Tuesday, March 22, 2016

கேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........

1 பாகிஸ்தான்ட்ட கிரிக்கெட்டில்  போராடி ஜெயிப்பதும், காதலியிடம் விவாதத்தில் வேணும்னே தோற்பதும் அலாதி மகிழ்ச்சி

============

2 இன்னைக்கு சானியா மிர்சா வீட்டில் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடனும், வெளியே துக்கமா ஆறுதல் சொல்வது போலும்  லேடி கலைஞர் ஆகிடுவாரில்ல?


==============


3 படிப்பறிவு அற்றவர்கள் ஒரு கட்சிக்கு அடிமையாக இருப்பதை மன்னிக்கலாம்,ஆனால் எல்லாம் கற்றுணர்ந்தவர்கள் ஒரு ஊழல் கட்சிக்கு பல்லக்கு தூக்குவதை?


==============

4  திமுக/அதிமுக  கட்சிக்கு பல்லக்கு தூக்குபவர்கள் விவாதங்களில் தங்கள் கட்சித்தலைவர் அப்பழுக்கு அற்றவர், நேர்மையானவர் என சொல்வதே இல்லை


===============

5 டேய், டி வி பார்க்காத , கெட்டுப்போய்டுவே


 போம்மா,நெட்ல கெடாமயா இருக்கான் தமிழன்?==============

6 நடுநிலையாளர்கள் எப்போதும் தங்களை யாருக்கும் நிரூபிக்க அவசியம் இல்லை. கட்சி சார்பு ஆட்கள் தான் கொண்டையை மறைக்க,
 படாத பாடுபடனும்


================


7 கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் பதவிக்காக தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்க வீடு தேடி வரும் எல்லா சுயநலவாதிகளும்  ஒழிக!


==============


8  ஒரு திருடன் தன் மகன் திருடன் ஆவதை விரும்பாமல் படிக்க வைக்கிறான். ஆனால் அரசியல்வாதி தன்மகனை  தன்னைப்போலவே கொள்ளைஅடிக்கும் தலைவன் ஆக்குகிறான்


================


9 என் புது ஹேண்டில் நேம் இளந்தளிர் .எப்படி இருக்கு?

அழகுக்கொழுந்துங்க நீங்க!


================

10 நெட் தமிழன் மிருதுளாவை செல்லமா மாதுளா-ங்கறான், அப்போ ஷியாமளாவை சீதாப்பழம்னு சொல்வானோ?


====================

11 நான் சைக்கிள் ஓட்டக்கத்துக்கும்போது ரோட்ல வர்றவன், போறவன் எல்லாம்அட்வைஸ்பண்றான்


மிஸ்,லொக்கேசனை மட்டும் சொல்லுங்க, உங்க 744 ஃபாலோயர்சும் ஆஜர்  ஆகிடுவானுங்க


================


12 என் ஆளைப்பார்க்கப்போறேன்னு ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸ்  போட்டிருக்கு, சன் டே நைட் 9 மணிக்கு என்ன சொல்லிட்டு வீட்ட விட்டுப்போகும்?


==================

13 உங்கள் கோபத்தை யாராவது தூண்ட முயற்சிக்கும்போது வழக்கத்தை விட அதீத அமைதி காட்டுவதே எதிரிக்கு சிறந்த தோல்வியைத்தரும்


================

14 ஒரு திருடனைக்குறை சொல்லும்போது ஒருவருக்குகோபம் வந்தால் அவர் திருடனாய் இருப்பார். ஒரு ஜாதிக்கட்சியை குறைசொல்லும்போது கோபித்தால் ஜாதி வெறியர்  ஆக இருப்பார்

===============

15  ஒரு ஊழல்வாதியை விட, ஒரு ஆணவம் மிக்கவரை விட  ஆபத்தானவர் ஒரு  ஜாதி வெறியர். ஜாதிக்கட்சிகளை அறவே தவிர்ப்போம்


==================

16 ஜாதி வெறியருக்கு பெரிய பதவி வந்தால் அந்த குறிப்பிட்ட ஜாதி மட்டுமே முன்னேறும்.இது சமூக நலனுக்கு ஆபத்து


=================

17 ஒரு சாதாரண ஜாதிக்கட்சி நபரால் தரக்குறைவாக பேசமுடிகிறது எனில் பணபலம், அதிகாரபலம் வந்து விட்டால் ஒரு ஜாதிக்கட்சித்தலைவர் எந்த அளவு ஆபத்து?


================

18 ஜாதிக்கட்சி வீட்டுக்கு நாட்டுக்கு கேடு தரும்
ஜாதிக்கட்சியை அறவே தவிர்ப்போம்
சமூக நலம் காப்போம்


================

19 வராத கடனை வசூலிக்க தொடர்ச்சியான ,சலிப்பில்லாத பாலோ அப் இருந்தால் போதும்.வன் முறை ,தகாத சொல் பிரயோகம் தேவை இல்லை


===============

20 கேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா ஆஸ்கார் அவார்டு வழங்கறதே ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான்னு சொல்லிடுவாங்க


===============0 comments: