Sunday, March 06, 2016

ரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்?

டாக்டர்.டெய்லி லேப்டாப்பை மடில வெச்சு ஒர்க் பண்றேன்.எனக்கு ஏதாவது ஆகுமா?


எதுவுமே ஆகாது.சாரி


===========

2 மாப்ளை மிருதுவான டைப்னீங்க.பொண்ணோட கையைப்பிடிச்சு கடிச்சு வெச்ட்டாராமே?


நீங்க.சரியாப்புரிஞ்சுக்கலை.மிருதன் டைப்ங்க அவரு=============

3 திராவிடக்கட்சிகளுடன் கூட்டு கிடையாதுனு பரவலா பேச்சு வருதே தலைவரே?நிஜமா?


நான் தான்யா பரப்பி விட்டேன்.அப்போ தான் பேரம் படியும்..500 கோடி, துணை முதல்வர் போஸ்ட்


============
4 ஃப்ரீடம் இண்டியா Rs.251 செல் பதிவு செய்தீரா?"

சதுரங்க வேட்டை படம் பாத்துட்டேன் சார்

============

5 நம் அரசியல் முறையில் என்ன மாற்றம் வேண்டும்?

ஆண்டாண்டு காலமா தமிழன் ரெண்டே ஆப்சன்ல மாத்தி மாத்தி குத்திட்டு இருக்கான்,அது மாறனும்


================

6  ஜாதிக்கட்சிகளை  ஏன் ஆதரிக்கக்கூடாது?ன்னு சொல்றீங்க?

ஊழல் கட்சி, ஆணவக்கட்சி இந்த இரண்டு கட்சிகளை விட ஆபத்தானது ஜாதிக்கட்சி


================


7 சம்சாரம்  கோபத்துல கடுகு மாதிரி பொரியும்போது என்ன செய்யனும்?

கொதி எண்ணெயில் கடுகு பொரியும்போது அடுப்பைவிட்டு விலகி இருப்பதுபோல்  அப்போதைக்கு வீட்டை விட்டு கிளம்பிடனும்


================

8  ஆஃபீஸ்க்கு டெய்லிலேட்டா வர்றியே? உன் வீட்டுக்கு உள்ளேயே ஆஃபீஸ் வெச்சாலாவது கரெக்ட்டைம்க்கு வருவியா?

 2 வீடு இருக்கு, எந்த வீட்டுக்கு உள்ளே==============


9 மாப்ளை, என் பொண்ணு கொஞ்சம் மக்குப்பொண்ணு, நீங்க தான் அட்ஜஸ் பண்ணிக்கனும்

மாமா, இப்போதைக்கு கூட்டணில சேர்த்துக்கறேன்===============


10  தப்பே பண்ணலை, ஆனா தண்டனை அனுபவிக்கறேன்

 எப்டி?

லவ் பண்றப்ப காதலி கூட எந்த தப்பும் பண்ணலை, ஆனாலும் அவளையே கட்டி வெச்ட்டாங்க


====================

11 யாரையாவது அறையலாம் போல இருக்கு

 மிஸ்!உங்க  ஹாஸ்டல் ரூம் மேட் பக்கத்துல தானே இருக்கு? அறை த்தோழிக்கு அறை கொடுங்க, மேட்சுக்கு மேட்ச்


===================

12  மாங்குமாங்கென தேவையில்லாத வேலைகளைச் செஞ்சிட்டு இருக்கேன்

 டியர், மாங்கா சாதம் கழறிக்கொடு, மாங்கு மாங்குன்னு சாப்பிடுவாங்க எல்லாரும்================

13  என்னை நான் விரும்பாத பொழுது.  .  .
நீ எப்டி விரும்புகிறாய் என்னை?!?

டியர், உனக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தி, எண்ணெய் சேர்த்தக்கூடாது,நான் அப்டியா?=================


14 தலைவரே! லிஸ்ட்ல நீங்க தான் டாப்ல இருக்கீங்க! வாழ்த்துகள்


நன்றி! என்ன லிஸ்ட்?
சட்டசபைல கேள்வி கேட்காதோர் பட்டியலில் நீங்க முதல்இடம்

=============


15 தலைவரே! நம்ம கட்சிக்கு  நக்மா,குஷ்பூவால ஆதாயம் இருக்குமா?

“மேட்டுக்குடி” மக்கள் வாக்கு நக்மாவால, பழங்குடி மக்கள் வாக்கு குஷ்பூவால கிடைக்கும்


==================


16  மிஸ்!  உங்க வீட்டு ஏரியாவை விட்டு ஒரு அடி கூட ஸ்கிப் பண்ண முடியல

  ஏன்?

 மொட்டை மாடில நின்னு ஸ்கிப்(பிங்க்) பண்ணிட்டு இருக்கீங்களே?


================

17 பஸ்ல ஒரு லேடி என் தோள் மீது தூங்கி  விழும்போது அன்னை தெரேசாவா மாறிடறேன்


மிஸ்! நல்லா செக் பண்ணிப்பாருங்க,..அது பையனாத்தான் இருக்கும், மாறு வேசத்தில் வந்திருப்பான் உங்களை  கேத்ரீன்தெரேசாவா திங்க் பண்ணிட்டு இருக்கப்போறான்


================

18 ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.

எப்டி?புரியலையே?
மிருகம் + மனிதன் = மிருதன்

==============

19 டாக்டர்.காய்ச்சல் 100 டிகிரி தாண்டிடுச்சு.குறைக்க எதுனா வழி இருக்கா?

சாரு வின் ஜீரோ டிகிரி படிச்சுப்பாருங்க.

=============


20 வாழ்க்கை போர் அடிக்குது.

ஓஹோ.நீ சிக்சர் அடிச்சுப்பாரு

===================0 comments: