Friday, March 18, 2016

ஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட் பர்

1  லாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது-BSNLஅதிரடி முடிவு # லாபம் வரும்போது கமுக்கமா அமுக்கிக்கிட்டு நட்டம் வந்தா இப்டி============
சமகவில் என்னை நீக்கும் உரிமை சரத்க்கு இல்லை- MLA நாராயணன்

# ஒரு கட்சியின் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் பற்றி நாலெட்ஜ் உங்களுக்கு இல்லை


===========

3 சமக வை விரைவில் கைப்பற்றுவோம்-எர்ணாவூர் நாராயணன்# சமாதானம் ஆகி சரத் கை பற்ற வாழ்த்து.


==============

4 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபடவேண்டும் -ஜெ # போனாப்போகுது.ஒரு 10 சீட் எதிர்க்கட்சிக்கு விட்டுக்கொடுங்க.பாவமில்ல?

-=============

5 40 லட்சம் போலி வாக்காளர்கள் கருணாநிதி குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தக்கூடாது-இல.கணேசன்# ஆமா அதுல 20 லட்சம் திமுக 20 லட்சம் அதிமுக வாம்


===============

6 திமுக ஆட்சி அமைந்தால் 90லட்சம் பேருக்கு வேலை: ஸ்டாலின் # நமக்கு நாமே திட்டப்படி சுய தொழில் தொடங்கச்சொல்லிடுவாரோ?


================

7 பா.ஜனதா – தே.மு.தி.க. கூட்டணி பேச்சு தொடரும்: தமிழிசை சவுந்தரராஜன் # மழை விட்டாலும் தூவானம் ("தூ"றல்) விடாது என்பது போலவா?


=============


8 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்..# (ஏ)மாற்றம் ,பின்னேற்றம்


===========

9 ஜெ சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
# எதிரிக்கு எப்பவும் அவகாசம் தரனும் - மோடி மைன்ட் வாய்ஸ்


=============


10 சிப்ஸ், பீட்சா, கோலா பானங்களில் எச்சரிக்கை படங்கள்- மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தல் # அப்டி எச்சரிச்சு எதுக்கு விக்கனும்?தடை போடலாமே?

=============


11 தலைக்கு சாயம் பூச ரூ.55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா
# ஊரான் வீட்டு நெய்யா என் பொண்டாட்டி கையா?கடைத்தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைச்ச கதை


==========


12 பிப்.20ல் தேமுதிக சார்பில் ‘தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு’: விஜயகாந்த் அறிவிப்பு! # கார்த்திக் நடிச்ச திருப்புமுனை எடுபடலை.அரசியலில் கேப்டனின் திருப்பு முனை எடுபடுதா?ன்னு பார்ப்போம்=========

13 கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த பகுதியும் வளர்ச்சி அடையவில்லை: பொன்.ராதா # இல்லையே?குற்றங்கள் அதிகரிச்சிருக்கே?அது வளர்ச்சிதானே?


==============


14 அரசு நிர்வாகம்-எல்லா துறையிலும் ஊழல் புற்றுநோய் போல் பரவியுள்ளது : ராமதாஸ் # புற்றுநோயை குணப்படுத்திடலாம்.ஊழலை எந்த டாக்டராலும் ம்ஹூம்


===========


15 பழ. கருப்பையாவின் குற்றச்சாட்டுகளுக்கு 'திராணியோடு' பதில் சொல்லுங்க-ஜெ க்கு விஜயகாந்த் சவால் # தி ராணி ஆப் அதிமுக.பேர்லயே திராணி இருக்கே?


=============

16 குஷ்பு எங்க அக்கா மாதிரி...- முத்தம் கொடுத்த மாதவன் விளக்கம் # அடங்கொக்கா மக்கா! தமிழர்கள்னா தொக்கா? இதை நம்பறவங்க மக்கா


============

17 அறிக்கைகளை மட்டும் அறிவிப்பதில் ஜெ ஹீரோ,அதை செயல்படுத்துவதில் ஜீரோ - மு .க.ஸ்டாலின் குட் த்ரோ.மேடம்,த பால் ஈஸ்.ஆன் யுவர் கோர்ட்


==========


18 அ.தி.மு.க நடிகர் விசு பா.ஜனதாவில் சேர்ந்தார்; ‘மாற்றத்தை தருபவர் மோடி’ என்று புகழாரம் # மாற்றம் முன்னேற்றம் னு கட்சி மாறிட்டாரா?சபாஷ்


================


19 ஹேமமாலினிக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கியதாக சர்ச்சை: விதிமுறை மீறல் இல்லை என பாஜக # தாரே கோ ஜமீன் சஹாய ரேட் பர்


============


20 அழகிரி பிறந்தநாள்: ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் # கலைஞருக்கு, ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்தார்களா?


====================

0 comments: