Thursday, March 17, 2016

யோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லுய்யா நம்ம புதுப்படத்துக்கு

1  நான் மற்ற கட்சிகள் போல் அடுத்தவர்கள் மீது குறை கூற மாட்டேன்


தலைவரே! இப்போ நீங்க கூறுனதும் ஒரு குறை தானே?


===============


2 சக்சஸ்! நானும் தோசை சுட்டுப்பழகிட்டேன்


ஏம்மா மணிமேகலை! தோசை சரியா வேகலை, ஏம்மா இப்டி ரகளை?


===============3 இன்ஸ்பெக்டர்! என் படத்தை கிண்டல் பண்றவங்களை அரெஸ்ட் பண்ணனும்

உங்க படத்தைத்தான் ஊரே கூடி நக்கல் அடிக்குதே, என்ன பண்ண?

==============

4  சினிமா விமர்சகர்கள் எல்லாரையும் வெள்ளிக்கிழமை காலைல அரெஸ்ட் பண்றாங்களே? ஏன்?


எதுனா நெகடிவ்வா உளறி கூட்டம் வராம பண்ணிடறாங்களாம்


================


5 தலைவரே!பிஏபிஎல் படிச்ச நீங்க ஏன் அரசியலுக்கு வந்தீங்க?

 கிரிமினல்கள் வக்கீல் ஆகக்கூடாது-னு சட்டம் வந்துடுச்சாமே?


================

6  கள்ளுக்குள் ஈரம் உண்டுன்னு எப்படி சொல்றீங்க?

 கள் ஒரு திரவப்பொருள் தானே?ஈரம் இல்லாம எப்டி இருக்கும்?


==============


7 தலைவரே! பிரச்சார மேடைல எதுக்கு சிரசாசனம் பண்றீங்க?


தலைகீழா நின்னாவது ஆட்சியைப்பிடிச்சுடுவோம்னு சிம்பாலிக்கா சொல்றோம்


===============

8  கட்சியின் ஸ்டார் பேச்சாளர் இப்போது பேசுவார்

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி, அல்டிமேட் ஸ்டார் அஜித், சுப்ரீம் ஸ்டார் சரத்,பவர் ஸ்டார் சீனி


===============

9  டியர், நான் ஒரு சின்ன வீட்டு வெச்சுக்கலாம்னு இருக்கேன், அட்ஜஸ் பண்ணிக்க

 சாரி, எனக்கு ச”கீப்”புத்தன்மை கிடையாது


================

10  தலைவரே! மேடைல கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு ஏன் நாமம் போட்டு விடறீங்க?

 நமக்கு நாமே நாமம் திட்டம், யாருக்கும் சீட் கிடையாது

==============


11  தலைவரே! இந்த தேர்தல்ல எப்பாடுபட்டாவது 1000 வாக்கு வாங்கிடுங்க

 எதுக்கு?

 1000 வாக்கு வாங்கிய அபூர்வ சிகாமணி-னு பட்டப்பேர் வெச்சுக்கலாம்


===============

12  தலைவரே! இந்தத்தேர்தலில் புதுக்கூட்டணி மாறப்போறீங்களா?

ஆமா, எப்டி தெரியும்?

 மாற்றம், முன்னேற்றம்னு பேனர் வெச்சிருக்கீங்களே?


===============


13  தலைவரே! பகுத்தறிவுப்பகலவரான நீங்க எதுக்கு 9 கட்சி  கூட கூட்டணி அமைக்கறீங்க?

2016=2+0+1+6 = 9 வருது கூட்டுத்தொகை, அதான் 9 கட்சிக்கூட்டணி


==============


14 தலைவரே! உங்க வாட்ச் வேல்யூ 75 லட்சம் இல்லை, 75,000 தான்னு தானே சொன்னீங்க?

 ஆமா,

 அப்போ இந்தாங்க 75,001 ரூபா, அதை குடுங்க பார்ப்போம்


==============


15 மேடம், நீங்க கதை எழுதும்போது ஒவ்வொரு வரிக்கும்  ஸ்கெட்ச் ல அண்டர்லைன் பண்றீங்களே எதுக்கு?


அலங்காரமான எழுத்துக்கு சொந்தக்காரின்னு பேர் எடுக்க


=============


16   தலைவரே! என் குடும்பத்துல யாராவது தேர்தல்ல நின்னா  சாட்டையால் அடிங்கன்னு சொன்னீங்களே?

யாரை அடிக்கனும்னு சொல்லவே இல்லையே, எப்பூடி?

===============


17 மிஸ்! உங்க கிட்டே மட்டும் ஒரு ரகசியம் சொல்லறேன், யார்கிட்டயும் சொல்லிடமாட்டீங்களே?

பிராமிஸ், சொல்ல மாட்டேன், சொல்லுங்க

 ஐ லவ் யூ

ஆ!


=================


18 டைரக்டர் சார்! உங்க படம் ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு

 சரி சரி, ஒரிஜினல் டைட்டிலை வெளில யார் கிட்டேயும் சொல்லிடாத


============

19   தலைவரே! பிச்சைக்கார்களை எப்பவும் கேவலமா பேசக்கூடாதுன்னு ஏன் அறிக்கை விடறீங்க?

 தேர்தல் வந்துட்டா நாமும் ஓட்டுப்பிச்சை கேட்கறோமில்ல?


================


20 யோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லுய்யா நம்ம புதுப்படத்துக்கு

 ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயின்  குளிக்குது, எப்டி? செம சீன் இல்ல?


=================

0 comments: