அருகில் இருந்து உங்கள் பெற்றோர் கவனிப்பதாக கற்பனை செய்தால் போதும்


=============


16 கவனிக்கப்படாத மெனக்கெடல்கள்..
பெருஞ்சோகம்!
மிஸ்! உங்க புரொபைல்ல "நில்!கவனி! RT செய்! னு போட்ருங்க

==============


17 பிரட் ஒரு பாக்கெட் குடுங்க
ஒயிட் பிரட் வேணாம்.பிங்க் கலர் பிரட் குடுங்க.
யோவ்.அதுக்கு பிங்க் பிரட்டி கேர்ள் தான் பேக்கரி ஓனரா இருக்கனும்


=============

18 திராவிடக்கட்சிகளை எதிர்ப்பதால் நீங்க குறிப்பிட்ட ஜாதிக்கட்சிக்கு ஆதரவா>?

ஜாதியை ஒழிக்க முடியாவிட்டாலும் ஜாதிக்கட்சியை வேரோடு அழிக்க வேண்டும் என்ற முனைப்பு உள்ளவன்


=============


19 நீ செய்த சாதனை,உதவி இவற்றை எல்லாம் நீயே சொல்லிக்காட்டிக்கொண்டிருந்தால் உன் மரியாதையை இழப்பாய்!


===========


20 பணத்துக்காக மட்டுமே/பணத்தை எதிர்பார்த்து மட்டுமே ஒரு படைப்பாளி எழுதுவதாக இருந்தால் இலக்கியவாதிகள், சிற்றிதழ்கள் உருவாகி இருக்க முடியாது


===============

0 comments: