Tuesday, March 08, 2016

ரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்

1  சார், லைக்கா  நிறுவனத்தை எதிர்த்த 24  தமிழ் அமைப்புகள் இப்போ எங்கே?

இப்போ வர மாட்டாங்க, ரிலீஸ் அன்னைக்கு முந்தின நாள் கோர்ட்ல கேஸ் போடுவாங்


===============

2 பொண்ணுங்க  சேலைகட்டும்போதுஅழகாஇருக்காங்களா? சுடிதார் போடும்போது அழகா இருப்பாங்களா?

சாரி மிஸ், பொண்ணுங்க டிரஸ்சிங்ரூம் எட்டிப்பார்க்கமாட்டேன்

==================

3 டியர், பாம்பு படம் எடுக்கறதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும்

 எங்கேம்மா, இப்போ மனுசன் எடுக்கும் படமே சரியா ஓட மாட்டேங்குது===============


4 டியர், எனக்காக யார் ஒரு சொட்டு கண்ணீராவது விடறாங்களோ அவங்க தான் என் லவ்வர்

 அட பேக்கு, யார் விட்டாலும் 2 சொட்டு கண்ணீர்தான் மினிமம் வரும்


=============

5  டியர், 2016 மே  மாசத்தோட நம்ம காதல் முடிவுக்கு வருதா? ஏன்?

ஆட்சி தான் 5 வருசத்துக்கு ஒரு டைம் மாறனுமா? காதல் மாறக்கூடாதா?


==================6 மிஸ்! ஒரு மனிதன் வாழ்க்கைக்குத்தேவையான  எல்லா விஷயங்களும் உங்க படைப்புகளில் வெளிப்படுது

 நிஜமாவா?

 யா, இப்போ என் வாழ்க்கைக்கு நீங்க தேவை


===============


7  தொட்டது தொண்ணூறுக்கும் சந்தேகப்பட்டா எப்படிதாய்யா லவ் பண்றது?


லவ் பண்ற ஒரு பெண்ணை மட்டும்  தொடவும், மீதி 89 பேரை டாட்டா காட்டி அனுப்பிடவும்


=================
8  தலைவரே! 5 முறை முதல்வரா  இருந்தப்போ  செய்யாததை எல்லாம் இப்போ ஜெயிச்சா செய்வேன்னா எப்டி நம்பறது?

 ஆறு மனமே ஆறு, ஆறாவது தடவை ஜெயிச்சா பாரு


==================


9  டைரக்டர் சார், இண்ட்டர்வல்  ட்விஸ்ட்ல என்னை நகம் கடிக்க வெச்சுட்டீங்க

நெய்ல் கட்டர்ல வாரம் ஒரு டைம்  கட் பண்ணிட்டா பிராப்ளம் இனி வராதில்ல?


===============


10 கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு எழுதுனா எழுத்தில் உத்வேகம் பிறக்கும்

 அதெப்டிங்க? ஆக்சிலரேட்டர் எடுத்தாத்தானே வேகம்?


==================

11 லாரிக்கு தூய தமிழ் சொல் சரக்கு உந்து

 டீச்சர், அப்போ சைடு டிஷ் உந்து  எதுக்கு வரும்?


==================


12 டாக்டர், கால் 2 ம் வலிக்குது
மேடம், புருசனை கால் அமுத்தி விடச்சொல்றதுதானே? இதுக்குப்போய் க்ளினிக் வருவாங்களா?============


13 மிஸ்! பொண்ணுங்க பெரும்பாலும் கார்த்திக்-கை காதலிக்கறாங்களே, சினிமா ல அது ஏன்?

”கார்”த்திக் கிட்டே கார் இருப்பதால் காரிகைகள்  மனம் மயங்கி


================


14 டியர், நீங்க போட்டிருக்கும் செண்ட் ஸ்மெல் எனக்குப்பிடிக்கவே இல்லை.

இந்த வாசனை தானே? மாத்திட்டா போச்சு, ஜி கே வாசனையையே மாத்திடறாங்க


=================


15  தலைவரே! வெள்ளம் பாதித்த தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர மாட்டீங்களா?

 அஸ்கு புஸ்கு, நான் என்ன தியாகியா?தனக்குப்போகத்தான் தான தர்மம்


================


16  யோவ் , பி ஏ, நமக்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லாத தொகுதி லிஸ்ட் எடு

எதுக்கு தலைவரே?

 கூட்டணிக்கட்சிக்கு பிச்சை போட்ருவோம்


====================

17  தலைவரே! ரத யாத்திரைக்கு கூட்டம் வர்லைன்னா என்ன செய்ய?

 ரதி மாதிரி  கேரளா ஃபிகர்ஸ் 10 பேரை ரதத்தில் ஏத்துய்யா


=================18  மேடம், எலக்சன் டைம் என்பதால் எப்படியும் நீங்க இறங்கி வந்துதான் ஆகனும்னு நினைக்கறாங்க

நான் இரங்கி வருவேன், ஆனா இறங்கி வர மாட்டேன்


=================19  தலைவரே! நமக்கு ஜெயிக்க வாய்ப்பில்லாத ஆனா கூட்டணிக்கட்சி ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதியை அவங்களுக்கு கொடுத்திடலாமா?


அய்யய்யோ வேணாம், நமக்கே அது=============

20  தலைவரே! நம்ம கூட கூட்டணி வைக்க 500 கோடி கேட்கறாரு, கொடுத்துத்தொலைச்சிடலாமா?

 வேணாம், அதை சம்பாதிக்க  ஒரு வருசம் ஊழல் பண்ணனும்


====================

0 comments: