Friday, March 04, 2016

தமிழா! உன் ஆதரவு யாருக்கு? நக்மாவா? குஷ்பூவா? நெஞ்சில் கை வைத்து சொல்!

வருவாய் குறைந்ததும், கடன் பெருகியதும் 
தான் ஜெ ஆட்சியின் சாதனை -ராம்தாஸ் # அதிமுக வாக்கு வங்கியும் 41% லிருந்து 31% ஆக குறைஞ்சிடுச்சு


============


2  செல்போனில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியை திமுக தொடங்கியுள்ளது # செல் ஃபோன் மூலம் செய்யும் முயற்சி செல் லாது தலைவா!நாட் ரீச்சபிள்


=============

தமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டுவேன்: சாக்ஷி அகர்வால்..#,திறமை காட்டுங்க.முடியலைன்னா கிளாமர் காட்டுங்க.ஜெயிக்க ரெண்டே பார்முலாதான்=============4 சென்னைIIT.மாணவி சாமியார் ஆசிரமத்தில் மீட்பு: மேலும் மாணவிகள் சிக்கி னர்#,குடியைத்தான் ஒழிக்க முடியல.போலி சாமியார்களையாவது ஒழிக்கலாமில்ல?
============5 தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது-OPS சொல்றீங்க.வகை தொகையா கேட்கத்தோணுது.நகையா எடுத்துக்கறோம்.
===========6 பாஜக கூட்டணிக்கு எந்தகட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்-H.ராஜா! # மாரி, கேப்மாரி,மொள்ளமாரி, யார் வந்தாலும் ஏத்துக்குவீங்களா? நீங்க என்ன கலைஞரா?
============7  திமுகவை தட்டி கேட்கும் உரிமை எனக்கு மட்டும் உள்ளது - அழகிரி  # அப்பாதான் தலைல குட்டி உட்கார  வெச்ட்டாரே?
============படுத்து கெடந்த காங்கிரசை தூக்கி நிறுத்தியவர் இளங்கோவன் - குஷ்பு # கோமா  ஸ்டேஜ்ல இருப்பவர் படுத்து இருந்தாலும் நிற்க வெச்சாலும் ஒண்ணுதானே?=============9  ரூ.14,200 கோடி வரி ஏய்ப்பு: வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை மீண்டும் நோட்டீஸ் # அடேங்கப்பா, வரி ஏய்ச்ச லாபமே இவ்ளோன்னா நிகர லாபம்?==============10 குலதெய்வக்கோயிலில் விஜயகாந்த், பிரேமலதா பூஜை #  என்னதான் கட்சிக்காரங்க , நிருபர்களுக்கு கோபத்தில் பூஜை போட்டாலும் சாமிக்கும் பவ்யபூஜை!


==============


11 திமுக விரும்பினால்
திமுக வேட்பாளர்களை
ஆதரித்து பிரச்சாரம்
செய்வேன்-நக்மா # 24 மணி நேரமும் கதவு திறந்தேதான் இருக்கு, தாராளமா நீங்க வரலாம்


===============


12 கார்கிலில் ஊடுருவி வாஜ்பாயின் முதுகில் குத்தியது பாக்-.நவாஸ் ஷெரீப்  # முதுகில் குத்துனது எதிரியா இருந்தா அப்பவே அவன் நெஞ்சில் குத்தனும்


=================

13 ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டின் தலைவராக திகழ்வேன்-  மோடி  # உள்நாட்டுக்கா?வெளி நாட்டுக்கா? நாம எப்பவும் வெளிநாட்டில்தானே இருக்கோம்?


================


14 அழகிரியின் ஆட்டத்தை சமாளிப்பேன்-கலைஞரிடம் கனிமொழி உறுதிமொழி # வீட்டுப்பிரச்னையையே தீர்க்கமுடியலை, நாட்டுப்பிரச்னையை எப்டி தீர்ப்பாங்க?


==================

15 மாநாடு முடிந்ததும் விருந்து: விஜயகாந்த் ரகசிய ஏற்பாடு # எல்லா பேப்பர்லயும் நியூஸ் வந்திடுச்சே, அப்புறம்  என்ன ரகசியம்?


=============

16 234 தொகுதிகளிலும் திமுக. கூட்டணி வெல்லும் ராகுல் பிரதமர் ஆவார் குஷ்பு பேச்சு. # குழப்பாதீங்க, அப்டியே ஜெயிச்சாலும் கலைஞர் தானே சிஎம் ஆவார்?


================


17 மயிலாப்பூர் தொகுதி யாருக்கு?மல்லுக்கட்டும் குஷ்பு - நக்மா  க்கு தங்கச்சி ஜோதிகா, சூர்யா ரசிகர்களும் ஆதரவு தருவாங்க,அதான் பெஸ்ட்


=================


18  இலவசத்தை காட்டி ஏமாற்றுகின்றனர்!-பண்டாரு தத்தாத்ரேயா ( பிஜேபி)  # இரட்டை இலை  வசம் இருக்கும் ஒரே ஆயுதம் இப்போதைக்கு இலவசம் தான்


===============

19  8 மாநில  இடைத்தேர்தல் உ.பி., கர்நாடகாவில் பா.ஜ., அபாரம்: காங்கிரசுக்கு பின்னடைவு # எல்லோரும் கையை கை கழுவும் நேரம் இது,விதிவிலக்கு-கலைஞர்


===============
20 தவறான பிரசாரத்தை நம்பி, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்-ஓபிஎஸ் # ஆமா சென்னை  வெள்ள பாதிப்புக்கு இயற்கை சீற்றம் தான் காரணம்,னு சொன்னதைத்தானே?


=====================

0 comments: