Saturday, March 12, 2016

குமார சாமிக்கு ஆப்பு ரெடி

1  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க பரிசீலனை #  ஏற்கனவே வீட்டுக்குஉள்ளே பெண்கள் உள்ளாட்சி 100% நடக்குது, இனி இது வேறயா?


==============நேஷனல் ஹெரால்டு-சோனியா குடும்பத்தினர் ஆதாயம் பெறவில்லை-காங்கிரஸ் # ஆதாயம் பெற்றதுக்கு ஆதாரம் இருக்குன்னு ஆல்ரெடி தாயம் போட்டுட்டாங்களே?
============
நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய மசோதா: மத்திய அரசு ஆலோசனை # வெரிகுட், குமாரசாமில  இருந்து பிள்ளையார் சுழி போடுங்க
===============
4  ஹரித்வாரில் அர்த்த கும்பமேளா: 15 லட்சம் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு # 15 லட்சம் பேரோட பாவமும், அழுக்கும் கழுவுன நீர் எப்டி புனித நீராகும்?
================
செல்போனில் கணவர் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை நாகர்கோவிலில் # இதே டெக்னிக்கை ஆளாளுக்கு பாலோ பண்ணப்போறாங்க===========6 சொத்து குவிப்பு வழக்கு: கைதான என்ஜினீயர், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றது அம்பலம் சி.பி.ஐ. விசாரணையில் தகவல் #,மனசுக்குள்ள ஆ.ராசா ன்னு நினப்பு============
7 திமுக-காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்ய கருணாநிதியுடன்13-ந் தேதி குலாம்நபிஆசாத் சந்திப்பு

# பழைய பங்காளிங்க தானே? சேர்ந்துடுவாங்க


=============

8 ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. அறிவுறுத்தல் # மெடிக்கல் ஷாப் ஆளுங்க " கவனிச்ட்டாங்களா?" நிஜமாவேவா?

==============


9 இந்தியாவில் மத அரசியல் மிக மோசம் - அமெரிக்காவில் கமல் பேச்சு.# தாய் நாட்டின் பெருமையை வெளிநாட்டில் பரப்புங்கள்.குறைகளை அல்ல.

============

10 மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் புதியபடம்-செய்தி # அண்ணன் எப்பவும் ஒரு ஜோடியோட திருப்திப்படறதே இல்ல, 2 அல்லது 3 தான்==============


11  தேர்தலில் போட்டியிட தை அமாவாசை நாளில் 2,000 திமுகவினர் விருப்ப மனு # பகுத்தறிப்பகலவரான தானைத்தலைவர் அதை வளர்பிறை நாளில் பரிசீலிப்பார்

================12 மணமக்கள் நெற்றியில் ஜெ ஸ்டிக்கர் ஒட்டி ஏழைத் தம்பதியரை அவமானப்படுத்துவதா?- ஸ்டாலின் கண்டனம் # முதுகுல குத்தலையேன்னு சந்தோஷப்படுவோம்==============


13 ரஜினிகாந்த் கடவுள் போன்றவர் - நயன் தாரா #  ஆமா, அவருக்கு “ஆண்டவர்” , ”ஆண்டுகொண்டிருப்பவர்”னா ஒரு பயபக்தி உண்டு


==============14  வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவரை உதைத்த மனைவி சென்னை சென்டிரலில் பரபரப்பு# உள்ளூருலயே மாட்டிக்கிட்டானா? ஜாக்கிரதையா அவுட்டோர் போய்இருக்கலாம்

================


15  இந்தியாவிலேயே முதன் முறையாக மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம் தொடக்கம- ஜெ # டூவீலர் , இரட்டை இலை , குறியியீடு


=================


16 பலர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாலும் ஒருவரை தான் தொகுதியில் நிறுத்த முடியும்-கலைஞர் # பல கட்சிகள் போட்டியிட்டாலும் ஒருவருக்கே வெற்றி


===============


17  எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவு தேர்வை எதிர்ப்போம்-கலைஞர் # எண்ட்ரன்ஸ் எக்சாம்க்கு எண்ட் கார்டு வேணும்கறாரு "END"RANCE EXAM


===============


18  'தமிழகத்தில் பா.ஜனதா ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது': தமிழிசை சவுந்தரராஜன் # உதய சூரியனை , இரட்டை இலையை நம்பியே தாமரை மலர முடியும்


=================


19  கடலூர் -வெடிகுண்டு வதந்தி பல பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை # இதான் சாக்குன்னு லீவ் வேணும்கறவங்க எல்லாம் இதே ஃபார்முலா ஃபாலோ பண்ணிடப்போறாங்க


==================


20 நிலக்கரிச் சுரங்க முறைகேடு: எச்.சி.குப்தா உள்பட 6 பேருக்கு சம்மன் # நம்பினவங்க முகத்தில் கரி பூசிட்டாங்களா?


==================

0 comments: