Thursday, March 10, 2016

ராம் நாடு என்பது அயோத்தி தானே? அது எப்டி தமிழ் நாட்டில் வரும்?

1  ஜட்ஜ் = ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திப்பேசுனியா?

நித்தியானந்தா = பொய் யுவர் ஆனர், நான் ஆம்பளைங்க கிட்டே/ஆண் பற்றி  பேசுவதே இல்லை=============

2 என் கிளாஸ்மேட்க்கு 65 வயசு ஆகுது, அப்போ என் வயசு  எவ்ளோவ் இருக்கும்?

குமாரசாமி = மேடம், அனேகமா 32 1 /2  வயசு இருக்கும்


==============


3  ராமானுஜத்துக்கும், குமாரசாமிக்கும் என்ன வித்தியாசம்?

 அவர்  கணித  மேதை. இவர் சாதா கூட்டல் கணக்கே வராத பேதை================


4  நம்ம நாட்டுல மாங்கா மடையர்கள்  எத்தனை பேரு இருப்பாங்க?

சுமாரா 3 லட்சம் பேர், ஏன் தலைவரே!

 வித்தியாசமான  மா” நாடு”  1  நடத்தலாம்னு இருக்கேன்


===============


5  மிஸ்! உங்க செருப்பு சைஸ் 8 இன்ச் தானே?

 எதுக்குக்கேட்கறே?

 அளவில்லாம புகழ்பவன் ஆபத்தானவன்னீங்களே?அதான் அளவு சொன்னேன்


==============

6  டியர்!  நான் கிங்கா இருக்கனுமா? கிங்க் மேக்கரா  இருக்கனுமா?

 கிச்சன் ல காபி மேக்கரா இருங்க போதும்


================

7  தலைவரே!  நம்ம கட்சில அமலா பாலை  சேர்க்கனுமா? எதுக்கு?

  ஆளுங்கட்சி ஆட்சிக்கு  பால் ஊற்றத்தான்


================


8  பதவிக்காக யாரும் அடிச்சுக்காதீங்க
தலைவரே! அப்போ உங்க பதவியை எங்களுக்கு , எங்கள்ல ஒருவருக்கு விட்டுக்கொடுக்க தயாரா?


=============

9  சார், இந்த கம்பெனி ஷூ எவ்ளோவ்?

1000 ரூபாய்ங்க


 500 ரூபாய்க்கு தருவீங்களா?

1 ஷூ மட்டும் தர்றேன், வல்து வேணுமா? இடதா?

==============

10  தலைவரே! எதுக்காக கட்சியை 500 கோடிக்கு  வித்துட்டீங்க?

 அடகு வைக்க மாட்டேன்னுதானே  சொன்னேன், விற்க மாட்டேன்னு சொல்லலையே?


=================


11  ஏய்  மிஸ்டர்!  நீ சாதாரண  ஆள் தானே?

 ஆமா மிஸ், எப்பவும் ஆண்கள் சாதா ரண ஆள் தான் , பொண்ணுங்க தான் ஸ்பெஷல் ரண  ஆள். காயப்படுத்துவீங்க


===============

12  திருப்பி இங்கவே வந்துட்டேன்.. உங்க வீட்டு  பொண்ணா நினைச்சு மன்னிச்சு ஃபாலோ பன்னிடுங்க

சாரி மிஸ், எதிர் வீட்டு ப்பெண் எனில் ஃபாலோவலாம். எங்க வீட்டுப்பெண் எனில் தங்கச்சி  முறை ஆகும் இல்ல


==============

13 விபத்து நடந்த இடத்தில் காயம் பட்டவங்களுக்கு ஆறுதல் சொன்னது குத்தமாய்யா?
என்னாச்சு தலைவா? விபத்தை ஏற்படுத்துனதே நான் தான்னு பரப்பிட்டாக


===========

14 ஜட்ஜ் = கிரானைட் ஊழல் செய்யலை என்பதற்கு ஆதாரம் இருக்கா?்கைதி = எனக்கு மாலைக்கண் நோய் இருக்கு.நான் எப்டி கிரா"நைட்"ல ஊழல் பண்ண முடியும்?

==============

15 மிஸ்.தயவு செஞ்சு இன்னைக்கு மட்டும் என்னை இங்க்லீஷ்ல திட்டாதீங்க
ஏன்? இன்னைக்கு தாய் மொழி தினம் தமிழ் ல யே திட்டுங்க.ஐ லைக் இட்


===============

16 தலைவரே!! கிங்கா இருப்பீங்களா? கிங்க் மேக்கரா இருப்பீங்களா?
அது எப்டியோ? ஆனா யாருக்கும் ஜிங் சக் க்கா இருக்க மாட்டேன்

=============

17 நான் நடத்துன பாடத்தை எல்லாம் டெய்லி படிச்சுடறீங்க்ளா?
டீச்சர்.மறக்காம bookmark பண்ணி வைக்கிறேன்.. படிக்கணும்" இனி தான்


================

18 மிஸ்! உருளைக்கிழங்கு சாதம் நீங்களே செஞ்சீங்களா?

யா

 எப்டி?

அம்மா வெச்சிருந்த உருளைக்கிழங்கு பொடிமாசை அப்பா வெச்ச சாதத்தில் பிசைஞ்சேன்

==============


19  அம்மா, தாயே ! ஒரு தொகுதியாவது பிச்சை போடுங்கம்மா


 போப்பா போப்பா  வேற இடம் பாரு


 அட போம்மா!உங்களுக்கு  ஒரு கட்சி, எனக்கு ஏகப்பட்ட கட்சி


==============


20 ராம் நாடு என்பது அயோத்தி தானே? அது எப்டி தமிழ் நாட்டில் வரும்?


 அய்யோ ராமா, தலைவரே! ராமநாத புரம் தான் ராம்நாடு சுருக்கமா===================

0 comments: