Sunday, March 20, 2016

ஊட்டி பியூட்டி

முதல்வர் கனவில் உள்ளோர் வாக்கு வங்கி வரிசைப்படி
1 ஜெ
2 கலைஞர்
3 கேப்டன்
4 அன்புமணி 
5 வை.கோ
6 ஜிகே வாசன்
7 சீமான்


==============


2 நல்ல மனம் ,போராட்ட குணம்,பேச்சுத்திறன் இவை மட்டுமே ஒரு தலைவனுக்குப்போதாது என்பதற்கு உதா வை கோ


============

3 நிர்வாகத்திறன் ,ஆளுமை இவற்றில் டாப் 3
1 எம் ஜி ஆர்
2 ஜெ
3 கலைஞர்

===========

4 அபிமான ஹீரோ ஹீரோயினுடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை விட உங்கள் பெற்றோருடன் எடுத்துக்கொள்ளும் படத்தில் தான் நீங்கள் அழகாவீர்கள்


==========

5 தானைத்தலைவரும் ,புரட்சித்தலைவியும் ஊழல் பண்ணி சம்பாதிச்ச பணத்தை இப்போ செலவு பன்றாக.அன்பு மணி க்கு ஏது இவ்ளோவ் பணம் ?

============


6 அரசியல்வாதிகளை விமர்சிகும்  உனக்கு இந்த மொபைல் வாங்க ஏது பணம்


ஊரை ஏமாத்தாம யார் கிட்டேயும் வாக்குப்பிச்சை கேட்காம கூழைக்கும்பிடு போடாம சம்பாதிச்சேன்

==============

7 எம்ஜிஆர்,கலைஞர் ஆட்சியில் MLA,MP க்கள் சம்பாதித்தது போல் ஜெ ஆட்சியில் சம்பாதிக்க முடியாது என கணிக்கிறேன்.90% ஜெ வுக்கே போய்டும்==============

8 எல்லோரும் சம்பாதிக்கனும் எனும் நல்லெண்ண அடிப்படையில் முதல்வர் ,MLA,MP பதவி ஒவ்வொருவர் வாழ்நாளிலும் ஒரு முறையே எனும் சட்டம் வந்தால்.


============

9 ஒரு குடும்பத்துக்கு (ரேசன் கார்டு படி) ஒருவர்க்கு மட்டுமே அரசு வேலை என்பது சாத்தியம் ஆனால் நல்லது

===============


10 அகல முதுகு கொண்டோர் ப நெக் ஜாக்கெட்டும் ,போஷாக்கான உடல்வாகு உள்ளோர் யு நெக் ஜாக்கெட்டும் அணிகின்றனர் # கேள்வி அறிவு


==============

11 எதிரி ஆள் பலம் ,பண பலம் கொண்டிருந்தால் மனம் கலங்கி விடாதே! சாணக்யன்,சகுனி எல்லாம் மூளை பலத்தால் முன்னுக்கு வந்தார்கள் என்பதை மறக்காதே!


==============

12 நெட் தமிழர்களில் கமல் ரசிகர்கள் தான் கண்ணியக்குறைவாக பேசுவதில்லை.ஏ சென்ட்டர் ரசிகர்களைப்பெற்றதில் கமல் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்


============
13 உன் எதிரி உன் அருகில் இருந்தால் நீ இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.எதிரி ஒரு பெண் எனில் பன் மடங்கு எச்சரிக்கையுடன் இரு!


==============

14 யாரைப்பற்றி யாரிடம் நீ குறை கூறினாலும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட நபரை அது சென்றடைந்து விடும் என்பதை மனதில் கொண்டு பின் புரணி பேசு

===========

15 2016 ல் கேப்டனால் முதல்வர் ஆக முடியாது.ஆனால் யார் முதல்வர் என மக்கள் தீர்மானிப்பதில் கேப்டனின் முடிவை சார்ந்தே இருக்கும்


============

16 யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணிடம் தணிமையில் நீ குழைந்து பேசினால் எப்படியும் அப்பெண் அதை பெருமையாக 4 பேரிடம் பகிர்வாள் என்பதை நினைவு கொள்


==============

17 ஒரு பெண்ணிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்பதற்காக ஆணுக்குண்டான கம்பீரத்தை விட்டு விடாதே!கெத்து நம் சொத்து===========

18 நீ எப்போதும் தேன் போல் இரு.எத்தனை நாட்கள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே!


============


19 போட்டியில் பங்கேற்பாளனாக இரு .வெற்றியோ தோல்வியோ விரைவில் நெ 1 ஆவாய்! .வேடிக்கை பார்ப்பவனாக இருந்தால் பத்தோடு பதினொன்றாய் ஆவாய்!


===============

20 ஊட்டின்னா என்ன நினைவு வருது?னு ஒரு பியூட்டி போட்ட ஸ்டேட்டஸ்க்கு 50% நெட் தமிழன்கள் நீங்க தான் மிஸ்!ங்கறாங்க.செம டெக்னிக்பா


=============

0 comments: