Wednesday, March 30, 2016

500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்

பொண்ணுங்களைக்கவர,கடலை கன்ட்டிநியூ பண்ண நெட் தமிழன் புது டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்.எதுனா சமையல்குறிப்பு எடுத்துவிடறது ராணி புக் பார்த்து===============
2 பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் தேர்தல் கூட்டணி நல்லபடியாக அமையனும் என பிரார்த்திப்பதே கூட்டு பிரார்த்தனை
==============3 வீட்டு வாசல்ல பிகரு வாசக்கூட்டும்போது பிகரோட பெற்றோர் நம்மை முறைக்காம/துரத்திவிடாம இருக்கனும் என நினைப்பதும் கூட்டு பிரார்த்தனைஏ============4 அன்பே! துலாபாரம் தராசில் உன்னை நிறுத்தினால் தராசுக்கு டெபாசிட் போய் விடும்
============5 கரகாட்டக்காரன் கனகாவுக்கு மார்க்கெட் போய்ட்டா கனகாம்பரம் பூவுக்கும் மார்க்கெட் இருக்காது என நினைப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே
===============
6 சொந்தக்கருத்து, சொந்த தத்துவம் சொல்றவங்க எல்லாரும் சொந்த முகத்தைக்காட்டனும்னு அவசியம் இல்லை.
=============
7 தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் 3 கோடி பேர் என்பதும் , தேமுதிக திமுக பக்கம் கூட்டணிக்கு சாய்கிறது என்பதும் ஆளுங்கட்சிக்குப்பின்னடைவே!
=============8 Hair Cut பண்ண போறவன் எதுக்கு கூலிங் க்ளாஸ் போட்டுட்டு போகனும்😂
சிம்ப்பிள் லாஜிக், கண் ல முடி விழாம இருக்க, எப்பவும் ஸ்டைலிஷா இருக்க
=============9நெட்தமிழன் பொண்ணுங்களைக்கவர புதுடெக்னிக் வெச்சிருக்கான், நீங்க சீரியல்ல வர்ற ஹீரோயின் மாதிரியே இருக்கீங்க, சூப்பர் சிங்கர் போல் அழகுங்கறான்
=================10 இயற்கை விரித்து வைத்த இலவசப்புல்வெளி மைதானம் ஊரில் இருக்கையில் ட்ரெட்மில் விலைக்கு வாங்கி அதில் ஜாகிங்க் போவான் ஹை கிளாஸ் தமிழன்
=================
11 காயப்படுத்துவதற்காக உங்களிடம் எழுப்பப்படும் கேள்விகளை மவுனத்தாலோ, அலட்சியத்தாலோ எதிர்கொள்ளவும், அவர்கள் காயப்பட இது எளிய வழி
=============12 வெஜ்டபிள் பிரியாணியை சிக்கன் பிரியாணி ஆக்கனும்னா அதுல சிக்கன் போட்டா போதும், ஆனா சிக்கன் பிரியாணில இருந்து சிக்கனை எடுத்துட்டா வெஜ் ஆகாது
==============
13 போக்கிரி போல் படம் எடுத்தா ராஜா ஆகலாம்.

போக்கிரி ராஜா போல் எடுத்தா பிச்சைக்காரன் ஆகலாம்

==========


14 அந்த பழைய செல்வராகவனைப் பார்க்க முடியுமா? ன்னு ஏன் கேட்கறீங்க?
பழைய சோனியா அகர்வாலைப்பார்க்க முடியுமா?ன்னு டைரக்டா கேட்க முடியுமா?===========15 எல்லாத்துறைக்கும் பெண்கள் வந்துட்டாங்க, ஆனா இந்த குல்பி ஐஸ்க்கு இன்னும் ஆம்பளைங்க தான் வித்துட்டு இருக்காங்க, ஜிலீர்னு ஃபிகருங்க வந்தா தேவலை==========16 நீ எப்போதாவது சறுக்கும்போது கை தட்டுபவர்களை குறித்து வைத்துக்கொள், அவர்கள் தான் நீ வெல்ல வேண்டிய எதிரிகள்
=============17 கற்பனைக்குஎட்டாதவை என தள்ளிவிடப்பட்ட பலசந்தேகங்கள் பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்ட நிஜங்கள் ஆகும்போது நான் அப்பவே நினைச்சேன்எனகூட்டம்கிளம்பும்
==========18 (போக்கிரி) ராஜா போல் வாழலாம் என நினைப்பவர்கள் வாழ்வில் சறுக்குவதும், பிச்சைக்காரன் என எள்ளல் செய்யப்பட்டவர்கள் வாழ்வில் உயர்வதும் விதி
===============
19 இளைஞர்க்ளின் தலைவராக ஒரு இளைஞரே இருக்கனும்னு அவசியம் இல்லை.அனுபவம் பெற்ற வயதானவரே வழி நடத்திச்செல்ல தகுதியான ஆள்==========


20 ஒரு நடிகர் 10% வாக்கு வங்கி வெச்சிருந்தா ஒரு தேர்தலில் 500 கோடி சம்பாதிக்க முடியும் எனில் அவர் 25 படங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் அது


=============

0 comments: